Word |
English & Tamil Meaning |
|---|---|
| பிறவி | piṟavi n. <>id.+ [M. piṟavi.] 1. Birth; பிறப்பு. பிணிபிறவி கேடென்று (தேவா 935, 1). 2. See பிறப்பு, 2, 5. (W.) 3. Natural disposition; 4. Transmigration, subjection of the soul to births; |
| பிறவிக்கடல் | piṟavi-k-kaṭal n. <>பிறவி+. Ocean of births; பிறவியாகிய சமுத்திரம். புணைவன் பிறவிக்கடனீந்துவார்க்கே (திவ். திருவாய். 2, 8, 1). |
| பிறவிக்குணம் | piṟavi-k-kuṇam n. <>id.+. 1. Natural disposition; சுபாவம். 2. Innate characteristics, due to the influence of previous births; |
| பிறவிக்குருடன் | piṟavi-k-kuruṭaṉ n. <>id.+. One born blind; பிறந்ததுதொட்டே கண்தெரியாதவன். |
| பிறவிகளறவுரை | piṟavikaḷ-aṟavurai n. <>id.+. (Jaina.) Teacher's words revealing past births; முற்பிறவியைக் கூறுகின்ற அறவோர் உரை (சீவக. 2848, தலைப்பு.) |
| பிறவிச்சுபாவம் | piṟavi-c-cupāvam n. <>id.+. Natural disposition; சென்மவியல்பு. Colloq. |
| பிறவிச்செல்வம் | piṟavi-c-celvam n. <>id.+. The state of being born with a silver spoon in one's mouth; கருவிலேயுற்ற திரு. |
| பிறவிடுதி | piṟa-viṭuti n. <>பிற+. Staying at another's house before a journey. See பரஸ்தானம். (W.) |
| பிறவித்துயர் | piṟavi-t-tuyar n. <>பிறவி+. 1. The misery of births; பிறக்கையாகிய துன்பம் பிறவித்துயரற (திவ். திருவாய். 1, 7, 1). 2. Distress caused by bereavement of a brother or sister; |
| பிறவித்துவந்தம் | piṟavi-t-tuvantam n. See பிறவித்தொந்தம். (W.) . |
| பிறவித்துழதி | piṟavi-t-tuḻati n. <>பிறவி+. See பிறவித்துயர். பிறவித்துழதி நீங்க (திவ். திருவாய். 2, 7, 7). . |
| பிறவித்தொந்தம் | piṟavi-t-tontam n. <>id.+. Congenital failings, as fretfulness, impatience; சனனசுபாவம். (W.) |
| பிறவிநோய் | piṟavi-nōy n. <>id.+. (W.) 1. Congenital disease; பிறப்பிலுண்டான பிணி. See பிறவித்துயர், 1. |
| பிறவிப்பயன் | piṟavi-p-payaṉ n. <>id.+. Object of one's birth; achievement in life; சனனபலன். |
| பிறவிப்பாஷாணம் | piṟavi-p-pāṣāṇam n. <>id.+. 1. Mineral poison, especially arsenic in its natural state, of which there are 32 kinds, viz.., aṅkiramāti-pāṣāṇam, acaṉa-pāṣāṇam, appiraka-pāṣāṇam, avupala-pāṣāṇam, iliṇka-pāṣāṇam, kantaka-pāṣāṇam, karaṭṭu-t-tāḷakam, அங்கிரமாதிபாஷாணம். அஞ்சனபாஷாணம், அப்பிரகபாஷாணம். அவுபலபாஷாணம் இலிங்கபாஷாணம், கந்தகபாஷாணம் கரட்டுத்தாளகம். கர்க்கடகபாஷாணம். கற்பரிபாஷாணம், கற்பாஷாணம், |
| பிறவிமலடி | piṟavi-malaṭi n. <>id.+. Barren or sterile woman; மலடி. Loc. |
| பிறவியாசாரம் | piṟavi-y-ācāram n. <>id.+. See பிறவியாரதம். (J.) . |
| பிறவியாரதம் | piṟavi-y-āratam n. <>id.+. Abstinence from flesh-eating from birth; இயற்கையிலேயே புலாலுண்ணாதிருக்கை. (J.) |
| பிறவிவேர் | piṟavi-vēr n. <>id.+. Worldly attachments, considered as the root of birth; ஆசை ஆசையென்கிற பிறவிவேர் (சீவக. 409, உரை). |
| பிறவினை 1 | piṟavi-viṉai n. <>பிற+. (Gram.) Causative verb, opp. to taṉ-viṉai; பிறரைக்கொண்டு செய்விக்குஞ் செயலையுணாத்தும் வினை. (தொல். எழுத். 76, இளம்பூ.) |
| பிறவினை 2 | piṟaviṉai n. perh. பிறவி+வினை. Sexual desire; காமம். (அக. நி.) |
