Word |
English & Tamil Meaning |
|---|---|
| பிதிர்காலம் | pitir-kālam n. <>id.+. Proper time of the day for presenting oblations to the manes, viz., from the 18th to the 24th nāḻikai; பகல்18 நாழிகைக்குமேல் 24 நாழிகை வரையிலுள்ளதும் பிதிர்க்களைத் திருப்தி செய்வதற்குரியதுமான காலம். (W.) |
| பிதிர்கானனம் | pitir-kāṉaṉam n. <>id.+. Cremation-ground; சுடுகாடு. (யாழ். அக.) |
| பிதிர்கிரியை | pitir-kiriyai n. <>id.+. See பிதிர்க்கடன். . |
| பிதிர்சனம் | pitir-caṉam n. <>id.+. Ancestors; மூதாதையர். (யாழ். அக.) |
| பிதிர்சிராத்தம் | pitir-cirāttam n. <>id.+. Annual ceremony in honour of a deceased father; மரித்த பிதாவுக்கு ஆண்டுதோறும் இறந்த திதியிற் செய்யும் சடக்கு. (W.) |
| பிதிர்தருப்பணம் | pitir-taruppaṇam n. <>id.+. 1. Oblation of water to the manes; தென்புலத்தார்க்குச் செய்யும் நீர்க்கடன். 2. The part of palm between the thumb and forefinger; |
| பிதிர்திதி | pitir-titi n. <>id.+. 1. See பிதிர்சிராத்தம். (W.) . 2. Newmoon day; |
| பிதிர்தினம் | pitir-tiṉam n. <>id.+. (W.) 1. Special day on which oblations are offered to the manes; அமாவாசைபோன்ற பிதிர்க்கடன் செய்தற்குரிய தினங்கள். 2. The day of the annual ceremony of a deceased ancestor; 3. The tenth nakṣatra. |
| பிதிர்தீர்த்தம் | pitir-tīrttam n. <>id.+. 1. Water poured to the right of a person in making offerings to the manes; ஆட்காட்டி பெருவிரல்களின் இடைவழியே பிதிர்தேவதைகளை உத்தேசித்து வலப்புறமாக விடும் நீர்; 2. Gayā; 3. See பிதிர்தருப்பணம், 2. (யாழ். அக.) |
| பிதிர்தேவதை | pitir-tēvatai n. <>id.+. A class of Devas or Gods in the world of Yama; யமலோகத்தில் வாழும் ஒருசார் தேவ சாதியார். |
| பிதிர்தேவர் | pitir-tēvar n. <>id.+. See பிதிர்தேவதைகள். (யாழ். அக.) . |
| பிதிர்தைவதம் | pitir-taivatam n. <>pitrdaivata. The tenth nakṣatra. See மகம். (யாழ். அக.) |
| பிதிர்நாள் | pitir-nāḷ n. <>பிதிர்4+. See பிதிர்தினம். (ஆசாரக். 49.) (பிங்.) . |
| பிதிர்பதம் | pitir-patam n. <>id.+. 1. See பிதிருலகம். (W.) . 2. South; |
| பிதிர்பதி | pitir-pati n. <>id.+. Yama, believed to be the Lord of the manes; [பிதிரர்களுக்குத் தலைவன்] யமன். (யாழ். அக.) |
| பிதிர்பந்து | pitir-pantu n. <>id.+. Relation on father's side (R. F.); தந்தைவழிச் சுற்றம். (யாழ். அக.) |
| பிதிர்பிண்டம் | pitir-piṇṭam n. <>id.+. Ball of rice offered to the manes; பிதிராக்கிடும் சோற்றுண்டை. (W.) |
| பிதிர்பிதிர் | pitir-pitir n. <>id.+பிதிர்4. Father's father; தந்தையைப்பெற்ற பாட்டன். (யாழ். அக.) |
| பிதிர்போக்கு - தல் | pitir-pōkku- v. tr. <>பிதிர்3+. To press out milk before suckling the child; ஊட்டுதற்குமுன் முலைப்பாலின் முதற்றிவலைகளை வெளியேற்றுதல். உண்ணாமுலைப்பால் பிதிர்போக்க (அரிசமய. பராங்குச. பக். 92). |
| பிதிர்மந்திரம் | pitir-mantiram n. <>pitr+.. Tomb, mausoleum; பிரேதக்குழியின்மேற் கட்டப்பட்ட மண்டபம். (யாழ். அக.) |
| பிதிர்மேதம் | pitir-mētam n. <>id.+mēdha. A kind of funeral ceremony, opp. to piramamētam; ஒருவகை ஈமச்சடங்கு. (W.) |
| பிதிர்யஞ்ஞம் | pitir-yaam n. <>id.+. Daily offerings of libations of water to the manes; தென்புலத்தார்வேள்வி. |
| பிதிர்யாகம் | pitir-yākam n. <>id.+. See பிதிர்யஞ்ஞம். (சங். அக.) . |
| பிதிர்யானம் | pitir-yāṉam n. <>id.+. Celestial car to convey virtuous persons to heaven on their death; புண்ணியசீலர் தேவலோகத்திற்கு ஏறிச்செல்லும் விமானம். (யாழ். அக.) |
| பிதிர்வசதி | pitir-vacati n. <>id.+. See பிதிர்வனம். (யாழ். அக.) . |
| பிதிர்வர்க்கம் | pitir-varkkam n. <>id.+. Paternal side; தந்தைவழி. |
| பிதிர்வழி | pitir-vaḻi n. <>id.+. See பிதிர்வாக்கம். . |
| பிதிர்வனம் | pitir-vaṉam n. <>id.+. Cremation-ground; சுடுகாடு. (பிங்.) |
| பிதிர்வனேசுரன் | pitir-vaṉēcuraṉ n. <>id.+vana. šiva; சிவபிரான். (யாழ். அக.) |
| பிதிர்வாசி | pitir-vāci n. <>id.+. See பிதிராசாரம். . |
| பிதிர்விரதம் | pitir-viratam n. <>id.+. See பிதிர்கருமம். (யாழ். அக.) . |
