Word |
English & Tamil Meaning |
|---|---|
| பிணங்கு - தல் | piṇaṅku- 5 v. intr. [K. heṇagu.] 1. To be at variance; மாறுபடுதல். பிணங்கோமெவரொடும் (திருநூற். 66). 2. To be in the sulks; 3. To be close dense; 4. To be linked together, intertwined; |
| பிணஞ்சுடுகாளவாய் | piṇa-cuṭu-kāḷavāy n. <> பிணம்+சுடு-+. Incinerator; பிரேதத்தை எரித்தற்குச் சுண்ணாம்புக்காளவாய்போற்கட்டப்பட்ட கட்டிடம். Mod. |
| பிணத்தூக்கம் | piṇa-t-tūkkam n. <> id.+. Dead sleep; கடுநித்திரை. colloq. |
| பிணந்தின்னி | piṇan-tiṉṉi n. <> id.+. 1. One who feeds on corpses; பிணத்தைத் தின்போன். 2. See பிணந்தின்னிப்பயல். |
| பிணந்தின்னிப்பயல் | piṇan-tiṉṉi-p-payal n. <> பிணந்தின்னி+. Rapacious person; பிறரைத் துன்புறுத்துவோன். |
| பிணந்தின்னிப்பிச்சி | piṇan-tiṉṉi-p-picci n. <> id.+. See பிணந்தின்னிப்பேய். (W.) . |
| பிணந்தின்னிப்பூச்சி | piṇan-tiṉṉi-p-pūcci n. <> id.+. Corr. of பிணந்தின்னிப்பிச்சி . Tj. . |
| பிணந்தின்னிப்பேய் | piṇan-tiṉṉi-p-pēy n. <> id.+. Devil that lives on corpses; பிணந்தின்றுவாழும் பேய்வகை. (W.) |
| பிணநாற்றம் | piṇa-nāṟṟam n. <> பிணம்+. [K. heṇanāta.] Stench, as of a corpse; [பிணத்தின் துர்நாற்றம்.] கொடிய வீச்சம். |
| பிணநெஞ்சு | piṇa-nācu n. <> id.+. Heart dead to all feeling; உணர்ச்சியற்ற மனம். துணையிலி பிணநெஞ்சே (திருவாச. 5, 31). |
| பிணநெய் | piṇa-ney n. <> id.+. Fat extracted from corpses, used in magic; பிணத்தினின்று கருவேலைக்கு எடுக்கப்படும் கொழுப்பு. (W.) |
| பிணப்பறை | piṇa-p-paṟai n. <> id.+. Funeral drum; சாப்பறை. அன்றவர்க் காங்கே பிணப்பறையாய் (நாலடி, 23). |
| பிணம் | piṇam n. 1. [T. pīṇega, pīnuga, K. heṇa, M. piṇam, Tu. puṇa.] Corpse, carcass; சவம். எதில் பிணந்தழீஇ யற்று (குறள், 913). 2. Devil, disembodied soul, spirit; |
| பிணமூஞ்சி | piṇa-mūci n. <> பிணம்+. See பிரேதச்சாயல். colloq. . |
| பிணர் | piṇar n. 1. Roughness, unevenness, coarseness; சருச்சரை. இரும்பிணர்த்துறுகல் (குறுந்.13). 2. False tragacanth. See கோங்கிலவு. (பிங்.) |
| பிணவல் | piṇaval n. <> பிணவு. Female of the dog, pig, deer or yak; பன்றி, மான், நாய், முதலியவற்றின் பெண். (தொல். பொ. 614.) |
| பிணவறையன் | piṇa-vaṟaiyaṉ n. cf. பிணாரம். Dull-headed, lazy person; புத்தியில்லாச் சோம்பேறி. (J.) |
| பிணவு | piṇavu n. <> பிணா. 1. See பிணா, 1. சூரரிப் பிணவுகாக்க (குமர. பிர. மீனாட் பிள்ளை. காப். 9). . 2. See பிணவல். (தொல். பொ. 613.) |
| பிணவெடில் | piṇa-veṭil n. <> பிணம்+. See பிணநாற்றம். (J.) . |
| பிணன் | piṇaṉ n. See பிணம். பிணனார்ந்து பேய் வழங்கும் (பு. வெ.10. 11). . |
| பிணா | piṇā n. prob. பிணை1-. 1. Woman; பெண். (தொல். பொ. 616.) 2. See பிணவல். (திவா.) |
| பிணாரம் | piṇāram n. 1. Bulkiness of beasts; விலங்கின் பருமன். (J.) 2. Anything huge; |
| பிணி - தல் | piṇi- prob. 4 v. intr. To die; சாதல். பிணிந்தார் பொடிகொண்டு மெய்பூச (தேவா, 946, 3). |
| பிணி - த்தல் | piṇi- 11 v. tr. 1. To tie, festen with ropes, fetter, link; சேர்த்துக் கட்டுதல். பெருவெளிற் பிணிமார் (மலைபடு. 326). 2. To win over; keep one spell-bound; |
| பிணி | piṇi n. <> பிணி2-. 1. Fastening, binding; கட்டுகை. பிணியுறு முரசம் (புறநா.25). 2. Bond, link, tie; 3. Attachment; 4. Plait, twist; 5. Bud; 6. Disease, malady, sickness; 7. Suffering affiction; 8. (Weav.) Higher or lower row of threads in a weaver's loom, raised or lowered to admit the shuttle; |
| பிணிக்குறை | piṇi-k-kuṟai n. <> பிணி+. Attack of an evil spirit on a child, causing disease; குழந்தைகட்கு நோயை யுண்டாக்கும் பேய்க்கோள். (W.) |
| பிணிகை | piṇikai n. <> பிணி2-. Corset; கச்சு. (சிந்தாமணிநிகண்டு.) |
