Word |
English & Tamil Meaning |
|---|---|
| புகழ்ச்சோழநாயனார் | pukaḻ-c-cōḻa-nāyaṉār n. <>புகழ்+. A Cōḻa king, canonized šaiva saint, one of 63; நாயன்மார் அறுபத்து மூவருள் ஒருவரான சோழ அரசன். (பெரியபு.) |
| புகழ்த்துணைநாயனார் | pukaḻ-t-tuṇai-nāyaṉār n. <>id.+. A canonized šaiva saint, one of 63; நாயன்மார் அறுபத்து மூவரூல் ஒருவர். (தேவா. 611, 7.) |
| புகழ்தல் | pukaḻtal n. <>புகழ்-. Adoration, one of nava-puṇṇiyam, q.v.; நவபுண்ணியத்துள் ஒன்றான துதி. (யாழ். அக.) |
| புகழ்தலுவமை | pukaḻtal-uvamai n. <>id.+. (Rhet.) A simile in which the upamāṉam is praised and the upamēyam is left bare; உபமேயத்தை வாளாவிடுத்து உபமானத்தை யாதேனும் ஒரு சிறப்புக்காட்டிப் புகழ்ந்து கூறும் உவமையணிவகை. (தண்டி. 30, உரை.) |
| புகழ்ப்பூ | pukaḻ-p-pū n. perh. புகழ்+. Fetid cassia. See பொன்னாவிரை. (சங். அக.) . |
| புகழ்பொருள் | pokaḻ-poruḻ n. <>புகழ்-+. (Rhet.) Subject of comparison; உபமேயம். (அணியி. 3.) |
| புகழ்பொருளுவமையணி | pukaḻ-poruḷ-uvamai-y-aṇi n. <>புகழ்பொருள்+. (Rhet.) A type of simile. See இதரவிதரம். (அணியி. 2.) . |
| புகழ்மகள் | pukaḻ-makaḷ n. <>புகழ்+. The Goddess of Fame; புகழாகிய தேவி. புகழ் மகளைத் தழுவிய (கம்பரா. இராவண. வதை. 226). |
| புகழ்மங்கை | pukaḻ-maṅkai n. <>id.+. See புகழ்மகள். புகழ்மங்கை யெங்குந் திகழ (திவ். பெரியதி. 3, 2, 5). |
| புகழ்மாலை | pukaḻ-mālai n. <>id.+. Garland of verse in praise of a deity or person; தலைவர் புகழைத் தெரிவிக்கும் சொன்மாலை. வறியோர் தொடுக்கும் புகழ்மாலை சூடும் நல்லியக்கோடனை (புறநா.176, உரை). |
| புகழ்மை | pukaḻmai n. <>புகழ்-. 1. Praise-worthiness; புகழுடைமை. பொச்சாப்பார்க் கில்லைப் புகழ்மை (குறள், 533). 2. Fame; |
| புகழ்வதினிகழ்தல் | pukaḻvatiṉ-ikaḻtal n. <>புகழ்-+. (Rhet.) A figure of speech which consists in ironical praise; இகழாவிகழ்ச்சி. (மாறனலங். 229, உரை.) |
| புகழ்வீசுசந்திரன் | pukaḻ-vīcu-cantiraṉ n. <>புகழ்+வீசு-+. 1. Medicated camphor; பச்சைக் கர்ப்பூரம். (யாழ். அக.) 2. Camphor tree; |
| புகழ்வு | pukaḻvu n. <>புகழ்-. Praise; fame; புகழ்ச்சி. புகழ்வினையாகி (பெருங். உஞ்சைக். 36, 193). |
| புகழ்வோர் | pukaḻvōr n. <>id. Professional panegyrists; சூதர் மாகதர் முதலிய வந்திகள். (பிங்.) |
| புகழாப்புகழ்ச்சி | pukaḻā-p-pukaḻcci n. <>id.+ஆ neg.+. (Rhet.) A figure of speech, containing praise couched in terms of apparent censure; பழிப்பதுபோலப் புகழும் அணிவகை. (தண்டி. 82). |
| புகழாவாகை | pukaḻā-vākai n. <>id.+ id.+. 1. West Indian pea-tree. See அகத்தி. புகழா வாகைப் பூவி னன்ன (பெரும்பாண். 109). 2. Conceit; |
| புகழாளன் | pukaḻ-āḷaṉ n. <>புகழ்+. Renowned person; கீர்த்தியுடையோன். (திவா.) |
| புகழேந்தி | pukaḻ-ēnti n. <>id.+. A poet, author of Naḷaveṅpā; நளவெண்பா இயற்றிய புலவர். வெண்பாவிற் புகழேந்தி (தனிப்பா.). |
| புகள் | pukaḷ n. cf. buka. See புகழாவாகை. (மலை.) . |
| புகற்சி | pukaṟci n. <>புகல்-. 1. Desire; விருப்பம். குறக்குறு மாக்கள் புகற்சியி னெறிந்த (நற். 104.) 2. Love; |
| புகற்று - தல் | pukaṟṟu- 5 v. tr. Caus. of புகல்-. To cause to desire; விரும்பச் செய்தல். உள்ளு மாந்தரை யுள்ளம் புகற்றுமே (சீவக. 870). |
| புகனான்கு | pukaṉāṉku n. <>புகல்2+நான்கு. (Mus.) The four modes of singing, viz., sthiti, pirakkiramam, cacāram, mūrccaṉai; ஸ்திதி, பிரக்கிரமம், சஞ்சாரம், மூர்ச்சனையாகிய நால்வகைப்பட்ட பாடன்முறை. ஆயவிசைப் புகனான்கி னமைந்த புகல் வகையெடுத்து (பெரியபு. ஆனாய. 26). (செந். vi, 216). |
| புகா | pukā n. <>புகு1-. cf. bhuj. Food; உணவு. புகாஅக். காலை (தொல். பொ. 107). |
| புகார் 1 | pukār n. <>id. 1. Mouth of a river; ஆற்றுமுகம்.புகாஅர்ப் புகுந்த பெருங்கலம் (புறநா. 30). 2. The town of Kāviri-p-pūm-paṭṭiṉam, as situated at the mouth of the river Kāvēri; |
| புகார் 2 | pukār n. <>புகர்1. (W.) 1. Mist, fog, haze; பனிப்படலம். 2. Cloudiness of the weather, overcast sky; 3. Rain-cloud; 4. Duskiness, dinginess, dimness; |
