| Word | 
English & Tamil Meaning | 
|---|---|
| பிரமாணி 3 | piramāṇi n. <> Brahmāṇī. Wife of Brahmā; பிரமாவின் மனைவி. அங்கையிற்கரகந் தாங்கும் பிரமாணி (காசிக. வச்சிர.1) . | 
| பிரமாணிக்கம் | piramāṇikkam n. <> prāmāṇika. (யாழ். அக.) 1. Truth, veracity, true declaration; உண்மை. 2.  Oath; 3.  Illustration; | 
| பிரமாணிக்கன் | piramāṇikkaṉ n. <>id. Truthful, honest person; உண்மையானவன். Colloq. | 
| பிரமாணிகம் | piramāṇikam n. <>id. See பிரமாணிக்கம். (W.) . | 
| பிரமாணிபடை | piramāṇi-paṭai n. <> பிரமாணி3+. The Vēdas; வேதம். (பிங்.) | 
| பிரமாத்தியம் | piramāttiyam n. <>prāmādya. (யாழ். அக.) 1. Intoxication; மயக்கம். 2. Negligence; | 
| பிரமாத்திரம் | piramāttiram n. See பிரமாஸ்திரம். பிரமாத்திரப்படலம். (கம்பரா.) . | 
| பிரமாதப்படு - தல் | piramāta-p-paṭu- v. intr. <> பிரமாதம்+. To be made prominent, made much of; பெரியதாக்கப்படுதல். | 
| பிரமாதம் | piramātam n. <>pra-māda. 1. Negligence, carelessness; அசாக்கிரதை. (கூர்மபு. தமோ. 10.) 2.   Error,  mistake; 3.   Accident,   mishap; 4.   Excess,   that   which   is  beyond limits, great thing; | 
| பிரமாதா 1 | piramātā n. <>pra-mātā. 1. One who has a correct knowledge of piramāṇam, logician; பிரமாணங்களை அறிபவன் (இலிங்கபு. தேவ. 8.) 2.   One  who  measures; | 
| பிரமாதா 2 | piramātā n. cf. pra-mātāmaha. Maternal grandfather; மாதாமகன். (யாழ். அக.) | 
| பிரமாதாமகன் | piramātāmakaṉ n. <>pra-mātāmaha. Paternal grandfather of one's mother; தாயின் தந்தைவழிப்பட்டான். (யாழ்.அக.) | 
| பிரமாதாமகி | piramātāmaki n. Fem. of பிரமாதாமகன். Paternal grandmother of one's mother; தாயின் தந்தைவழிப் பாட்டி | 
| பிரமாதி | piramāti n. <>Pramāthin. The 13th year of the Jupiter cycle of sixty years; ஆண்டு அறுபதனுள் பதின்மூன்றாவது. | 
| பிரமாதிகை | piramātikai n. <>pramādikā. A deflowered girl; கற்பழிந்த பெண். (யாழ்.அக.) | 
| பிரமாதிராயன் | piramāti-rāyaṉ n. <>brahman+. Ancient title of Brahmin ministers; பார்ப்பனவமைச்சர் பட்டப்பெயர். (Insc.) | 
| பிரமாதீ | piramātī n. <>Pramādin. See பிரமாதீச. (பஞ்.) . | 
| பிரமாதீச | piramātīca n. <>Pramādī-ca. The 47th year of the Jupiter cycle of sixty years; ஆண்டு அறுபதனுள் நாற்பத்தேழாவது. | 
| பிரமாபணம் | piramāpaṇam n. <>pramāpaṇa. Murder; கொலை. (யாழ். அக.) | 
| பிரமாம்பசு | piramāmpacu m. <>brahmāmbhas. Cow's urine; கோமூத்திரம். (யாழ். அக.) | 
| பிரமாயு | piramāya n. <>Brahmāyus. Brahma's lifetime; பிரமகற்பம். | 
| பிரமாயுதம் | piramāyutam n. <>prayuta. Ten lakhs; பத்துலட்சம். (யாழ். அக.) | 
| பிரமாலயம் | piramālayam n. <>brahman+. Brahmin house; அந்தணர் வீடு . (W.) | 
| பிரமானந்தபைரவம் | piramāṉantapairavam n. <>brahmānanda+. A kind of medicinal pill; ஒருவகை மருந்துக்குளிகை. (பதார்த்த.1209.) | 
| பிரமானந்தம் | piramāṉantam n. <>brahmānanda. 1. Supreme bliss of salvation; மோட்சவின்பம். Loc. 2. Great happiness; | 
| பிரமாஸ்திரம் | piramāstiram n. <>brahmāstra. A mystic arrow whose presiding deity is Brahmā; பிரமனை அதிதேவதையாகக் கொண்ட அம்பு. | 
| பிரமி 1 - த்தல் | pirami- 11 v. intr. <>bhrama. 1. To be bewildered, confused, perplexed; மயங்குதல். மனமே யேன்பிரமிக்கின்றாய் (ஞானவா. உத்தா. 24). 2. To be astonished or surprised; to wonder; to be amazed; | 
| பிரமி 2 | pirami n. <>brāhmī. A prostrate herb, Herpestis monniera; பூடுவகை. (சீவக.2703, உரை.) | 
| பிரமிசம் | piramicam n. <>bhramša. 1. Loss; ruin; கேடு. ஞானப்பிரமிசம் (ஈடு.) 2. Slip; | 
| பிரமிதி | piramiti n. <>pra-miti. Knowledge established by proof; பிரமாணத்தால் அறியும் அறிவு. நின்பிரமிதியென (சங்கற்ப. 4, 44). | 
| பிரமிப்பு | piramippu n. <>பிரமி-. 1. Bewilderment, confusion, perplexity; மயக்கம். 2. Amazement, astonishment, surprise; | 
