Word |
English & Tamil Meaning |
|---|---|
| பிக்ஷாடனம் | pikṣātaṉam n. <>id.+ aṭana. Going about for alms, mendicancy; பிச்சைக்காகத் திரிகை. |
| பிக்ஷாடனர் | pikṣāṭaṉar n. <>id.+. šiva in the guise of a mendicant; பிக்ஷாடனக்கோலங்கள் கொண்ட சிவமூர்த்தம். |
| பிக்ஷாபாத்திரம் | pikṣā-pāttiram n. <>id+. Begging bowl; இரப்போர் கலம். |
| பிக்ஷான்னம் | pikṣāṉṉam n. <>id.+ anna. Boiled rice given in alms; இரப்போர்க்கு இடுஞ்சோறு. |
| பிக்ஷூ | pikṣu n. <>bhikṣu. 1. A sanyāsi; சன்னியாசி. 2. (Buddh.) Monk; |
| பிக்ஷுணி | pikṣuṇi n. <>bhikṣuṇī. (Buddh.) A female mendicant; பௌத்தப்பெண்துறவி. |
| பிக்ஷை | pikṣai n. <>bhikṣā. See பிச்சை. . |
| பிக்ஷையரிசி | pikṣai-y-arici n. <>id.+. Rice offered by a married woman to a Brahmin bachelor just after the investiture of the sacred thread; பூணூற் கலியாணத்தில் உபநயனமானதும் பிரமசாரிக்குச் சுமங்கலி பிட்சையாக அளிக்கும் அரிசி Brāh. |
| பீ 1 | pī . The compound of ப் and ஈ . |
| பீ 2 | pī n. 1. [T. pīyi, K. M. pī.] Excremen, ordure, faeces; மலம் (நன். 178, உரை.) 2. Bloody drop ordure tree. See தொண்டி 3, 2. (L.) 3. Toothed-leaved tree of heaven. See பெருமரம். (L.) |
| பீ 3 | pī n. <>bhī. Fear; அச்சம். (யாழ். அக.) |
| பீக்கம் | pīkkam n. Nux vomica; எட்டிக்கொட்டை. (சங்.அக.) |
| பீக்கருவேல் | pī-k-karu-vēl n. <>பீ2+. 1. Pea-podded black babul. See உடைவேல். (L.) . 2. Pulpy-podded black babul, 1. sh., Acacia farnesiana; |
| பீக்கலாட்டம் | pīkkalāṭṭam n. <>K. pīkalāṭa. [T. pīkulāṭa.] . (W.) 1. Impediment, hindrance; தடை. 2. Trouble; |
| பீக்கலாத்தி | pīkkalātti n. See பீக்கலாத்தி. (யாழ். அக.) . |
| பீக்காக்கை | pī-k-kākkai n. <>பீ2+. Nilgiri blackbird, Merula simillima; கருநிறமுள்ள ஒருவகைப் பறவை. (M. M. 815.) |
| பீக்கார்த்திகை | pī-k-kārttikai n. perh. மீ+. The day succeeding tiru-k-kārttikai; திருக்கார்த்திகைக்கு அடுத்த நாள். Colloq. |
| பீக்கிலாத்தி | pīkkilātti n. Smooth volkameria. See சங்கங்குப்பி. (மலை.) . |
| பீக்குடல் | pī-k-kuṭal n. <>பீ2+. The intestines; மலக்குடல். |
| பீக்குருவி | pī-k-kuruvi n.<>id.+. White-headed babbler, See பன்றிக்குருவி. (M. M. 815.) . |
| பீக்குழி | pī-k-kuḻi n. <>id.+. Pit in the pallāṅkuḻi left empty in the course of a game; பல்லாங்குழியில் இடுதற்குக் காயில்லாமையால் வெறுமையாக விடப்படுங்குழி. Loc. |
| பீக்கை 1 | pīkkai n. [T. pīka.] That which is delicate of thin; இலேசானது. |
| பீக்கை 2 | pīkkai n. Purslane. See பசளை2 (சங். அக.) . |
| பீக்கை 3 | pī-k-kai n. <>பீ 2+. See பீச்சாங்கை. Loc. . |
| பீக்கொஞ்சி | pī-k-koci n. <>id.+perh. கொழுஞ்சி. Coromandel Eugene myrtle, 1. sh., Eugenia bracteata; செடிவகை. (A.) |
| பீகம் 1 | pīkam n. <>Persn. bīgam. A Muhammadan lady of rank; உயர்ந்த நிலையிலுள்ள முகம்மதியப்பெண். (W.) |
| பீகம் 2 | pīkam n. <>T.bīgam. [K. bīga.] 1. Padlock; பூட்டுவகை. 2. Key; |
| பீகமுத்திரை | pīka-muttirai n. <>பீகம்2+ mudrā. Seal upon the door, especially of a temple; பூஜாகாலமானபின் கோயிற்கதவையடைத்து இடும் முத்திரை. (கோயிலொ. 96.) |
| பீகரம் | pīkaram n. <>bhī-kara. Fright-fulness; பயங்கரமானது. |
| பீங்கான் | pīṅkāṉ n. <>Persn. piṅgān. Porcelain, chinaware; ஒருவகை மண்ணாற் செய்து சுடப்பட்ட பாத்திரம். பீங்கானுக்குட்பட்ட சந்தனபங்கம் (ஈடு, 7, 2, 1). |
| பீங்கான்மரம் | pīṅkāṉ-maram n. Indian almond; நாட்டுவாதுமை. (A.) |
| பீச்சக்கை | pīcca-k-kai n. See பீச்சாங்கை. Loc. . |
| பீச்சல் | pīccal n. <>பீச்சு-. 1. Looseness of the bowels; வயிற்றுக் கழிச்சல். Colloq. 2. Squirting, syringing; |
| பீச்சாக்கத்தி | pīccā-k-katti n. <>U. bichwā+. [M. pīccāṅkatti.] 1. Combined pocket knife and iron style; எழுத்தாணியமைந்த கைப்பிடியுள்ள கத்தி. (J.) 2. Long country knife; |
