Word |
English & Tamil Meaning |
|---|---|
| புத்தியிரேகை | putti--y-irēkai n. <>id.+. [Palmistry]. A line in the palm of the hand, indicative of knowledge. See ஞானரேகை. . |
| புத்தியீனம் | putti-y-īṉam n. <>id.+hīna. Senselessness, folly, indiscretion; அறியாமை |
| புத்தியீனர் | putti-y-īṉar n. <>id.+. Senseless persons; அறிவுகேடர் புத்தி யீனர் சிலர் சொன்ன பொய்யை (பிரபோத. 13, 12). |
| புத்தியூட்டு - தல் | putti-y-ūṭṭu- v. intr. <>id.+. To give advice; அறிவு புகட்டுதல். |
| புத்திரகருமம் | puttira-karumam n. <>puttra+. Funeral ceremonies performed by a son for his deceased parent; பெற்றோர்க்கு மகன் செய்யும் ஈமச்சடங்கு. |
| புத்திரகன் | puttirakaṉ n. <>puttra-ka. 1. (šaiva.) One who has obtained the vicēṭa-tīṭcai; விசேடதீட்சை பெற்றவன். (சைவச. மாணா. 4.) 2. Beloved person; 3. Cheat; |
| புத்திரகாமியம் | puttirakāmiyam n. <>put-tra-kāmya. See புத்திரகாமேட்டி. (யாழ்.அக.) . |
| புத்திரகாமேட்டி | puttirakāmēṭṭi n. <>puttra-kāmēṣṭi. Sacrifice performed to obtain sons; ஆண்மகப்பேறுவிரும்பிச் செய்யும் யாகம். (இராமநா. பாலகா. 7.) |
| புத்திரசந்தானம் | puttira-cantāṉam n. <>puttra+. Male offspring; ஆண் சந்ததி. |
| புத்திரசம்பத்து | puttira-campatt n. <>id.+. See புத்திரைசுவரியம். . |
| புத்திரசாரி | puttiracāri n. Strychnine tree. See எட்டி1. (சங்.அக.) . |
| புத்திரசீவம் | puttira-civam n. <>puttra-jīva. See புத்திரசீவி. . |
| புத்திரசீவி | puttira-civi n. <>id. 1. Child's amulet tree, m.tr., putranjiva roxburghii; குழந்தைகள் ஆரோக்கியமாயிருத்தற்கு இரட்சையாகக் கட்டும் வித்துக்களையுடைய மரம். (பதார்த்த. 1024.) 2. Java fig. |
| புத்திரசுவீகாரம் | puttira-cuvīkāram n. <>puttra+. Adoption of a son; மகனாகத் தத்தெடுத்துக்கொள்ளுகை |
| புத்திரசெனனி | puttira-ceṉaṉi n. <>pui-tra-jananī. Hedge bind-weed. See தாளி. (மலை.) |
| புத்திரசோகம் | puttira-cōkam n. <>puttra+. Grief or sorrow occasioned by the loss of a son; மகனை யிழந்த துயர். புத்திர சோக முற்றுப் பொன்னனா ணின்ற வாறும் (பிரமோத். 6, 25). |
| புத்திரசோகி | puttiracōki n. Corr. of புத்திரசீவி. (பதார்த்த. 1024, உரை.) . |
| புத்திரசோபம் | puttira-cōpam n. <>puttra + kṣōbha. See புத்திரசோகம். (யாழ்.அக.) . |
| புத்திரத்தானம் | puttira-t-tāṉam n. <>id.+ sthāna. (Astrol.) The fifth house from the ascendant, indicating offspring; சந்தானத்தைக் குறிக்கும் இலக்கினத்து ஐந்தாமிடம். |
| புத்திரதானம் | puttira-tāṉam n. <>id.+dāna. (W.) 1. Procreation of sons; புதல்வரைப் பிறப்பிக்கை. 2. Gift of a son in adoption; |
| புத்திரதீபம் | puttiratipam n. See புத்திரதீபமணி. காளாமுகத்தினர்க்குப் படிகம் புத்திரதீபக் தரித்த மூர்த்தியாயும் (சி.சி.பாயி.1, சிவாக்.). . |
| புத்திரதீபமணி | puttira-tīpa-maṇi n. <>புத்திரதீபம்+. A kind of beads stringed into a necklet and worn by kāḷāmukar; காளாழுகர் மாலையாகக் கழுத்தில் அணியும் ஒருவகை மணி. காளாமுகர்க்குப். . . புத்திரதீபமணிகள். . . மூர்த்தியாய் (சி. சி. பாயி. 1, ஞானப்.). |
| புத்திரநாதன் | puttira-nātaṉ n. <>puttra+. One who is maintained by his son; பிள்ளையினாற் காக்கப்படுபவன். (யாழ். அக.) |
| புத்திரப்பிரதிநிதி | puttira-p-piratiniti n. <>id.+. Adopted son; தத்துபிள்ளை. (யாழ். அக.) |
| புத்திரபாகம் | puttira-pākam n. <>id.+bhāga. Division of inheritance per capita among the sons, opp. to pattiṉi-pākam (R.F.); புத்திரர்களுக்கு ஈவுப்படி கொடுக்கும் பங்கு. |
| புத்திரபௌத்திரபாரம்பரியம் | putti-ra-pauttira-pārampariyam n. <>id.+ pantra+. Lineal succession (R.F.); வமிசபரம்பரை. |
| புத்திரபௌத்திராதி | puttira-pautturāti n. <>id.+id.+. Son, grandson, etor, a documentary term (R.F.); வமிசபரம்பரை. |
| புத்திரமார்க்கம் | puttira-mārkkam n. <>id.+. (Saiva.) Rites and ceremonies, as a means to salvation; See கிரியாமார்க்கம். புத்திரமார்க்கம் புகலில் (சி. சி. 8,20). |
| புத்திரமுகங்காணுதல் | puttira-mukaṅ-kāṇutal n. <>id.+. The ceremony in which one sees the face of his new-born son for the first time; ஒருவன் புதிதாகப்பிறந்த தன் ஆண்குழந்தையின் முகத்தை முதன்முறை நோக்குதலாகிய சடங்கு. |
