Word |
English & Tamil Meaning |
|---|---|
| பிறவு | piṟavu n. <>பிற-. See பிறவி. பிறவினோடிறவுமானான் (தேவா. 447, 1) . . |
| பிறழ் - தல் | piṟaḻ- 4 v. intr. 1. To vary, change in form, aspect, colour or quality; மாறுதல். சிறுகா பெருகா முறைபிறழ்ந்து வாரா (நாலடி, 110). 2. To be irregular, misplaced, out of order; 3. To break one's word; 4. To lie in disorder; 5. To flop, leap, as fish; 6. To move; 7. To be dislodged, dislocated; 8. To shine, glitter; to twinkle; 9. To break, as waves into foam; 10. To be preplexed; 11. To tremble; to be tremulous; 12. To die; |
| பிறழ்ச்சி | piṟaḻcci n. <>பிறழ்-. 1. Change, variation, alteration in form or quality; மாறுகை. 2. Disarrangement, irregularity, disorder; 3. Breaking of a promise; 4. Movement; 5. Sheen, glitter; 6. Shivering, quaking, trembling; |
| பிறழ்வு | piṟaḻvu n. See பிறழ்ச்சி. . |
| பிறள் | piṟaḷ n. Fem. of பிறன் nother woman, some other woman; மற்றவள். பிறள் குணமிவை (தொல். பொ. 234). |
| பிறளி | piṟaḷi n. <>புரள்-. A disease; நோய்வகை. (மாட்டுவா.) |
| பிறளியெண்ணெய் | piṟaḷi-y-eṇṇey n. <>பிறவி+. A medicinal oil used as purgative for children; குழந்தைகட்குக் கொடுக்கும் விரேசன மருந்தெண்ணெய்வகை. Colloq. |
| பிறன் | piṟaṉ n. <>பிற. [M. piṟan.] 1. Another man, some other man; மற்றையான். பிறன்கடை நின்றாரிற் பேதையாரில் (குறள்.142). 2. Stranger, alien; 3. Neighbour; 4. Estranged person; 5. Enemy; |
| பிறன்கோட்கூறல் | piṟaṉ-Kōṭ-Kūṟal n. <>பிறன்+கோள்+. (Gram.) Quoting the opinion of another, one of 32 utti, q.v.; முப்பத்திரண்¢டு உத்திகளுள் பிறன்கொள்கையைக் கூறும் உத்தி. (நன்.15.) |
| பிறன்பொருளாள் | piṟaṉ-poruḷāḷ n. <>id.+. Wife of another, considered his property; பிறன் மனைவி. பிறன் பொருளாட் பெட்டொழுகும் பேதைமை (குறள், 141). |
| பிறன்மனை | piṟaṉ-maṉai n. <>id.+. 1. Another's house; அயலான் வீடு. 2. Another's wife; |
| பிறனில் | piṟaṉ-il n. <>id.+. See பிறன்மனை. பிறனில்புகல் (குறல், 144). பிறனில் விழையாமை (குறள், அதி. 15). . |
| பிறாக்காண்டம் | piṟakkāṇṭam n. A natural arsenic. See சரகாண்டபாஷாணம். (யாழ். அக.) |
| பிறாண்டு | piṟāṇṭu adv. <>பிற+ஆண்டு. Elsewhere; பிற இடம். தலைவன் ஆண்டும் பிறாண்டும் கூறுங்கூற்றும் (தொல். பொ. 41). |
| பிறாண்டு - தல் | piṟāṇṭu- 5 v. tr. <>புறண்டு-. To scratch, as with nails; நக முதலியவற்றாற் கீறுதல். |
| பிறாண்டு | piṟāṇṭu n. <>பிறாண்டு-. Scratch; நகக்கீறு. ருஷபங்கள் கார்பிறாண்டு கொள்ளுதல். (திருவிருத். 7, அரும். பக். 61). |
| பிறாமுட்டி | piṟāmuṭṭi n. cf. புறாமுட்டி. 1. Indian madder. See சாயவேர். (மலை.) . 2. Sticky mallow; 3. Sickle-leaf; |
| பிறி - தல் | piṟi- 4 v. intr. & tr. See பிரி1 பிறிவிலாத வைந்தொழில் (காஞ்சிப்பு. இருபத். 185). . |
| பிறி - த்தல் | piṟi- 11 v. tr. Caus. of பிறி1-. See பிரி2-. . |
| பிறிகதிர்ப்படு - தல் | piṟi-katir-p-paṭu- v. intr. cf. பிரிகதிர்ப்படு-. 1. To be scattered; to be damaged; கெடுதல். அவற்றில் ஒன்றும் பிறிகதிர்ப்படாதபடி (ஈடு, 1, 9, 4). 2. To be separated, excluded, lost; |
| பிறிதி | piṟiti n. & adj. See பிரதி. (யாழ். அக.) . |
| பிறிதின்கிழமை | piṟitiṉ-kiḻamai n. <>பிறிது+. (Gram.) Separable relation of a possessor and the thing possessed when the latter is not a limb or part of the former; ஒரு பொருளுக்கும் அதன் அங்கமாகாத பிறபொருளூக்கும் உள்ள வேறுபாட்டுச் சம்பந்தம். தற்கிழமையும் பிறி தின்கிழமையும் (நன். 300). |
