Word |
English & Tamil Meaning |
|---|---|
| பிராத்தி | pirātti n. <>prāpti. 1. Reaching; obtaining; பேறு. 2. The supernatural power of obtaining everything, one of aṣṭāmā-citti, q.v.; 3. Result, good or bad; 4. Lot, destiny; |
| பிராத்தி - த்தல் | pirātti- 11 v. tr. See பிரார்த்தி-. (யாழ். அக.) . |
| பிராத்திகன் | pirāttikaṉ n. <>பிராத்தி. He who helps to realise one's desires; விரும்பியதை அடையச்செய்வோன். தாம் யாவைக்கும் பிராத்திகன் என்னும் அறிவைவிளக்கி (நெந்சுவிடு, 73, உரை). |
| பிராதக்கருமம் | pirāta-k-karumam n. <>prātas+. Morning rites; காலைக்கடன். |
| பிராதக்காலம் | pirāta-k-kālam n. <>id.+. Day-break; விடியற்காலம். Colloq. |
| பிராதச்சந்தி | pirāta-c-canti n. <>id.+. 1. Morning twilight; காலைச்சந்தி. 2. Morning rites; |
| பிராதம் | pirātam n. <>prātas. See பிராதக்காலம். (நாமதீப. 556.) . |
| பிராதம்மியம் | pirātammiyam n. <>prāthamya. See பிராதானியம். (W.) . |
| பிராதமிகர் | pirātamikar n. <>prāthamika. An order of heavenly beings; வானோர்கணத்தொருசாரார். R. C. |
| பிராதமிகன் | pirātamikaṉ n. Elder brother; முன்பிறந்தோன். (சங். அக.) |
| பிராதர்ஜி | pirātarji n. <>U. faryād + U. arji. Plaint; complaint; முறையீட்டுப் பத்திரம். (C. G.) |
| பிராதா | pirātā n. <>bhrātāl nom. sing of bhrāṭr. Brother; சகோதரன். பிராதாக்களா மசுரர் குலம் (உத்தரார. இராவணன்பிற. 42). |
| பிராதானியம் | pirātāṉiyam n. <>prādhānya. Importance; முதன்மை. Loc. |
| பிராதி | pirāti n. <>U. faryādi. See பிரியாதி. Loc. . |
| பிராதிபதிகம் | pirātipatikam n. <>prātipadika. Base of a noun; பெயர்ப்பகாப்பதம். பன்னும் பகாப்பதப்பேரே பிராதிபதிகம் (பி. வி. 7). |
| பிராதிபாசிகம் | pirātipācikam n. <>prātibhāsika. Existing only in appearance but not in reality, as a shadow; பிரதிபலித்த தோற்றம். (வேதா. சூ. 32). |
| பிராதிருதத்தம் | pirātiru-tattam n. <>bhrātr + datta. Dowry given by a brother to his sister on the occasion of her marriage (R. F.); விவாககலாத்தில் சகோதரனால் உதவப்பட்ட ஸ்திரீதனம். |
| பிராதிருஸ்தானம் | pirātiru-stāṉam n. <>id.+. (Astrol.) Third house from the ascendant in a person's horoscope, indicating particulars regarding the brothers and sisters of that person; சாதகத்தில் சகோதரபாவ்த்தைக் குறிக்கும் மூன்றாமிடம். (C. G.) |
| பிராது | pirātu n. <>U. faryād. (Legal.) A complaint, suit; முறையீட்டு விண்ணப்பம். (C. G.) |
| பிராதுதாக்கல் | pirātu-tākkal n. <>பிராது+. (Legal.) Presentation or filing of plaint or complaint; நியாயஸ்தலத்தில் முறையிட்டு விண்ணப்பம் கொடுக்கை. (C. G.) |
| பிராதுபண்ணு - தல் | pirātu-paṇṇu- v. intr. <>id.+. To lodge or file a plaint or complaint; வழக்கிடுதல். Colloq. |
| பிராந்தகன் | pirāntakaṉ n. <>bhrāntaka. A bewildered, mad man; அறிவுமயங்கியவன். பிராந்தகன் மலரெலா மெடுத்து (செவ்வந்தி. பு. உறையூர். 3). |
| பிராந்தம் 1 | pirāntam n. <>prānta. 1. Edge, margin; ஓரம். (W.) 2. Country or region; |
| பிராந்தம் 2 | pirāntam n. <>bhrānta. See பிராந்தி, 1. . |
| பிராந்தன் | pirāntaṉ n. <>bhrānta. See பிராந்தகன். பிராந்தர்சொற்கேளேல் (வோ. 173, 10). |
| பிராந்தா | pirāntā n. <>Port. varanda. Verandah; தாழ்வாரம். Loc. |
| பிராந்தி 1 | pirānti n. <>bhrānti 1. See பிராந்திஞானம். நல்லதுவும் தீயதுவாம் பிராந்தியினால் (சேதுபு. இராமனருச். 128). 2. Bewilderment; obscuration of the understanding, illusion; madness; 3. Care, anxiety; |
| பிராந்தி 2 | pirānti n. <>E. Brandy; சாராயம். |
| பிராந்தி 3 | pirānti n. Loose motion of bowels; பேதி. வாந்தியும் பிராந்தியும். (W.) |
| பிராந்திஞானம் | pirānti-āṉam n. <>பிராந்தி+. Illusion, incorrect perception; விபரீதவுணர்வு. (சி. போ. பா. 4, 2, பக். 98.) |
| பிராந்திமதலங்காரம் | pirāntimat-alaṅkāram n. <>bhrānti-mat+. (Rhet.) Figure of speech involving a confusion of one thing with another because of some similarity; ஒப்புமை பற்றிய மயக்கவணி. (அணியி. 6.) |
| பிராந்தியம் | pirāntiyam n. <>prānta. See பிராந்தம்1, 2. Colloq. . |
