Word |
English & Tamil Meaning |
|---|---|
| புத்தேள் 1 | puttēḷ n. <>புது-மை. 1. Novelty; புதுமை. (சூடா.) 2. Strange woman; stranger; |
| புத்தேள் 2 | puttēḷ n.prob.puttala. God, deity; தெய்வம். புத்தேளிர் கோட்டம் வலஞ்செய்து (கலித். 82). |
| புத்தேளுலகம் | puttēḷ-ulakam n. <>புத்தேள்+. See புத்தேணாடு. புத்தேளுலகத்து மீண்டும் பெறலரிதே (குறள், 213). . |
| புத்தேளுலகு | puttēḷ-ulaku n. <>id.+. See புத்தேணாடு. (பிங்.) . |
| புத்தேன் | puttēṉ n. Strychnine tree. See எட்டி. (மலை.) |
| புத்தோடு | puttōṭu n. <>புது-மை+ஓடு. New pot; புதுப்பனை. புத்தோடு தண்ணீர்க்குத் தான்பயந்தாங்கு (நாலடி, 139). |
| புத | puta n. <>புதா. Gate; வாயில். மழை போழ்ந்து புதத்தொறும் (சீவக. 2398). |
| புதசனன் | puta-caṉaṉ n. <>budha+jana. Wise or learned man; அறிஞன். (அக. நி.) |
| புதஞ்செய் - தல் | puta-cey- v. intr. prob. புதம்+. See புதமெழு-. வெண்டிரை புரவியென்னப் புதஞ்செய்து (திவ். பெரியதி. 9,3,7). . |
| புதப்பிரியம் | putappiriyam n. <>budhapriya. Emerald; மரகதம். (சங். அக.) |
| புதம் | putam n. <>ambuda. Cloud; மேகம். புதமிகு விசும்பில் (திவ். பெரியதி, 9, 8, 8). |
| புதமெழு - தல் | putam-eḷu- v. intr. prob. புதம்+. [K. puṭavēḷ] To leap up, jump up, rise with a bound; தாவியெழுதல். புதமெழு புரவிகள் புடைபரந்திட (சூளா. துற. 42). |
| புதர் 1 | putar n. [T. poda K. podarn.] See புதல். (அரு. நி.) . |
| புதர் 2 | putar n. See புதா. (அக. நி.) . |
| புதரவண்ணான் | putara-vaṇṇāṉ n. Washerman for ādi Dravidas. See இராப்பாடி. Rd. |
| புதரெலி | putar-eli n. <>புதர்+. Field rat; எலிவகை. |
| புதல் 1 | putal n. [T.podaru.] 1. Bush, thicket, low jungle; தூறு. புதன் மறைந்து (குறள், 274). 2. Grass; 3. Medicinal shrub; 4. Bud; |
| புதல் 2 | putal n. cf. bhrū-latā. Eyebrow; புருவம். (பிங்) கழைவிற்புதல் (தனிப்பா, ii, 193, 467). |
| புதல்வர்ப்பேறு | putalvar-p-pēṟu n. <>புதல்வன்+. Obtaining sons; ஆண்மக்களைப் பெறுகை. புதல்வர்ப் பேற்றினது சிறப்புக் கூறப்பட்டது (குறள். 61, உரை). |
| புதல்வன் | putalvaṉ n. cf. puttra. 1.Son; மகன். பொன்போற் புதல்வர்ப் பெறாதீரும் (புறநா. 9). 2. Disciple, student; 3. Subject; |
| புதல்வி | putalvi n. Fem of புதல்வன். Daughter; மகள். (பிங்) பூவிலோன் புதல்வன் மைந்தன் புதல்வி (கம்பரா. சூர்ப்ப. 39). |
| புதவம் 1 | putavam n. <>புதவு. Gate; வாயில். புதவம் பலவுள (சிலப்11, 119). |
| புதவம் 2 | putavam n. perh.புதர். Bermuda grass; அறுகு. பொய்கைக் கொழுங்காற் புதவமொடு (பட்டினப. 243). |
| புதவாரம் | puta-vāram n. <>budha+. See புதன்கிழமை. . |
| புதவு 1 | putavu n. <>புதா1. 1. Door; கதவு. நல்லெழி னெடும்புதவு. (பதிற்றுப். 16, 5). 2. Entrance, gate; 3. Sluice; 4. Small door within a larger one, wicket; 5. Cave; |
| புதவு 2 | putavu n. See புதவம். புல்லரைக் காஞ்சிப் புனல்பொரு புதவின் (மலைபடு. 449). . |
| புதளி | putaḷi n. Animal food; புலால். (அக. நி.) |
| புதற்பூ | putaṟ-pū n. <>புதல்+. Flowers of grasses and shrubs. See நிலப்பூ. (W.) |
| புதன் | putaṉ n. <>Budha. 1. The planet mercury, one of nine kirakam, q.v.; கிரகம் ஒன்பதனுள் ஒன்று. (சாதகா. பொது. 17.) 2. See புதன்கிழமை. 3. Wise or learned man, poet; 4. Celestial Being; |
| புதன்கிழமை | putaṉ-kiḻamai n. <>id.+. Wednesday; கிழமை ஏழனுள் நான்காவது |
| புதன்வாரம் | putaṉ-vāram n. <>id.+ See புதன்கிழமை. . |
| புதஸ்தூர்பாய் | putastūr-pāy n. Studing-sail; கப்பலின் துணைப்பாய். Naut. |
