Word |
English & Tamil Meaning |
|---|---|
| புகை - த்தல் | pukai- 11 v. tr. Caus. of புகை2-. 1. To cause to smoke; புகையச்செய்தல். நெடுநகர் வரைப்பிற் கடிநறை புகைஇ (புறநா. 281). 2. To entrap and destroy, as by letting smoke into rat-holes; 3. To ruin; 4. To fume with anger; to be inflamed with rage; |
| புகைக்கப்பல் | pukai-k-kappal n. <> புகை+. Steamer, steamboat; நீராவிக்கப்பல். |
| புகைக்காடு | pukai-k-kāṭu. n. <> id.+ 1. Smoke; thick mist, fog; புகைப்படலம். (W.) 2. Term indicating excess, as of speed; |
| புகைக்குண்டு | pukai-k-kuṇṭu n. <> id.+. 1. A vessel for fumigating with poisonous fumes; நச்சுப்புகை புகைக்கும் பாத்திரம். (யாழ். அக.) 2. Bullet; |
| புகைக்கூடு | pukai-k-kūṭu n. <> id.+ [T. pogagūdu.] 1. Chimney-piece, flue, covered opening for the escape of smoke; புகைபோக்கி. (கட்டட. நாமா.10.) 2. Balloon; |
| புகைக்கூண்டு | pukai-k-kūṇṭu n. <> id.+. 1. See புகைக்கூடு. . 2. Explosive shell thrown by hand or from a mortar, rocket; |
| புகைக்கூர் | pukai-k-kūr n. <> id.+கூர்-மை. Soot; புகைப்படை. Loc. |
| புகைக்கொடி | pukai-k-koṭi n. <> id.+ Comet; தூமகேது. புகைக்கொடி தோன்றினும் (சிலப். 20, 102, அரும்.). |
| புகைகட்டு - தல் | pukai-kaṭṭu- v. intr. <> id.+. (W.) 1. To smoke or funmigate affected parts of the body, as in tooth-ache; புகையேற்றுதல். 2. To impart a gold or silver colour by fumigation; |
| புகைகாட்டு - தல் | pukai-kāṭṭu- v. intr. <> id.+. 1. To smoke, fumigate, as a cure; புகைத்து நோய் நீக்குதல். (W.) 2. To burn incense, as for expelling flies, exorcising devils; 3. To offer incense, as to a deity; |
| புகைகாண்(ணு) - தல் | pukai-kāṇ- v. tr. <> id.+. To destroy completely, as by cremation; முற்ற அழித்தல். அவனைப் புகைகண்டால் தான் விடுவான். Colloq. |
| புகைகுடி - த்தல் | pukai-kuṭi- v. intr. <> id.+. To smoke, as tobacco or other drugs; புகையிலை முதலியவற்றின் புகையை உட்கொள்ளுதல். |
| புகைச்சல் | pukaiccal n. <> புகை2-. 1. Smoke; புகை. அங்கு மிகவும் புகைச்சலா யிருக்கிறது. Colloq. 2. Darkness, obscurity, dullness, gloominess; 3. Dimness of sight; 4. Burning sensation in the stomach; 5. Sore-throat; 6. See புகையிருமல். Colloq. 7. Coming out little by little, getting publicity gradually; 8. Umbrage, chagrin, heart-burning, ill-will; |
| புகைச்சல்போடு - தல் | pukaiccal-pōṭu- v. intr. <> புகைச்சல்+. To make a smoke for driving away mosquitoes; கொசு முதலியவை யொழியத் தீகூட்டிப் புகைத்தல். |
| புகைச்சுருட்டு | pukai-c-curuṭṭu n. <> புகை+. Cigar, cheroot; புகை குடிப்பதற்கு உதவும் புகையிலைச்சுருள். |
| புகைசுற்று - தல் | pukai-cuṟṟu- v. intr. <> id.+. To be overcooked or charred and have a smell of smoke, as food; சோறுமுதலியன தீய்ந்து கும்பனாற்றமடித்தல். |
| புகைசூழ் - தல் | pukai-cūḻ- v. intr. <> id.+ See புகைசுற்று-. (W.) . |
| புகைசூழ்வட்டம் | pukai-cūḻ-vaṭṭam n. <> id.+ See புகைவட்டம். . |
| புகைஞ்சான் | pukaicāṉ n. <> புகை2-. Colloq. 1. That which is low or useless; உபயோகமற்றது. 2. Man of inferior ability; |
| புகைத்தல் | pukaittal n. <> id.+. Fuming with anger, spite; கோபத்தாலுண்டாம் மனவெரிச்சல். அவர்கள் புகைத்தலிருக்கிறபடி. (ஈடு, 5, 9, 5). |
| புகைநாள் | pukai-nāḷ n. <> புகை+. (Astrol.) The nakṣatra next after that with which a malefic planet is in conjunction; தீக்கோள் நிற்கும் நக்ஷத்திரத்திற்கடுத்த நக்ஷத்திரம். (விதான. குணாகுண. 94.) |
| புகைநாற்றம் | pukai-nāṟṟam n. <> id.+. Smell of smoke; கும்பல் வீச்சம். ரசத்தில் புகை நாற்றம் வருகிறது. |
