Word |
English & Tamil Meaning |
|---|---|
| பிரதரம் | pirataram n. <>pra-dara. Menorrhagia; பெரும்பாடு. (பைஷஜ.) |
| பிரதரிசிப்பி - த்தல் | pirataricippi- 11 v. tr. <>pra-darši. To explain, illuminate; விளக்குதல். (சங். அக.) |
| பிரதன் | pirataṉ n. <>pra-da. Bestower, giver, used at the end of compounds; கொடையாளன். வரப்பிரதன். |
| பிரதனம் | pirataṉam n. See பிரதனை. (W.) . |
| பிரதனை | pirataṉai n. <>prthanā. Division of an army, consisting of 243 chariots, 243 elephants, 729 horses and 1215 foot; 243 தேரும், 243 யானையும், 729 குதிரையும், 1215 காலாளுங்கொண்ட ஒர் படைவகுப்பு. (W.) |
| பிரதாபம் | piratāpam n. <>pra-tāpa. 1. Bravery, heroism; வீரம். காமற்றெறு பிரதாபமும் (சிவப். பிர. சிவஞா. கலம். 39). 2. Greatness, magnificence; 3. Fame, glory, celebrity; 4. Splendour; |
| பிரதாபலங்கேச்சுரம் | piratāpa-laṅkēccuram n. <>id.+. A medicine compounded of mercury, sulphur and other ingredients; பாதரசம் கந்தகம் முதலியவற்றாற் செய்த கூட்டுமருந்து வகை. (பதார்த்த.1224.) (பைஷஜ. 153.) |
| பிரதாபி - த்தல் | piratāpi- 11 v. intr. <>pra-tāpa. To become glorious, famous or exalted; மகிமைப்படுதல். (W.) |
| பிரதானகோயில் | piratāṉa-kōyil n. <>பிரதானம்+. 1. The shrine of the chief deity in a temple; பிரதான தெய்வம் உள்ள கோயில். 2. Cathedral; |
| பிரதானபண்டிதர் | piratāṉa-paṇṭitar n. <>pradhāna+. See பிரதமபண்டிதர். (W.) . |
| பிரதானபுருஷன் | piratāṉa-puruṣaṉ n. <>id.+. Chief or prominent person; முக்கியமானவன். |
| பிரதானபூதம் | piratāṉa-pūtam n. <>id.+. That which is chief or important; முக்கியமானது. |
| பிரதானம் 1 | piratāṉam n. <>pradhāna. 1. Material cause of creation, matter; பிரகிருதிதத்துவம் இரும்பிரதானத் தெழுமன தத்துவம். (ஞானா. 64, 1). 2. Importance, eminence, essence; 3. That which is important; |
| பிரதானம் 2 | piratāṉam n. <>pra-dāna. See பிரதம். . |
| பிரதானம்பண்ணு - தல் | piratāṉam-paṇ-ṇu- v. intr. <>பிரதானம்+. See பிரதானமடி-. (J.) . |
| பிரதானமடி - த்தல் | piratāṉam-aṭi- v. intr. <>id.+. To boast, make much of oneself; தற்பெருமை கொண்டாடுதல். (J.) |
| பிரதானன் | piratāṉaṉ. n. <>pradhāna . 1. Chief man; தலைமையானவன். 2. A minister who attends to all the functions of a state; |
| பிரதானி | piratāṉi n. <>id. Minister; மந்திரி. திகழ்வடுக நாததுரை மெச்சும்பிர தானி (தனிப்பா. i. 260, 1). |
| பிரதானிக்கம் | piratāṉikkam n. <>பிரதானி. 1. Office of a treasurer; பொக்கிஷசாலைத்தலைமை. (W.) 2. Ministerial office; |
| பிரதானிஜோடி | piratāṉi-jōṭi n. <>id.+. Iṇām held on a fixed quit-rent by a minister; பிரதானி அனுபவிக்கும் இனாம்பூமி. (S. I. I.) |
| பிரதானை | piratāṉai n. <>pradhānā. Pārvatī; பார்வதி. (கூர்மபு. திரு. 20.) |
| பிரதி | pirati <>prati. n. 1. Likeness; ஒத்த தன்மை. பிரதிபிம்பம். 2. Substitute; 3. Answer, response; 4. Copy, transcript, duplicate; 5. Manuscript; 6. Opposition; 7. Competition; 8. Defendant; |
| பிரதிக்கடமை | pirati-k-kaṭamai n. <>பிரதி+. Gratitude; செய்ந்நன்றி. (கல்வி. வி. 1, 1, 7.) |
| பிரதிக்கிரகம் | piratikkirakam n. <>pratigraha. 1. Acceptance of gifts; தானம் பெறுகை. 2. Rear of an army; |
| பிரதிக்கிரகி - த்தல் | piratikkiraki- 11 v. tr. <>id. To accept a gift; தானங்கொள்ளுதல். |
| பிரதிக்கிரியை | pirati-k-kiriyai n. <>prati+. 1. See பிரதிகருமம். . 2. Redress, remedy; |
| பிரதிக்கினம் | piratikkiṉam n. <>pratighna. Limb of the body; உடலினுறுப்பு. (யாழ். அக.) |
