Word |
English & Tamil Meaning |
|---|---|
| புணர்ப்பு 2 | puṇarppu n. <>புணர்2-. 1. Contrivance; scheme; plan; artifice; craft; plot; சூழ்ச்சி. முதலியவன் புணர்ப்பினால் (கலித். 25) 2. Command; 3. Poem; 4. Illusion; 5. Action, deed; |
| புணர்பூசம் | puṇarpūcam n. See புனர்பூசம். (W.) . |
| புணர்மீன் | puṇar-mīṉ n. <>புணர்1-+. One of aṭṭa-maṅkalam, See இணைக்கயல். (சூடா.) . |
| புணர்வு | puṇarvu n. <>id. 1. Combination; சேர்க்கை. 2. Coition; 3. Connection, joining; 4. Body; |
| புணராவிரக்கம் | puṇarā-v-irakkam n. <>id.+ஆ neg.+. (Puṟap.) Theme of a lover grieving in solitude on account of his separation and consequent inability to meet his beloved; தான் காதலித்தவளைக் கூடநேராமையால் உண்டான விதனத்தோடு தலைவன் தனித்து உறைந்து வருந்து தலைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 11, கைக். 8.) |
| புணரி | puṇari n. <>id 1. Sea; கடல். (பிங்.) உலகு சூழ்ந்த நெடும்புணரி (திவ். பெரியதி. 8,6,5). 2. Wave; 3. Shore ; 4. Sounding; 5. Loneliness; |
| புணரிசூழ்வேலி | puṇari-cūḻ-vēli n. <>புணரி+சூழ்-+. A mythical range of mountains. See சக்கரவாளம். வெண்டிரைப் புணரி சூழ்வேலி வேந்தனே (சீவக. 3052). |
| புணரியல் | puṇar-iyal n. <>புணர்1-+. (Gram.) The section of grammar which treats of coalescence of letters in canti, of three kinds, viz., uyir-iṟṟu-p-puṇar-iyal; mey-y-īṟṟu-p-puṇar-iyal, urupu-puṇar-iyal; உயிரீற்றுப்புணரியல், மெய்யீற்றுப்புணரியல், உருபுபுணரியல்கள் அமைந்த இலக்கணப்பகுதி. |
| புணரியிற்றுயின்றோன் | puṇariyiṟṟuyiṉṟōṉ n. <>புணரி.+துயில்-. Viṣṇu, as sleeping on the ocean; (கடலிற் பள்ளிகொண்டோன்) திருமால். (பிங்.) |
| புணரியோர் | puṇariyōr n. <>புணர்2-. Those who bring things together; ஒன்றுகூட்டியவர். நீரு நிலனும் புணரியோர் (புறநா. 18) . |
| புணி | puṇi n. perh. பிணி-. Tuft of hair; மயிர்முடி. (அக. நி.) |
| புணை - த்தல் | puṇai- 11 v. tr. <>பிணை-. To unite, tie; கட்டுதல். |
| புணை | puṇai n. <>புணை-. 1. Float, raft; தெப்பம். நல்லாண்மை யென்னும் புணே (குறள், 1134). 2. Boat, vessel, ship; 3. Support, help; 4. cf. பணை. Bamboo; 5. Fetters; 6. Pledge, security; 7. cf. பிணை. Surety; 8. Comparison; |
| புணைக்கட்டை | puṇai-k-kaṭṭai n. <>புணை+. Catamaran; கட்டுமரம். Loc. |
| புணைகயிறு | puṇai-kayiṟu n. <>புணை-+. Rope with which a bullock is fastened to the yokel; பூட்டாங்கயிறு. (அருங்கலச். 94, உரை.) |
| புணைசல் | puṇaical n. See புணையல். . |
| புணைசல்விடு - தல் | puṇaical-viṭu- v. tr. <>புணைசல்+. To tread out grain on the threshing-floor with the help of cattle fastened together; களத்திற் கதிரைக் கடாவிட்டு உழக்குதல். |
| புணைப்படு - தல் | puṇai-p-paṭu- v. intr. <>புணை+. 1. To become security; to go bail; ஜாமீனாதல். 2. To be responsible; |
| புணையல் | punaiyal n. <>புணை-. Joining together; பிணைப்பு. |
| புணையலடி - த்தல் | puṇaiyal-aṭi- v. tr. <>புணையல்+. See புணைசல்வீடு-. . |
| புத்தகப்படுத்து - தல் | puttaka-p-paṭuttu- v. tr. <>புத்தகம்+. To record, register, as a notary public; பத்திரப்பதிவு செய்தல். (J.) |
| புத்தகம் | puttakam n. <>pustaka. 1. Book; ola manuscript; நூல். புத்தகமே சாலத் தொகுத்தும் (நாலடி, 318). 2. Printed cloth; 3. Peacock-quill; |
| புத்தகம்பண்ணு - தல் | puttakam-paṇṇu- v. tr. <>புத்தகம்+. See புத்தகப்படுத்து-. . |
