Word |
English & Tamil Meaning |
|---|---|
| பிறிதினவிற்சி | piṟitiṉaviṟci n. <>id.+ நவிற்சி. (Rhet.) Figure of speech by which an idea is expressed not directly but in an indirect or roundabout way describing the consequences involved; கருதியபொருளை அதற்குரிய நேர்வகையாற் கூறாது மற்றோருவகையாற் கூறும் அணிவகை (அணியி. 29). |
| பிறிதினியைபுநீக்கியவிசேடணம் | piṟitiṉ-iyaipu-nīkkiya-vicēṭaṇam n. <>id.+இயைபு+நீக்கு-+. (Gram.) Restrictive epithet; விசேடியம் தன்னினத்துப் பிறபொருளைக் குறிக்காது தடுக்கும் விசேடணம். (சீவக. 7, உரை.) |
| பிறிது | piṟitu n. <>பிற. [K. peṟatu.] Other thing; வேறானது. தம்மொடு செல்வதுமற் றியாங்கணும் தேரிற் பிறிதில்லை (நாலடி, 120). |
| பிறிதுசாபம் | piṟitu-cāpam n. <>பிறிது+. Release from a curse; சாபமாற்று. கொண்டல் வாகனனுக் கன்பிற் கொடுத்தனன் பிறிதுசாபம் (திருவாலவா1, 22). |
| பிறிதுபடுபாட்டு | piṟitu-paṭu-pāṭṭu n. <>id.+படு-+. (Rhet.) A stanza of a particular metre so constructed as to be capable of being scanned into a stanza of different metre; ஒரு செய்யுளைத் தொடையும் அடியும் வேறுபடஉரைத்தால் சொல்லும் பொருளும் வேறுபடாமற் பிறிதொருவகைச் செய்யுளாய் முடியும் மிறைக்கவி (மாறன. 291.) |
| பிறிதுமொழிதல் | piṟitu-moḻital n. <>id.+. (Rhet.) Figure of speech in which the idea of a subject-matter is sought to be conveyed suggestively by the description of another subject-matter resembling it ; கருதியபொருளை மறைத்து அதனைப் புலப்படுத்தற்கு அது போன்ற பிறிதொன்றனைக் கூறும் அணி. (தண்டி. 51.) |
| பிறிதுவிதி | piṟitu-viti n. <>id.+. Rule of exception, special rule; சிறப்புவிதி. (W.) |
| பிறியகம் | piṟiyakam n. <>priyaka. (மலை.) 1. Seaside Indian oak. See கடம்பு. 2. Peacock's-crest. 3. East Indian kino. |
| பிறியம் | piṟiyam n. See பிரியம். (யாழ். அக.) . |
| பிறியோலை | piṟi-y-ōlai n. <>பிறி2-+. Palm-leaf screen set between flocks of various shepherds; இடையர் ஆடுகளைப் பிரித்தற்குதவும் ஒலைத்தட்டி. (திணைமாலை. 113.) |
| பிறிவு | piṟivu n. See பிரிவு. பிறிவினை யறியா நிழலது போல (திருவாச. 4, 78). . |
| பிறை | piṟai n. <>பிற-. 1. [K. peṟe, M. piṟa.] Crescent moon; இளஞ்சந்திரன். பிறை மதி (குறள், 782). 2. A crescent-shaped ornament, owrn by women on the head; 3. (Nāṭya.) See பிறைக்கை. 4. A cresecent-like loop forming part of certain Tamil letters; |
| பிறைக்காய்ச்சல் | piṟai-k-kāyccal n. <>பிறை+. Intermittent fever occurring at monthly intervals; மாதத்துக்கு ஒருமுறை வரும் சுரநோய். Colloq. |
| பிறைக்கீறு | piṟai-k-kīṟu n. <>id.+. See பிறைச்சந்திரன். (W.) . |
| பிறைக்கை | piṟai-k-kai n. <>id.+. (Nāṭya.) A gesture in dancing, keeping the four fingers curved and close together and the thumb separated from them and outstretched; பெருவிரல் நீங்கிய விரல் நான்கும் ஒட்டிவளையப் பெருவிரலைமட்டும் விலகவைக்கும் இணையாவினைக்கை. (சீலப். 3, 18, உரை.) |
| பிறைக்கொழுந்து | piṟai-k-koḻuntu n. <>id.+. Crescent; இளம்பிறை. நெடுஞ்சடைக்கிடந்த குறும் பிறைக்கொழுந்தும் (கல்லா. 15, 23). |
| பிறைக்கோடு | piṟai-k-kōṭu n. <>id.+. Cusp of the crescent moon; பிறையின் நுனி. |
| பிறைச்சந்திரன் | piṟai-c-cantiraṉ n. <>id.+. Crescent moon, appearing on the third day after new moon; முன்றாம் பிறை. Colloq. |
| பிறைச்சிந்தாக்கு | piṟai-c-cintākku n. <>id.+T. cintāku. A kind of neck ornament ; கழுத்தணிவகை. (J.) |
| பிறைசூடி | piṟai-cūṭi n. <>id.+. šiva, as wearing the crescent; [பிறையைத் தலியில் அணிபவன்] சிவபிரான். பித்தா பிறைசூடீ (தேவா. 1001, 1). |
| பிறைத்தலையம்பு | piṟai-t-talai-y-ampu n. <>id.+ தலை+. Arrow with crescent-shaped head; அர்த்தசந்திரபாணம். பிறைத்தலையம்பிற் சென்னி பெருநிலத் திடுவல் (சீவக. 1142). |
| பிறைதொழு - தல் | piṟai-toḻu- v. intr. <>id.+. To worship the crescent moon; பிறைச்சந்திரனை வணங்குதல் பிறைதொழுகென்றல் (திருக்கோ. 67). |
| பிறைப்பூண் | piṟai-p-pūṇ n. <>id.+. See பிறைவடம். பிறைப்பூ ணகலத்துப் பெருமகன் (பெருங். வத்தவ. 10, 25). . |
