Word |
English & Tamil Meaning |
|---|---|
| பின்மோனை | piṉ-mōṉai n.<>id.+. (Pros.) A kind of mōṉai , in which the second foot and the last foot of a line of verse alliterate; இரண்டாஞ்சீரிலும் இறுதிச்சீரிலும் வரும் மோனை. (காரிகை, ஒழிபி. 5, உரை.) |
| பின்வயிறு | piṉ-vayiṟu n. <>id.+. Lean stomach; ஒட்டின வயிறு. Madr. |
| பின்வருநிலை | piṉ-varu-nilai n. <>id.+ வரு-. (Rhet.) A figure of speech in which expressions or ideas or both are repeated; முன்வந்துள்ள சொல்லும் பொருளும் தனித்தனியாயினுங் கூடியாயினும் பலவிடத்தும் பின்னும் வரும் அணிவகை. (தண்டி. 40.) |
| பின்வாங்கு - தல் | piṉ-vāṅku- v. intr. <>id.+. 1. To recede, draw back, retire; பின்போதல். அஞ்சிப் பின்வாங்கு மடி (நாலடி, 396). 2. To retreat, as in battle; to give way, as in a contest; 3. To withdraw; backslide, as from a bargain or an engagement; 4. To cease to live as a Christian; |
| பின்வேலப்பதேசிகர் | piṉ-vēlappa-tēci-kar n. <>id.+. A head of the Tiru-v-āvaṭuturai-y-ātīṉam, author of pacākkara-p-pak-ṟoṭai; பஞ்சாக்கரப்பஃறெடை இயற்றிய திருவாவடு துறையாதீனத்துத் தலைவர். |
| பின்றலை | piṉṟalai n. <>id.+ Back part of the head; தலையின் பின்புரம். செம்பொற் பட்டாம் பின்றலைக் கொளீஇ (பெருங். உஞ்சைக். 46, 235). |
| பின்றளை | piṉṟaḷai n. <>id.+. See பின்தளை. (யாழ். அக.) . |
| பின்றாலி | piṉṟāli n. <>id.+. A kind of necklace hanging over the back; முதுகு மறையத் தொங்குங் கழுத்தணிவகை. நவரத்தினங்களைக் கோத்து முதுகுமறையவிடும் பின்றாலி. (சிலப். 6, 102, அரும்.). |
| பின்றி | piṉṟi adv. <>பின்று-. Again, besides; மீள. பின்றியும் பீடும் பெருகும் (தேவா. 65, 7). |
| பின்று - தல் | piṉṟu- 5.v . intr. <>பின்2. 1. To retreat, fall behind; பின்னிடுதல். ஆற்றல் போகிப்பின்றினன் (கந்தபு. சிங்கமு. 175). 2. To fall below, in rank or quality; 3. To turn back; 4. To be far removed; 5. To go astray; 6. To change; to revert; |
| பின்று | piṉṟu adv. <>பின்று-. [K. pintu.] Afterwards; பின்பு. பின்று. சுக்கிர வாரமென்£றொரு பெரும் பெயராய் உபதேசகா. சிவவிரத. 322). |
| பின்றேர்க்குரவை | piṉṟēr-k-kuravai n. <>id.+ தேர்+. (Parap) Theme of koṟṟavai and Her retinue dancing in joy behind the chariot of a victorious king; இரதவீரரை வென்ற அரசனுடைய தேரின் பின்னேநின்று கொற்றவையும் கூளிச்சுற்றமும் களித்தாடுதலைக் கூறும் புறத்துறை. (தொல். பொ. 76 ). |
| பின்றை | piṉṟai <>பின்று. n. [K. pinte] Next day; morrow; பின்னைநாள். (பிங்.) --adv. After, afterwards, subsequently; |
| பின்றொடர் - தல் | piṉṟoṭar- v. tr. <>பின்2+. To follow, pursue; பின்பற்றுதல். |
| பின்றொடரி | piṉṟoṭari n. 1. A straggling shrub, in scrub jungles, l. sh., scutia indica; தொடரிவகை. 2. A plant; See திகைப்பூடு. (யாழ். அக.) 3. A plant; See ஆடையொட்டி. (சங். அக.) |
| பின்றோன்றல் | piṉṟōṉṟal n. <>பின்2 + தோன்று-. Younger brother; தம்பி. (பிங்). |
| பின்னகம் 1 | piṉṉakam n. <>பின்னு-. 1. Braided hair, as of a woman; பின்னின மயிர். பிடிக்கையன்ன பின்னகந் தீண்டி (அகநா. 9). 2. Hair-tuft of men; |
| பின்னகம் 2 | piṉṉakam n. <>bhinna-ka. 1. Estrangement; difference; பேதம். (யாழ். அக.) 2. Loose bowels; |
| பின்னகன் | piṉṉakaṉ n. <>bhinna-ka. One who causes estrangement or difference; பேதமுண்டுபண்ணுவோன் (யாழ். அக.) |
| பின்னகனம் | piṉṉa-kaṉam n. <> bhinna+. (Math.) Cube of a fraction; ஒரு பின்னத்தை அது கொண்டு பெருகிவந்த தொகையை மிண்டும் அப்பின்னங்கொண்டே பெருக்குவது. (யாழ். அக.) |
| பின்னகுடும்பம் | piṉṉa-kuṭumpam n. <>id.+. Divided family; பாகப்பிரிவினையான குடும்பம். Colloq. |
| பின்னகுணனம் | piṉṉa-kuṇaṉam n. <>id.+. (Math.) Square of a fraction; ஒரு பின்னத்தை அதுகொண்ட பெருக்குவது. |
| பின்னகோத்திரன் | piṉṉa-kōttiraṉ n. <>id.+ gōtra. One of a community but not belonging to the same gōtra; person of a different gōtra (R. F.); அந்நிய கோத்திரத்தான். |
