Word |
English & Tamil Meaning |
|---|---|
| பிடர் | piṭar n. 1. Nape of the neck; பின் கழுத்து. யானை யிரும்பிடர்த் தலையிருந்து (புறநா. 3). 2. See பிடார், 1. ஈசுவரத்வப் பிடராலன்றியே (ஈடு, 7, 4, 4). |
| பிடர்த்தலை | piṭar-t-talai n. <> பிடர்+. [K. pedadale.] See பிடர், 1. (பிங்.) . |
| பிடரி | piṭari n. <> id. [M. piṭari] See பிடர், 1. (சது.) . |
| பிடரிக்காம்பு | piṭari-k-kāmpu n. <> பிடரி+. A shrub; பூடுவகை. (மலை.) |
| பிடரிசன்னி | piṭari-caṉṉi n. <> id.+. Wryneck, Torticollis; சன்னிவகை. (M. L.) |
| பிடரிசிவு | piṭar-icivu n. <> பிடர்+. Neuralgia; நோய்வகை. (M. L.) |
| பிடல் | piṭal n. cf. படல். Door; கதவு. உருள்பிட லொற்றி (பெருங். உஞ்சைக். 49, 3). |
| பிடவம் | piṭavam n. 1. See பிடவு. நுரையெனப்பொருவுவ பிடவம் (கம்பரா. கார்கால. 47) 2. Branch of a tree; |
| பிடவு | piṭavu n. See பிடா. கடத்திடைப்பிடவின் (பதிற்றுப். 66, 17). |
| பிடவை | piṭavai n. <> புடைவை. Saree; சீலை. போர்த்த பிடவையுமாய் (பணவிடு. 311). |
| பிடா | piṭā n. Bedaly emetic-nut. See குட்டிப்பிடவம். (தொல். எழுத். 229). . |
| பிடாகை | piṭākai n. cf. paṭāka. Suburban hamlet; உட்கிடையூர். எங்களூர்க்குப் பிடாகையாகப் பெற்றுடைய ஊர்களில் (S. I. I. iii, 25). |
| பிடாந்திரம் | piṭāntiram n. Gross falsehood. See படாந்தரம். (யாழ்.அக.) |
| பிடாம் | piṭām n. <> படாம். Cloth for wear, mantle; போர்வை. பிடாத்தை விழவிட்டு வடிவழகைக் காட்டியாயிற்று (ஈடு, 4, 9, 4). |
| பிடார் | piṭār n. cf. bhaṭṭāra. 1. Pride, arrogance; கருவம். கங்கையை ஜடைமேலே அடக்கினே னென்னும் பிடாரைக்கொண்டு (திவ். திருமாலை, 44, வ்யா. 142). 2. Greatness; |
| பிடாரச்சொல் | piṭāra-c-col n. <> பிடாரன்+. 1. Medical term; வைத்திய பரிபாஷை. 2. Newly-coined word; |
| பிடாரம் | piṭāram n. prob. viṣa-hara. Medical dictionary; வைத்திய நிகண்டு. (யாழ். அக.) |
| பிடாரவைத்தியன் | piṭāra-vaittiyaṉ n. <> பிடாரன்+. Snake doctor, one who cures snake-bites; விஷவைத்தியன். |
| பிடாரன் | pitāraṉ n. Prob. viṣa-hara. [M. piṭāran.] 1. Snake-catcher; பாம்புபிடிப்போன். 2. Doctor; 3. Man of the Kuṟava caste; 4. Musician; |
| பிடாரி | piṭāri n. cf. bhaṭṭārikā. [M. pidāri.] A village goddess; ஒரு கிராமதேவதை. காளிபிடாரி (திருப்பு. 1184). |
| பிடாரிச்சி | piṭāricci n. Fem. of பிடாரன். Woman of the Kuṟava caste; குறத்தி. (யாழ். அக.) |
| பிடாரிவெளி | piṭāri-veḷi n. <> பிடாரி+. Open space; கொல்லைவெளி. Loc. |
| பிடாலவணம் | piṭā-lavaṇam n. <> vida+. Bitnoben, a kind of salt, one of Paca-lava-ṇam, q.v.; பஞ்சலவணத்தொன்று. (பதார்த்த. 1102.) |
| பிடி 1 - த்தல் | piṭi- 11. v. tr. [K. pidi, M piṭi.] 1. To catch, grasp, seize, clutch; கைப்பற்றுதல். அஞ்செழுத்தின் புணைபிடித்துக் கிடக்கின்றேனை (திருவாச. 5, 27). 2. To secure; 3. To capture, ensnare, entrap, catch; to usurp; to prey on; 4. To tie, fasten; 5. To take refuge in, depend on, cling to; 6. To obtain, take possession; 7. To contain, hold; 8. to assume, as a form; 9. To bear, carry, support; 10. To keep back, deduct, detain, withhold; 11. To take a photograph; 12. To expound, as by gesture, song, etc.; 13. To take on, as a colour; 14. To grasp, understand, comprehend; 15. To buy, purchase wholesale, as at a market; 16. To join in a continued row or series; to nail on; to line with; to face a garment; 17. To hold fast, adhere to; 18. To undertake; 19. To geld; 20. To massage, rub; 21. See பிடித்துக்கொள்-. 22. To make a handful; 1. To stick, adhere, cling; 2. To be agreeable, attractive, pleasing to the senses or mind; 3. To be suitable adapted, conformable; 4. To be required for expense; 5. To take place, occur; 6. To find room, go in; |
