Word |
English & Tamil Meaning |
|---|---|
| பிள்ளைப்பிறை | piḷḷai-p-piṟai n. <>id.+. Crescent moon; இளம்பிறை. (சீவக. 2390, உரை.) |
| பிள்ளைப்பூச்சி | piḷḷai-p-pūcci n. <>id.+. Gryllo-talpa, a genus of insects, including crickets, which live in mud; சேற்றில் வாழும் பூச்சிவகை. கொட்டினால் தேள். கொட்டாவிட்டால் பிள்ளைப்பூச்சி. |
| பிள்ளைப்பெட்டி | piḷḷai-p-peṭṭi n. <>id.+. [M. piḷḷappeṭṭi.] Small box; சிறுபெட்டி. Loc. |
| பிள்ளைப்பெயர்ச்சி | piḷḷai-p-peyarcci n. <>id.+. 1. (Pūṟap.) Theme describing the march, in spite of evil omens, of a youthful warrior to battle and the meed of praise he receives from his king; பிள்ளைத்தன்மையுள்ள போ£வீரனொருவன் தீநிமித்தங்களுக்கு அஞ்சாது போருக்குச் செல்வதையும் அதற்காக அரசன் அவனைப் புகழ்வதையுங் கூறும் புறத்துறை. (புறநா. 259.) 2. (Puṟap.) |
| பிள்ளைப்பெருமாளையங்கார் | piḷḷai-p-perumāḷ-aiyaṅkār n. <>id.+. The author of Aṣṭa-p-pirapantam; அஷ்டப்பிரபந்த மியற்றிய ஆசிரியர். |
| பிள்ளைப்பெற்றாள்தீட்டு | piḷḷai-p-peṟṟāl-tīṭṭu n. <>id.+ பெறு-+. Ceremonial pollution attaching to the members of a household in connection with a child-birth in their house; பிரசவத்தால் நேரும் ஆசௌசம். |
| பிள்ளைப்பேறறிந்தவள் | piḷḷai-p-pēṟaṟin-tavaḷ n. <>பிள்ளைப்பேறு+. Midwife; மருத்து வச்சி. (W.) |
| பிள்ளைப்பேறு | piḷḷai-p-pēṟu n. <>பிள்ளை+. 1. Childbirth; பிரசவம். Loc. 2. Children, considered a blessing; |
| பிள்ளைபெற்றவீடு | piḷḷai-peṟṟa-vīṭu; n. <>id.+பெறு-+. House where a child is born, considered to be under pollution; குழந்தைபிறந்ததனால் தீட்டுடைய வீடு. (W.) |
| பிள்ளைபெறாதமலடி | piḷḷai-peṟata-malaṭi; n. <>id.+ id.+ ஆ neg.+. 1. Barren woman; பிள்ளைபெறாதவள். 2. Merciless woman; |
| பிள்ளைமருந்து | piḷḷai-maruntu n. <>id.+. Sweet flag. See வசம்பு. Loc. |
| பிள்ளைமாபிரபு | piḷḷai-mā-pirapu n. <>id.+ mahā-prabhu. Nobleman, eminent person; பெருமையிற் சிறந்தோன். (J.) |
| பிள்ளைமார் | piḷḷaimār n. <>id. 1. People of the Vēḷāḷa caste; வேளாளர். (G. Tn. D. I, 139.) 2. Respectable men, gentlemen; |
| பிள்ளைமை | piḷḷaimai n. <>id. 1. Childhood; childishness; பிள்ளைத்தன்மை. அளவில் பிள்ளைமை யின்பத்தை (திவ். பெருமாள். 7, 4). 2. Childish innocence; |
| பிள்ளையன் 1 | piḷḷaiyaṉ n. <>id.+ ஐயன். Title of certain Vēḷāḷa chieftains; வேளாளத்தலைவர் சிலர்க்கு வழங்குஞ் சிறப்புப்பெயர். வடமலையப்பபிள்ளையன். Tinn. |
| பிள்ளையன் 2 | piḷḷaiyaṉ n. <>id.+அன் suff. Youth; வாலிபன். மேவா ருயிருணங்க மேன்முடித்த பிள்ளையன் (பு. வெ. 2, 8). |
| பிள்ளையாட்டு | piḷḷai-y-āṭṭu n. <>id.+. (Puṟap.) Theme describing the citizens rejoicing at the valour of a victorious prince and bestowing the kingdom upon him to the acompaniment of drums; வாளாற்பொருது மேம்பட்ட அரசிளங்குமரனைக் கண்டு அந்நாட்டிலுள்ளார் உவந்து பறையொலிக்க அரசு கொடுத்தலைக் கூறும் புறத்துறை. (தொல். பொ. 60.) |
| பிள்ளையாண்டான் | piḷḷai-y-āṇṭāṉ n. <>id.+. Young man, youth, boy, lad; வாலிபன். |
| பிள்ளையாண்டிரு - த்தல் | piḷḷai-y-āṇṭiru- v. intr. <>id.+ஆள்-+. To be pregnant; கருப்பமாயிருத்தல். Brāh. |
| பிள்ளையார் | piḷḷaiyār n. <>id. 1. Son, used honorifically; மகன். பிள்ளையார் அவதரிக்க (சீவக. 218, உரை). 2. [M.piḷḷayār, Tu. piḷḷāri.] Gaṇēša; 3. Skanda; 4. The child-saint Sambandhamūrti; 5. Man with a big belly, used in contempt; 6. Cant for 100 or 1000; |
| பிள்ளையார்சதுர்த்தி | piḷḷaiyār-caturtti n. <>பிள்ளையார்+. A festival in honour of Gaṇēša. See விநாயகசதுர்த்தி. |
| பிள்ளையார்சவுதி | piḷḷaiyār--cavuti n. <>id.+ T. cauti See பிள்ளையார்சதுர்த்தி. Loc. . |
| பிள்ளையார்சுழி | piḷḷaiyār-cuḻi n. <>id.+. A propitiatory mark made at the commencement of any writing; எழுதத் தொடங்குங்கால் மங்கலமாக வரையப்படும் 'உ' என்ற குறி. |
| பிள்ளையார்பந்து | piḷḷaiyār-pantu n. <>id.+. Game of setting up a brick on the ground as a target and trying to knock it down with a ball; கல்லை நிறுத்தி அதன்மேற் பந்தெறிந்து ஆதும் பிள்ளைவிளையாட்டுவகை. |
