Word |
English & Tamil Meaning |
|---|---|
| பிராரம்பம் | pirārampam n. <>prā-ram-bha. Beginning; தொடக்கம். Loc. |
| பிராவண்ணியம் | pirāvaṇṇiyam n. <>prāvaṇya. Love, attachment; ஈடுபாடு. (திவ். திருவாய். 6, 1, 2, பன்னீ.) |
| பிராவம் | pirāvam n. cf. prapā-vana. Garden, back-yard, enclosure; கொல்லை. (சது.) |
| பிராவிரச்சீயன் | pirāviraccīyaṉ n. prob. pravrajya. Ascetic; சன்னியாசி. வேதநெறியினைப் பெயர்த்துநின்ற பிராவிரச்சீயனும் (சிவதருபாவ. 71). |
| பிராறு | pirāṟu n. perh. பெருகு-+ஆறு. 1. Full river or tank; நிறைபுனல். (திவா.) 2. Water-course; |
| பிரான் | pirāṉ n. prob. பெரு-மை. cf. brhan nom. sing. of brhat. [M. pirān.] 1. Lord, king, chief, master; தலைவன். கோவணம் பூணுமேனும் பிரானென்பர் (தேவா. 640, 7). 2. God; 3. šiva; |
| பிரான்மலை | pirāṉ-malai n. <>பிரான்+. An ancient šiva shrine in Pāṇdya country; பாண்டி நாட்டிலுள்ள சிவதலங்களுள் ஒன்று. |
| பிரி 1 - தல் | piri- 4 v. [K. piri M. piriyuka.] intr. 1. To become disjoined or parted, unfastened; கட்டவிழ்தல். 2. To be split, as words into parts; 3. To vary, as pāl; to disagree, as persons; 4. To be untwisted as a rope; to be ripped or loosened, as a seam or texture; 5. To be classified, analysed; 6. To collect, realise, as a sum of money; 1. To part, separate, diverge; to quit, depart; 2. To think of, contemplate; |
| பிரி 2 - த்தல் | piri- 11 v. tr. Caus. of பிரி-. 1.[M. pirikka.] To separate, disunite, sever; பிரியச்செய்தல். பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் (குறள், 187). 2. (Math.) to divide; 3. To split, as words into parts; 4. [K. biru.] To untwist, untie, disentangle; 5. To solve, unravel, as a riddle; 6. To pull to pieces, dismantle, as the thatch of a roof; 7. To distribute, portion out; |
| பிரி 3 | piri n. 1. [T. M. piri.] Twist, strand, wisp; புரி. 2. Long rooted arum; |
| பிரிகதிர்ப்படு - தல் | piri-katir-p-paṭu- v. intr. <>பிரி-+கதிர்+. To be scattered, destroyed; கேடுறுதல். ஒன்றும் பிரிகதிர்ப்படாமே . . . ரக்ஷிசித்த நம் கண்ணன் (ஈடு, 2, 2, 1). |
| பிரிச்சல் | piriccal n. See பிரிசல். (யாழ். அக.) . |
| பிரிசம் | piricam n. <>priya. Scarcity, dearth; பொருளின் அருமை. (W.) |
| பிரிசல் 1 | pirical n. See பிரிசம். (W.) . |
| பிரிசல் 2 | pirical n. <>பிரி-. 1. Division; partition; பாகம். Colloq. 2. Threadbare or tattered condition; |
| பிரிசாரம் | piricāram n. perh. பிரியம் + சார்-. 1.Making oneself dear; தன்னைப் பிரியப் பொருளாகக் காட்டிக்கொள்ளுகை. Loc. 2. Urging vehemently; |
| பிரிசாலம் | piricālam n. See பிரிசாரம், 2. (W.) . |
| பிரிசாலம்பிடி - த்தல் | piricālam-piṭi- v. tr. <>பிரிசாலம்+. To urge vehemently, trouble; வற்புறுத்துதல். (W.) |
| பிரிதல் | pirital n. <>பிரி1-. (Akap.) Theme of separation of a lover from his lady-love, appropriate to pālai-t-tiṇai, one of five uri-p-poruḷ, q.v.; உரிப்பொருள் ஐந்தனுல் பாலைத்திணைக்குரிய தலைவன் தலைவியர் ஒருவரையொருவர் நீங்கியிருக்கை. (தொல். பொ. 14.) |
| பிரிதி 1 | piriti n. A Viṣṇu shrine in the Himalayas now called Nanda-prayāga; இமயத் திலுள்ள நந்தப்பிரயாகை என்ற விஷ்ணுஸ்தலம் (திவ்.பெரியதி, 1, 2, 1.) |
| பிரிதி 2 | piriti n. See பிரீதி. கண்டார் மனமேவிய பிரிதியானை (தேவா. 1208, 5). |
| பிரிந்திசை | pirinticai n. <>பிரி-+இசை-. A rhythm in verse; செய்யுளோசைவகை. |
| பிரிந்திசைக்குறள் | pirinticai-k-kuṟal n. <>பிரிந்திசை+. (Poet.) Ampōtaraṅkam, one of the seven members of ottāḻicai-k-kalippā; ஒத்தாழிசைக் கலியுறுப்பினூள் ஒன்றாகிய அம்போதரங்கம். (வீரசோ. யாப். 11, உரை.) |
| பிரிந்திசைத்துள்ளல் | pirinticai-t-tuḷḷal n. <>id.+. (Poet.) A kind of rhythm peculiar to Kali verse; பலதளையும் விரவிவரும் கலிப்பாவோசைவகை. (காரிகை, செய். 1). |
