Word |
English & Tamil Meaning |
|---|---|
| பிராணதன் 2 | pirāṇataṉ n. <>prāṇatha. Strong person; வலியவன் (யாழ்.அக.) |
| பிராணதாரகம் | pirāṇa-tārakam n. <>prāṇa+dhāraka. 1. That which sustains life; சீவாதாரமானது. 2. Diet; |
| பிராணதாரணம் | pirāṇa-tāraṇam n. <>id.+ dharaṇa. Means of livelihood or support; சீவனத்துக்கு ஆதாரமானது. |
| பிராணதுக்கம் | pirāṇa-tukkam n. <>id.+. Great grief; கொடுந்துன்பம். (யாழ்.அக.) |
| பிராணநாதன் | pirāṇa-nātaṉ n. <>id.+. See பிராணநாயகன். . |
| பிராணநாயகன் | pirāṇa-nāyakaṉ n. <>id.+. Husband, dear as life; கணவன். |
| பிராணநாயகி | pirāṇa-nāyaki n. Fem. of பிராணநாயகன். Wife, dear as life; மனைவி. |
| பிராணப்பிரதிஷ்டை | pirāṇa-p-piratiṣṭai n. <>prāṇa+. 1. Ceremony of invoking and establishing a deity in an idol; விக்கிரகத்தில் தெய்வத்தை ஆவாகிக்கை. 2. Saving the life of a person who is very ill; |
| பிராணம் | pirāṇam n. <>id. See பிராணன். . |
| பிராணமயகோசம் | pirāṇamaya-kōcam n. <>prāṇa-maya+. (Phil.) The vital body, the sheath of prāṇa, one of paca-kōcam, q.v.; பஞ்சகோசத்துள் பிராணமயமாயுள்ள கோசம். (சி. சி. பர.மாயா.8.) |
| பிராணரோதம் | pirāṇa-rōtam n. <>prāṇarōdha. A hell; நரகவகை. (சேதுபு. தனுக்.3.) |
| பிராணலிங்கம் | pirāṇa-liṅkam n. <>prāṇa+. The liṅgam worshipped by a Liṅgāyat and worn on his person; வீரசைவர்கள் சரீரத்தில் தரித்துப் பூசிக்கும் இலிங்கம். (W.) |
| பிராணவாயு | pirāṇa-vāyu n. <>id.+. 1. See பிராணன், 3. அறிந்திடும் பிராணவாயு (சி. சி. 3, 4). . 2. Oxygen; 3. Angina pectoris; |
| பிராணவியோகம் | pirāṇa-viyōkam n. <>id.+. Extinction of life; உயிர்போகை. |
| பிராணவேதனை | pirāṇa-vētaṉai n. <>id.+. Throes of death; மரணவேதனை. |
| பிராணன் | pirāṇaṉ n. <>prāṇa. 1. Llife, vitality; உயிர்.(திவா.) 2. Breath, breathing; 3. The vital air of the body which causes respiration, one of taca-vāyu, q.v.; 4. Strength; 5. (Astron.) Correction applied to the sun's mean position; |
| பிராணாக்கினிகோத்திரம் | pirāṇākkiṉikōttiram n. <>Prāṇāgni-hōtra. An Upaniṣad, one of 108; நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று. |
| பிராணாசாரம் | pirāṇācāram n. <>prāṇa+. Lying down before a deity till one obtains one's wishes; வரம்வேண்டித் தெய்வத்தின்முன் படுகிடையாய்க் கிடக்கை. (M. N.A. D. II, 365.) |
| பிராணாதாரம் | pirāṇātāram n. <>id.+ ā-dhāra. That which is vital or important; இன்றியமையாதது. Colloq. |
| பிராணாந்தம் | pirāṇāntam n. <>id.+ anta. See பிராணாந்திகம். . |
| பிராணாந்திகம் | pirāṇāntikam <>id.+ n. Close of life; அந்தியகாலம். --adv. Till the close of life; |
| பிராணாபத்து | pirāṇāpattu n. <>id.+. See பிராணாபாயம். . |
| பிராணாபாயம் | pirāṇāpāyam n. <>prāṇa+apāya. Peril of life; உயிர்க்குவரும் ஆபத்து. |
| பிராணாயாமம் | pirāṇāyāmam n. <>prāṇāyāma. (Yōga.) Control of prāṇās or the vital forces of the body by regulation of breath, of three modes, viz., irēcakam, pūrakam, kumpakam, one of aṣṭāṅka-yōkam, q.v.: அஷ்டாங்கயோகத்துள் இரேசகம், பூரகம், கும்பகம் என்று மூவகையாய்ச் சுவாசத்தை யடக்கியாளும் யோகமுறை. (சிவதரு. சிவஞானயோ. 57.) |
| பிராணாவஸ்தை | pirāṇāvastai n. <>prānāvastā. Extreme distress; மிக்க சங்கடம். Colloq. |
| பிராணி - த்தல் | pirāṇi- 11 v. intr. <>prāṇa. To breathe, respire; மூச்சுவிடுதல் (திவ். பெரியதி, 1, 2, 8, வ்யா.) |
| பிராணி 1 | pirāṇi n. <>prāṇin. Living creature, especially one of the lower animal பிராணனுடையது. பிராணிதலைவனை (பதினொ. நக்கிர. பெருந்தேவ.). |
| பிராணி 2 | pirāṇi n. Corr. of புறணி. Bark to a tree. மரப்பட்டை. Loc. |
| பிராணிவர்க்கநூல் | pirāṇi-varkka-nūl n. <>பிராணி2+. Biology; செந்துவர்க்கங்களை ஆராயும் நூல். Mod. |
| பிராணேசன் | pirāṇēcaṉ n. <>prāṇēša. See பிராணநாயகன். . |
