Word |
English & Tamil Meaning |
|---|---|
| பிரலோடனம் | piralōṭaṉam n. <>prolōṭhana. Rolling; உருளுகை. (சங்.அக) |
| பிரலோபம் | piralōpam n. <>pra-lōbha. Desire; விருப்பம். (யாழ்.அக.) |
| பிரலோபனம் | piralōpaṉam n. <>pralōbhana. Fidgetiness due to love-sickness; காமவிகாரம். (யாழ்.அக.) |
| பிரவகம் | piravakam n. <>pra-vaha. A wind, one of capta-maruttu, q.v.; சப்தமருத்துக்களுள் ஒன்று (யாழ். அக.) |
| பிரவகி - த்தல் | piravaki 11 v. intr. <>pravah. To flood; to be in spate; நீர்ப்பெருக்கெடுத்தல் |
| பிரவசனபக்தி | piravacaṉa-pakti n. <>pravacana+. (Jaina.) Devotion to the study of sacred literature; பரமாகமத்துளெழுகின்ற பக்தி. (ஸ்ரீபுராணம்: சீவக.3133, கீழ்க்குறிப்பு.) |
| பிரவசனம் | piravacaṉam n. <>pra-vacana. Lecturing, teaching, expounding; பலரறியப்போதிக்கை. |
| பிரவஞ்சம் | piravacam n. See பிரபஞ்சம். பிரவஞ்சமும் . . . வந்தனவே (திருவாலவா. 64, 12). . |
| பிரவஞ்சன் | piravacaṉ n. <>pra-bhajana. Wind; வாயு. (சங்.அக.) |
| பிரவணம் | piravaṇam n. <>pra-vaṇa. (யாழ். அக.) 1. Junction where four roads meet; நாற்றெருக் கூடுமிடம். 2. Bend; 3. Valley; |
| பிரவத்தகம் | piravattakam n. prob. pravartaka Deed, action; செயல். (சங்.அக.) |
| பிரவத்தம் | piravattam n. <>pra-vtta. Family; சமுசாரம். (யாழ். அக.) |
| பிரவத்தி | piravatti n. <>pra-vrtti Exertion, activity. See பிரவிருத்தி. முக்குணஞ் செய்யும் பிரவத்திதன்னை (வாயுசங். இலிங்கோ. 21). |
| பிரவபணம் | piravapaṇam n. <>pra-vapaṇa. Sowing; விதைக்கை. (யாழ்.அக.) |
| பிரவயணம் | piravayaṇam n. <>pravayaṇa. Elephant's goad; அங்குசம். (யாழ்.அக.) |
| பிரவர்த்தகம் | piravarttakam n. <>pravarttaka. 1. Effort, exertion; முயற்சி. 2. See பிரவர்த்தனம், 1. (சி. சி. 2, 57, சிவாக்.) |
| பிரவர்த்தகன் | piravarttakaṉ n. <>pravarttaka. 1. Author, directing agent; நடத்து பவன். 2. One well-known for his manifold activities; |
| பிரவர்த்தனம் | piravarttaṉam n. <>pravarttana. 1. Action, operation; செய்கை. 2. Motion, movement; |
| பிரவர்த்தி - த்தல் | piravartu- 11 v. intr. See பிரவிருத்தி. ஒன்றையறிந்து அதை யிச்சித்து அதிலே பிரவர்த்திக்கிறது (சி. சி. 1, 37, சிவாக்.). . |
| பிரவர்த்தி | piravartti n. See பிரவிருத்தி. வைதிகத் தருமம் வாய்ந்த பிரவர்த்தி நிவர்த்தியென்ன (கூர்மபு. வருணாச்சிரம. 30). . |
| பிரவரசைவர் | piravara-caivar n. <>pravara+. šaiva initiates belonging to the aṉulōma castes, one of seven caivar, q.v.; எழுவகைச்சைவருள் சிவதீக்ஷைபெற்ற அனுலோமர். (சைவச.பொது.435, உரை.) |
| பிரவரம் | piravaram n. <>pra-vara. Lineage, descent; மரபு. (யாழ்.அக.) |
| பிரவாகநித்தியம் | piravāka-nittiyam n. <>பிரவாகம்+. See பிரவாகானாதி. . |
| பிரவாகம் | piravākam n. <>pra-vāha. 1. Flood, inundation; வெள்ளம். நின்கருணைப் பிரவாக வருளை (தாயு. எங்குநிறை. 6). 2. Tank; 3. Action; |
| பிரவாகானாதி | piravākāṉāti n. <>id.+ anādi. The principle of uninterrupted succession giving a sense of unity; ஆற்றுப்பெருக்குப் போலத் தொடர்ச்சியாய்த் தொன்றுதொட்டுவரும் இரீதி. இது தொன்றுதொட்டு வருகையால் ஆற்றொழுக்குப்போலப் பிரவாகானாதியாம் (ஞானா.கட்.14, சைவசித்தாந்தக்கழகப்பதிப்பு). |
| பிரவாகி - த்தல் | piravāki- 11 v. intr. <>id. See பிரவகி-. (சங். அக.) . |
| பிரவாகேசுவரவாதம் | piravākēcuvaravātam n <>pravāhēšvara+. The doctrine which holds that the Supreme Being entrusts His duties to an individual jīva as soon as perfected and that the latter also does the same as soon as another becomes perfected; ஓரான்மா முத்தனானால் ஈசுவரன் அவனிடத்தில் தன்னதிகாரத்தை வைத்துத் தன் பாரம் நீங்க, அவன்பின் வேறொருவன் முத்தனானால் அவனிடத்து அம் முதன்முத்தன் தன்னதிகாரத்தை வைத்துத் தான் பாரமறுவனென்று கூறும் வாதம். (த. நி.போ.பக்.191.) |
| பிரவாச்சுவடி | piravā-c-cuvaṭi n. See பிரபவாதிச்சுவடி. Colloq. . |
| பிரவாசம் | piravācam n. <>pra-vāsa. 1. Ceremony of taking an infant to the temple for the first time, one of cōṭaca-camskāram, q.v.; சோடசசம்ஸ்காரங்களுள் முதன்முறை குழந்தையை ஆலயத்துக்கழைத்துச்செல்லுஞ் சடங்கு. (திருவானைக். கோச்செங்.14.) 2. See பிரவாசனம். |
