Word |
English & Tamil Meaning |
|---|---|
| பிடிசுட்டுப்படைத்தல் | piṭi-cuṭṭu-p-paṭaittal n. <> பிடி+சுடு-+. The ceremony of offering cakes to the household deity; வீட்டுத் தெய்வத்திற்குப் பிடிப்பணியாரஞ்சுட்டு நிவேதிக்குஞ் சடங்கு. (W.) |
| பிடிசுவர் | piṭi-cuvar n. <> பிடி-+. Parapet wall; கைப்பிடிச்சுவர். Loc. |
| பிடிசுற்று - தல் | piṭi-cuṟṟu- v. intr. <> பிடி+. To wave coloured boiled rice around the bride and bride-groom for averting the evil eye; சித்திரான்னங்களைச் சுற்றியெறிந்து மணமக்கட்குத் திருஷ்டி கழித்தல். |
| பிடிசூழ்தல் | piṭi-cūḻtal n. <> id.+. The ceremony of indicating the boundary of a giftland by walking round it with a female elephant; தானங்கொடுக்கும் நிலத்தின் எல்லையைக்காட்டப் பெண்யானையோடு செல்லுஞ் சடங்கு. (S. I. I. iii, 305.) |
| பிடிசெம்பு | piṭi-cempu n. <> id.+. A kind of metallic vessel with a handle; கைப்பிடி யோடுகூடிய செப்புப்பத்திரம். பிடிசெம்பிலே வெந்நீர். (விறலிவிடு.) |
| பிடித்தபிடி | piṭitta-piṭi n. <> பிடி-+பிடி. 1. Grasp, hold; கையினார் கொண்ட பிடி. 2. Opinion firmly held; 3. Obstinacy, stubbornness; |
| பிடித்தம் | piṭittam n. <> பிடி-. [K. hidita.] 1. Withholding a part of payment, deduction; கழிவு. சம்பளப் பிடித்தம். 2. Frugality, thrift; 3. Amicableness; agreement; 4. Liking, relish; |
| பிடித்தவேர்ப்பங்கு | piṭitta-v-ēr-p-paṅku n. <> id.+ஏர்+. Share of the produce given to a farm-labourer who contributes labour only, the owner supplying agricultural implements, plough-cattle and seeds; பண்ணைவேலை யாளுக்குரிய மாசூற் பங்கு. (C. G.) |
| பிடித்தாடி | piṭittāṭi n. <> id.+ ஆடு-. Cowry shell; பலகறை. பிடித்தாடி யன்ன பிறழ்பற்பே யார (பு. வெ. 8, 6). |
| பிடித்து | piṭittu <> பிடி. n. Handful; கைப்பிடிப்பொருள். பிடித்தெருவும் வேண்டாது (குறள், 1037).-adv. From, beginning with; |
| பிடித்துக்கொள்(ளு) - தல் | piṭittu-k-koḷ- v. tr. <> பிடி-+. To contract, as a nerve or muscle by rheumatism or cramp; சுளுக்குதல். colloq. |
| பிடித்துணி | piṭi-t-tuṇi n. <> படி+. See பிடிச்சீலை. . |
| பிடித்துராவி | piṭitturāvi n. <> பிடி-+. See பிடிச்சுராவி. (C. G.) . |
| பிடித்தைலம் | piṭi-t-tailam n. <> பிடி+. Liniment; பிடிப்புநோவுள்ளவிடத்துச் சருமத்தின் மீது தடவுந் தைலம். (பைஷஜ. 3.) |
| பிடிதண்டம் | piṭi-taṇṭam n. <> பிடி-+. Unjust seizure of an innocent person; அகாரணமாக ஒருவனைப் பிடித்துத் துன்புறுத்துகை. (W.) |
| பிடிதம் | piṭitam n. Perh. பிடி. Alms; பிச்சை. (திவா.) |
| பிடிதுணி | piṭi-tuni n. <> பிடி-+. See பிடிச்சீலை. . |
| பிடிநாள் | piṭi-nāḷ n. <> id.+. Auspicious day; நல்ல தினம். பிடிநாள் பண்ணவிழ்தம். (இராசவைத். 71). |
| பிடிநெல்லு | piṭi-nellu n. <> பிடி+. Handful of paddy, taken by a person from each measure as his perquisite for measuring; அளக்கும்போது அளவு ஒன்றுக்கு ஒரு பிடியளவாக அளப்போர் எடுக்கும் உரிமைநெல். (W.) |
| பிடிப்பி - த்தல் | piṭippi- 11. v. tr. Caus. of பிடி-. To geld; விதையடித்தல். பிடிப்பித்த மாடு. (W.) |
| பிடிப்பிச்சை | piṭi-p-piccai n. <> பிடி+. Handful of rice given as alms; பிடியளவிடும் பிச்சை. (W.) |
| பிடிப்பிட்டு | piṭi-p-piṭṭu n. <> id.+. A kind of confectionery; சிற்றுண்டிவகை. (W.) |
| பிடிப்பு | piṭippu n. <> பிடி-. [K. pidipu M. piṭippu.] 1. Grasping, holding, seizure, catching; பற்றுகை. 2. Adhesion, sticking, glutinousness, cohesiveness; 3 Rheumatism, gonorrhoeal rheumatism, muscular cramps, contraction of nerves, Myalgia; 4. See பிடித்தம். 5. Idea; 6 Money amassed; accumulation; encroachment; 7. Rigidness, pertinacity; 8. Bond; tie; 9. Handle; 10. Favour; 11. Support; |
| பிடிபடு - தல் | piṭi-paṭu- v. intr. <> id.+. 1. To be caught, taken, seized; படிக்கப்படுதல். 2. To be grasped, understood, comprehended; 3. To attain, get; 4. To suit, to be suitable, to gree with; |
