Word |
English & Tamil Meaning |
|---|---|
| பித்துப்பை | pittu-p-pai n. <>id.+. See பித்தப்பை. (W.) . |
| பித்தேறி | pittēṟi n. <>id.+ஏறு-. Crazy person; பைத்தியங்கொண்டவ-ன்-ள். (W.) |
| பித்தை | pittai n. perh. பிய்-. Lock of hair; மக்கள் தலைமயிர். நீடிரும் பித்தை பொலியச் சூட்டி (பெரும்பாண்.482). |
| பித்தோன்மாதம் | pittōṉmātam n. <>pitta+unmāda. Madness, craziness; பித்துவெறி. (பைஷஜ. 286.) |
| பிதக்கு - தல் | pitakku- 5. v. intr. cf. பிதுங்கு-. To be squeezed or crushed; நசுங்குதல். நீண்மூடி பிதக்க வூன்றிய (தேவா, 802, 11). |
| பிதகம் | pitakam n. <>bhidaka. Thunderbolt; இடி. (யாழ். அக.) |
| பிதற்றர் | pitaṟṟar n. <>பிதற்று-. Babblers, bluffers; பிதற்றுவோர். பின்னருஞ்சில் ருண்டோ பிதற்றரே (திருவாலவா, 34, 19). |
| பிதளை | pitalai n. Vessel for oil; எண்ணெய்ப்பாத்திரம். (யாழ். அக.) |
| பிதற்று - தல் | pitaṟṟu- 5 v. tr. 1. To chatter, babble, prate; அறிவின்றிக் குழறுதல். இவை பிதற்றுங் கல்லாப் புன்மர்க்கள் (நாலடி, 45). 2. To rave, as a delirious person; |
| பிதற்று | pitaṟṟu n. <>பிதற்று-. Foolish talk, chatter, babble, incoherent talk; அறிவின்றிக் குழறுகை. (சூடா.) பித்தனை னென்னும் பிதற்றெழிவ தெந்நாளோ (தாயு. எந்நாட். 1120). |
| பிதா 1 | pitā n. <>pitā nom. sing. of. pitr. 1. Father; தந்தை. 2. God; 3. Brahmā; 4. šiva; 5. Arhat; |
| பிதா 2 | pitā n. of. புதா. Huge stork. See பெருநாரை. (பிங்.) |
| பிதாக்கள் | pitākkaḷ n. <>பிதா. Fathers, ecclesiastical authorities, dignitaries of the church; கிறிஸ்தவக்கோயிற் குருமார். Chr. |
| பிதாப்பிதாக்கள் | pitā-p-pitākkaḷ n. <>id.+. Forefathers, ancestors; மூதாதையர். (W.) |
| பிதாமகன் | pitāmakaṉ n. <>pitāmaha. 1. Paternal grandfather; தந்தையைப்பெற்ற பாட்டன். (பிங்.) 2. Brahmā; |
| பிதாமகி | pitāmaki n. <>pitāmahī. Paternal grandmother; தந்தையைப்பெற்ற பாட்டி. |
| பிதி | piti n. <>bhidi. Thunder; இடி. (யாழ். அக.) |
| பிதிகம் | pitikam n. of. prthak-tvacā. A species of bow-string hemp. See பெருங்குரும்பபை. (மலை.) |
| பிதிகாரம் | pitikāram n. <>pratī-kāra. Remedy; பரிகாரம். இதற்கொர் பிதிகாரமொன்றையருளாய் (தேவா. 1184, 1). |
| பிதிர் - தல் | pitir- 4. v. intr. 1. To be separated into small particles; to fall to powder; உதிர்தல். பிதிர்ந்துபோயின பிறங்கல்க ளேழும் (கந்தபு. யுத்தகாண். முதனாட். 50). 2. To become scattered; 3. To be torn; 4. To spread; 5. To be bewildered; |
| பிதிர் - த்தல் | pitir- 11 v. tr. Caus. of பிதிர்1-. To scatter, spread; உதிர்த்தல். |
| பிதிர் 1 | pitir n. <>பிதிர்1-. 1. Pollen of a flower; மகரந்தம். (பிங்.) 2. Powder; 3. Drop of water; 4. Piece; 5. Spark; 6. Moment of time; 7. Snap of the finger; 8. Conundrum, puzzle; 9. Acts of wonder; 10. Mud; |
| பிதிர் 2 | pitir n. <>pitr. 1. Father, used only in compounds; தந்தை. பிதிர்வாக்கிய பரிபாலனம். 2. See பிதிர்தேவதை. 3. Manes; |
| பிதிர்க்கடன் | pitir-k-kaṭaṉ n. <>பிதிர்4+. Duties to the manes; தென்புலத்தார்க்குச் செய்யுங்கடன். பெற்றிலன் பிதிர்க்கடன் (இரகு. திருவவ. 2). |
| பிதிர்க்கிருகம் | pitir-k-kirukam n. <>id.+. See பிதிர்கானனம். (யாழ். அக.) . |
| பிதிர்கருமம் | pitir-karumam n. <>id.+. Obsequies to one's deceased father; தந்தைக்குச் செய்யும் ஈமக்கிரியை. Colloq. |
| பிதிர்காரியம் | pitir-kāriyam n. <>id.+. 1. See பிதிர்க்கடன். (யாழ். அக.) . 2. See பிதிர்கருமம். Colloq. |
