Word |
English & Tamil Meaning |
|---|---|
| பித்தவெட்டை | pitta-veṭṭai n. <>id.+. A kind of disease due to excess of bile; பித்தமிகுதியால் உண்டாம் நோய்வகை. Colloq. |
| பித்தவெடி | pitta-veṭi n. <>id.+. Cracks in the skin of the feet, fissures; பித்தத்தினால்காலில் உண்டாகும் பிளப்பு. Colloq. |
| பித்தவெடிப்பு | pitta-veṭippu n. <>id.+. See பித்தவெடி. (W.) . |
| பித்தவெயில் | pitta-veyil n. <>id.+. Morning sun, believed to induce biliousness; காலைவெயில். |
| பித்தவெரிவு | pitta-v-erivu n. <>id.+. Chronic gastritis; பித்தத்தால் எரிச்சல் உண்டாக்கும் நோய்வகை. (M. L.) |
| பித்தளை | pittaḷai n. <>pittalā. [K. hittaḷē.] Brass, Aurichalcum; செம்பும் நாகமுங் கலந்த உலோகவகை. ஈயம் செம்பிரும் பிரசித மென்பவும் புணர்ப்பாற் றோயும் பித்தளை (திருவிளை. இரசவாத. 23). |
| பித்தளைக்காசுமீன் | pittaḷai-k-kācu-mīṉ n. <>பித்தளை+காசு+. A small fresh-water fish, Etroplus maculatus; நன்னீரில் வாழும் சிறுமீன் வகை. |
| பித்தளைமலை | pittaḷai-malai n. <>id.+. Mountain containing copper ore; செம்புத்தாதுள்ள மலை. (W.) |
| பித்தளையாடகம் | pittaḷai-y-āṭakam n. <>id.+. See பித்தலாட்டம். (W.) . |
| பித்தளைரேக்கு | pittaḷai-rēkku n. <>id.+. [K. hittaḷērēku.] Sheet of brass; பித்தளைத்தகடு. (C. G.) |
| பித்தன் | pittaṉ n. <>பித்தம்1. [K. hucca.] 1. Crazy man, mad man; பைத்தியகாரன். மருந்திற்றணியாத பித்தனென்று (நாலடி, 340). 2. Fool, idiot; 3. šiva; 4. cf. bhitti-caura. Thief, robber; |
| பித்தாசயம் | pittācayam n. <>pitta+. See பித்தப்பை. (C. G.) . |
| பித்தாதிக்கம் | pittātikkam n. <>id.+. Excessive secretion of bile; பித்தம் அதிகமாக உண்டாகை. (W.) |
| பித்தாதிகாரம் | pittātikāram n. <>id.+. See பித்தாதிக்கம். (யாழ். அக.) . |
| பித்தாந்தலைக்கொட்டி | pittāntalaikkoṭṭi n. A shrub. See கிலுகிலுப்பை, 3. (W.) |
| பித்தான் | pittāṉ n. Corr. of பொத்தான். Button; சட்டை முதலியவற்றை மாட்டிகொள்ளுதற்கு உரிய குமிழ். Colloq. |
| பித்தி 1 | pitti n. <>bhitti. 1. Wall; சுவர் பித்தி தன்னிடை . . . பொறித்த சத்தகோடி மந்திரம் (விநாயகபு. 79, 35). 2. Part; |
| பித்தி 2 | pitti n. See பித்தம்1. 1. (W.) . |
| பித்தி 3 | pitti n. prob. பிற்றை. Back, hind part; பின்பக்கம். (W.) |
| பித்தி 4 | pitti n. cf. பிச்சி. See பித்திகம், 1. பல்லிதழ்ப்பத்தி பித்தி (மேருமந்.1059). . |
| பித்திகம் | pittikam n. cf. id. 1. See பித்திகை, 3. (குறிஞ்சிப். 89.) . 2. See பித்திகை, 4. மாரிப் பித்திகத் தீரித ழலரி (நற். 314). (திவா.) |
| பித்திகாமார்ச்சாலநியாயம் | pittikā-mārccāla-niyāyam n. <>bhittikā. The nyāya of cat on a wall illustrating the uncertainty of mind of a person just before making a decision; மதின்மேற்பூனை எப்பக்கத்துக் குதிக்குமென்பது அறியப்படாமைபோல ஒருவிஷயம் எவ்வாறு தீர்மானிக்கப்படும் என்பதை அறியலாகா நெறி. (W.) |
| பித்திகை | pittikai n. <>bhittikā. 1. Wall; சுவர் பித்திகைமாடப் பெருந்தெரு (திருவிளை. நகரங். 39). (பிங்.) 2. Wall of the universe; 3. Large flowered jasmine. See சாதிமல்லிகை. (பிங்.) 4. Cananga-flower tree. See சிறுசெண்பகம். (பிங்.) |
| பித்தீரல் | pittīral n. <>பித்து+. Liver; பித்தநீருண்டாகும் உடலுறுப்பு. |
| பித்து | pittu n. <>pitta. [K. huccu.] 1. Bile, gall; பித்த நீர். குருவளர்பித்து மரகத மென்று (திருவாலவா, 25, 10). 2. Delirium, derangement, madness; 3. Ignorance, foolishness; 4. Excessive zeal, infatuation; |
| பித்துக்கொண்டாடு - தல் | pittu-k-koṇ-ṭāṭu- v. intr. <>பித்து+. To act or behave like a madcap; பைத்தியக்காரனைப்போற் காரியஞ்செய்தல். (W.) |
| பித்துக்கொள்ளி | pittu-k-koḷḷi n. <>id.+. Madcap; பைத்தியம்பிடித்தவ-ன்-ள். Colloq. |
| பித்துப்பிடி - த்தல் | pittu-p-piṭi- v. intr. <>id.+. To become mad, crazy; பைத்தியமாதல். |
