Word |
English & Tamil Meaning |
|---|---|
| பிறந்தமேனி | piṟanta-mēṉi n. <>id.+. 1. See பிறந்தகோலம். Colloq. . 2. Genuineness; spotless simplicity, as of a child; |
| பிறந்தவம் | piṟantavam n. <>id. Birth, nativity; பிறப்பு. (சது.) |
| பிறந்தவழிக்கூறல் | piṟanta-vaḻi-k-kūṟal n. <>id.+ A kind of metonymy; இடத்து நிகழ்பொருளை இடத்தாற் கூறும் ஆகுபெயர்வகை (தொல். சொல்.110, தெய்வச்.) |
| பிறந்தை | piṟantai n. <>id. 1. Birth. See பிறவி. பிறந்தை யினத்தின் மாண்டோ ரீடே (ஞானா.39, 9.) . 2. Distress; 3. Sin; 4. Nature; natural state; 5. Birthplace; |
| பிறநூன்முடிந்ததுதானுடன்படுதல் | piṟa-nūṉ-muṭintatu-tāṉ-utṭaṉpaṭutal n. <>பிற+. (Gram.) Acquiescence in the conclusions of a work other than one's own, one of 32 utti, q.v.; முப்பத்திரண்டு உத்திகளுள் பிறநூல்களின் முடிபுக்குத் தான் உடம்படும் உத்தி. (நன். 15.) |
| பிறப்பார் | piṟappār n. A sticky plant that grows best in sandy tracts. See நாய் வேளை. (மலை.) . |
| பிறப்பிடம் | piṟappiṭam n. <>பிறப்பு+. Place of one's birth; place of origin; பிறந்த இடம். |
| பிறப்பிலி | piṟappili n. <>id.+. 1. God, as unborn; [பிறப்பில்லாதவன்] கடவுள். அறவன் பிறப்பிலி (திருமந். 1616). 2. One without brother or sister; |
| பிறப்பிறப்பு | piṟappiṟappu n. <>id.+. Birth and death; சனனமரணம். பிறப்பிறப்பு மூப்புப் பிணிதுறந்து (திவ். இயர். பெரியதி. 80). |
| பிறப்பு | piṟappu n. <>பிற-. [M. piṟappu.] 1. Birth, nativity; சனனம். விழிப்பது போலும் பிறப்பு (குறள், 339). 2. Origin, production; 3. Order or class of beings including animals and vegetables; caste; 4. Beginning, commencement, as of a month or a year; 5. Brother or sister; 6. Necklace of small seed-like gold pieces; 7. (Pros.) A formula of a foot of one nirai-y-acai followed by a nēr-acai ending in n, occurring as the last foot of a veṇpā; 8. Fear, alarm; 9. Confusion, bewilderment; 10. Closeness, thickness, denseness; |
| பிறப்புத்தொந்தம் | piṟappu-t-tontam n. <>பிறப்பு+. Inherited characteristics; வமிசபரம்பரையாய் ஒருவனுக்கு உண்டாம் குணதோஷங்கள். (J.) |
| பிறப்புவழி | piṟappu-vaḻi. n. <>id.+. (W.) 1. Family line, lineal descent; வமிசாவளி. 2. Hereditary disposition; |
| பிறப்புவாசி | piṟappu-vāci n. <>id.+. That which is inherent, innate or natural; பிறவிச்சுபாவம். (W.) |
| பிறபொருள்வைப்பு | piṟa-poruḷ-vaippu n. <>பிற+. (Rhet.) A figure of speech. See வேற்றுப்பொருள்வைப்பு. (வீரசோ. அலங். 11.) |
| பிறமுகம்பார் - த்தல் | piṟa-mukam-pār- v. intr. <>id.+. Lit., to look at a strange face. [அன்னியமுகத்தைப் பார்த்தல்] 1. To seek the favour of another; 2. To commit adultery; |
| பிறர் | piṟar n. <>id. Outsiders, strangers; அன்னியர் பிறர்க் கின்னா முற்பகற் செய்யின் (குறள்.319) |
| பிறர்துயர்காத்தல் | piṟar-tuyar-kāttal n. <>பிறர் + துயர்+. Helping others in their distress, redressing grievances, one of muppattiraṇṭaṟam, q.v.; முப்பத்திரண்டறங்களுள் பிறர்க்கு வந்த துன்பத்தை நீக்குகை. (பிங்.) |
| பிறர்பொருட்டனுமானம் | piṟar-poruṭ-ṭ-aṉumāṉam n. <>id.+. (Log.) Inference employed to enlighten others, opp. to taṉporuṭ-ṭ-aṉumāṉam; பரார்த்தானுமானம். (சி. சி. அளவை, 8, சிவாக்.) |
| பிறர்பொருட்டனுமிதி | piṟar-poruṭṭ-aṉumiti n. <>id.+. (Log.) Knowledge derived from piṟar-poruṭṭamumāṉam opp. to taṉporuṭ-ṭ-aṉumiti; பரார்த்தானுமிதி. |
| பிறரோகி | piṟarōki n. cf. palāšī. Wormkiller, woody climber. See வறட்சுண்டி. (மலை.) |
| பிறவாநெறி | piṟa-v-ā-neṟi n. <>பிற-+ ஆneg.+. Salvation, as freeing one from birth; மோட்சம். பிறவாநெறி தந்த பேரருளன் (திருமந்.1803). |
