Word |
English & Tamil Meaning |
|---|---|
| பிரியாதி | piriyāti n. <>U. faryādi. Complainant; வாதி. (C. G.) |
| பிரியாது | piriyātu n. <>U. faryād. See பிராது. Loc. . |
| பிரியாம்பு | piriyāmpu n. <>priyāmbu. Mango; மாமரம். (சங். அக.) |
| பிரியாவிடை | piriyā-viṭai n. <>பிரி1-+ஆ neg.+. Leave-taking, farewell; உள்ளம் பிரியாதே விடைபெறுகை பிரியாவிடைகொண்டு (அருட்பா, vi, குடும்ப. முயற்சி. 37). |
| பிரியாவுடையாள் | piriyā-v-uṭaiyāḷ n. <>id.+ ஆ neg.+. Goddess Parvatī, as inseparable from šiva; [சிவபிரானைப்பிரியாதவள்] பார்வதிதேவி. |
| பிரியாளம் | piriyāḷam n. <>priyāla. Bowstring hemp. See மரல். (நாமதீப. 331.) |
| பிரியை | piriyai n. <>priyā. 1. Wife; மனைவி. பின்னாட் பிரியன் பிரியை யென்றாயினம் (தனிப்பா.) 2. Woman, lady; |
| பிரிவரும்புள் | pirivarum-puḷ n. <>பிரிவு + அரு-மை+. A bird; இருதலைப்புள். பிரிவரும்புள்ளி னொருமையி னொட்டி (பெருங். இலவாண. 14, 66). |
| பிரிவனை | pirivaṉai n. Division, partition. See பிரிவு, 2. (யாழ். அக.) |
| பிரிவாற்றாமை | pirivāṟṟāmai n. <>பிரிவு+. Impatience of separation, as of lovers; தலைவன் பிரிவைத் தலைவி பொறுக்க முடியாமை (குறள், 116, அதி.) |
| பிரிவிலசைநிலை | pirivil-acainilai n. <>id.+ இல் neg.+. Expletives used in pairs, as āka āka; தனியே வழங்காது இரட்டித்தே நிற்கும் அசை நிலை. (தொல். சொல். 280, சேனா.) |
| பிரிவினை | piriviṉai n. <>பிரி1-. See பிரிவு, 1, 3, 4, 8. Colloq. . |
| பிரிவு | pirivu n. <>பிரி1-. 1. [M. pirivu.] Separation, severance; பிரிகை இன்னா மரீஇஇப் பின்னைப் பிரிவு (நாலடி, 220) 2. (Arith.) Division; 3. Partition; 4. Disunion, disagreement, dissension; 5. Section; chapter, as of a book; paragraph; 6. Loosening; ripping, parting; 7. Secession, schism; 8. distinction, difference; 9. Gap; interspace; |
| பிரிவுக்கட்டை | pirivu-k-kaṭṭai n. <>பிரிவு+. Division dam; நிரோட்டத்தைப் பிரிக்கும் மதகு. (C. E. M.) |
| பிரீதி | pirīti n. <>prīti. 1. Fondness, love; பட்சம். 2. Acceptableness, agreeableness; 3. Joy, pleasure, happiness; 4. (Astron.) A division of time, one of 27 yōkam, q.v.; |
| பிரீதிதத்தம் | pirīti-tattam n. <>id.+. Gifts made to a bride by her father-in-law or mother-in-law, which constitute her separate property, a variety of strī-dhana (R. F.); மாமன் மாமி இவர்களால் மணமகட்கு அன்புடன் கொடுக்கப்பட்ட நன்கொடை. (W. G.) |
| பிரீதிதரம் | pirīti-taram n. <>id.+. (Jaina.) One of three walls surrounding camavacaraṇam; சமவசரணத்தைச் சுற்றியுள்ள மும்மதில்களுள் ஒன்று. (திருநூற். 18, உரை.) |
| பிரீதிதானம் | pirīti-tāṉam n. <>id.+. Gift made to a bride by her relatives and friends at the time of marriage; மணத்தில் உறவினர் நண்பர்களால் மணமகட்கு அளிக்கப்படும் நன்கொடை. |
| பிரு | piru n. prob. brhatī. Brinjal. See கத்தரி. (மலை.) |
| பிருக்கம் | pirukkam n. cf. brkka. Kidney; மூத்திரகோசம். (M. L.) |
| பிருகச்சாபாலம் | pirukaccāpālam n. <>Brhaj-jābāla. An Upaniṣad, one of 108; நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று. |
| பிருகத்கதை | pirukat-katai n. <>brhatkathā. A legendary story written by Guṇādhya, in Paišāci language, the original source of Peru-ṅ-katai; பெருங்கதைக்கு முதனூலானதும் குணாட்டியரால் பைசாசமொழியில் இயற்றப்பட்டதுமான நூல். |
| பிருகத்சங்கிதை | pirukaṭ-caṅkitai. n. <>Brhat-samhitā. A treatise, mainly astronomical, by varāhamihira; வராஹமிகிரரால் இயற்றப்பட்ட வானசாஸ்திர முதலியன அடங்கிய நூல். |
| பிருகத்பீசம் | pirukat-pīcam n. <>brhat+. Hydrocele; பெருத்த அண்டம். Brāh. |
| பிருகதாரணியம் | pirukatāraṇiyam n. <>Brhad-āraṇyaka. An Upaniṣad, one of 108; நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று. |
| பிருகதி | pirukati n. <>brhatī. 1. Brinjal. See கத்தரி. (மலை.) 2. Mango; 3. See பிருகதீ. (சங். அக.) |
| பிருகதீ | pirukatī n. <>brhatī. A kind of lute; ஒருவகை வீணை. (தக்கயாகப். 623, விசேடவுரை.) |
