Word |
English & Tamil Meaning |
|---|---|
| பரிந்திசைத்தூங்கல் | pirinticai-t-tūṅkal n. <>id.+. (Poet.) A kind of rhythm peculiar to vaci verse; பலதளையும் விரவிவரும் வஞ்சிப்பாவோசைவகை. (காரிகை, செய். 1. உரை.) |
| பிரிநிலை | piri-nilai n. <>பிரி1-+. (Gram.) Exclusion; வேறுபடுத்திக்காட்டும் நிலை. (தொல். சொல். 258, உரை.) |
| பிரிநிலைநவிற்சியணி | pirinilai-naviṟciy-aṇi n. <>பிரிநிலை + நவிற்சி+. (Rhet.) A figure of speech in which a noun is given its etymological sense; பெயர்ச்சொற்களுக்கு உறுப்பாற்றலால் மற்றெரு பொருளைத்தந்து உரைப்பதாகிய அணிவகை. (அணியி. 97.) |
| பிரிநிலையெச்சம் | pirinilai-y-eccam n. <>id.+. 1. (Gram.) A sentence in which a sense of exclusion is implied ; பிரிக்கப்பட்டப் பொருள் விளங்கக்கூறப்பெறாமல் எஞ்சிநிற்கும் வாக்கியம். (தொல். சொல். 431, சேனா.) 2. (Gram.) Word or words that are implied in a sentence; |
| பிரிப்பு | pirippu n. <>பிரி1-. 1. Separation, division; பிரிவு. 2. Estrangement; |
| பிரிபு | piripu n. <>id. See பிரிவு. என்று மென்றோள் பிரிபறி யலரே (இலக். வி. 580, உரை). |
| பிரிபொருட்சொற்றொடர் | piri-poruṭcoṟṟoṭar n. <>id.+ பொருள்+. (Rhet.) Incoherent combination of words in a poem, considered a blemish; ஒன்றாத பொருளையுடைய தொடராலாகிய பா வழு. (இலக். வி. 691.) |
| பிரிமணை | piri-maṇai n. Corr. of புரிமணை. Colloq. . |
| பிரிமொழிச்சிலேடை | piri-moḻi-c-cilēṭai n. <>பிரி-+மொழி+. (Rhet.) A phrase or sentence in which a cilēṭai is brought out by dividing it into different words, one of two See cilēṭai, q.v.; பிரிக்கப்பட்டுப் பலபொருள் பயக்குஞ் சொற்றொடர். (தண்டி. 75, உரை.) |
| பிரியக்கடைபண்ணு - தல் | piriya-k-kaṭaipaṇṇu- v. tr. <>பிரியம்+. To exaggerate the value of a thing, as in a bargain; தன்னுடையதை அருமைப்பண்டமாக்கிக் கூறுதல் அவன் பிரியக்கடை பண்ணுகிறான். Loc. |
| பிரியகம் | piriyakam n. <>priyaka. 1. Seaside Indian oak. See கடம்பு. (மலை.) 2. Indian kino tree; |
| பிரியங்காட்டு - தல் | piriyaṅ-kāṭṭu- v. intr. <>பிரியம்+. To express love or fondness; அன்புவெளிப்படுத்துதல். |
| பிரியங்கு | piriyaṅku n. <>priyaṅgu. A shrub; See ஞாழல். (நாமதீப. 322.) |
| பிரியசத்தியம் | piriya-cattiyam n. <>priya + satya. Delightful conversation; இனிய சம்பாஷணை. (யாழ். அக.) |
| பிரியசந்தேசம் | piriyacantēcam n. <>priya-sandēsa. Champak; சண்பகம். (சங். அக.) |
| பிரியசிநேகிதன் | piriya-cinēkitaṉ n. <>priya+. Beloved friend; உற்ற நண்பன். |
| பிரியதத்தம் | piriya-tattam n. <>id.+. See பிரியதத்தமந்திரம் (W.) . |
| பிரியதத்தமந்திரம் | piriya-tatta-mantiram n. <>பிரியதத்தம்+. Ave Mary, a devotional recitation; கதோலிக் கிறிஸ்தவர் வழங்கும் மந்திரவகை. R. C. |
| பிரியதரிசி | piriyataraci n. <>pirya-daršin. A Buddha; புத்தருள் ஒருவர். (மணி. 30, 14, குறிப்பு.) |
| பிரியதரிசினி | piriyatariciṉi n. <>priyadaršinī. Indian mesquit tree; See வன்னி (சங். அக.) |
| பிரியநாயகி | piriya-nāyaki n. <>prīya+. Beloved wife; அன்புள்ள மனைவி. |
| பிரியப்படுத்து - தல் | piriya-p-paṭuttu- v. tr. <>பிரியம்+. 1. To please, gladden; மகிழ்வித்தல். 2. To humour, soothe, flatter; 3. See பிரியக்கடைபண்ணு-. (W.) |
| பிரியம் | piriyam n. <>priya. 1. Pleasure, delight; acceptableness; attraction; விருப்பம். 2. Love, fondness; partiality; endearment; 3. Scarcity, dearth, opp. to cavaṭam; 4. Thing desired; |
| பிரியம்பண்ணு - தல் | piriyam-paṇṇu- v. tr. <>பிரியம்+. 1.See பிரியப்படுத்து-, 3. . 2. To give oneself airs; |
| பிரியலர் | piriyalar n. <>பிரி1-+அல் neg.+. Friends, as persons who would not be separated; [ஒருவரையொருவர் பிரியாதார்] நண்பர். |
| பிரியவசனம் | piriya-vacaṉam n. <>priya+. Sweet, pleasant words; இன்பமான சொல். |
| பிரியன் | piriyaṉ n. <>priya. 1. One who loves; அன்புள்ளவன். பிரியரா மடியவர்க் தணியர் (தேவா. 558, 9). 2. Beloved husband; |
