Word |
English & Tamil Meaning |
|---|---|
| புதஸ்தூர்போம் | putastūr-pōm n. Studding-sail boom; கப்பலின் துணைப்பாய் தாங்கும் மரம். Naut. |
| புதா 1 | putā n. cf. புதவு1. Door; கதவு. இன்பப் புதாத் திறக்குந் தாளுடைய மூர்த்தி (சீவக. 1549). |
| புதா 2 | putā n. <>போதா. 1. A crane; மரக்கானாரை. (சிலப் 10, 117, அரும்.) 2. A large heron; |
| புதாநாழி | putā-nāḻi n. An ancient tax; பழைய வரிவகை. (S. I. I. ii, 521.) |
| புதாழி | putāḻi n. See புதாநாழி. (S. I. I. ii, 509.) . |
| புதானன் | putāṉaṉ n. <>budhāna. (யாழ். அக.) 1. See புதசனன். . 2. Preceptor; |
| புதிசு | puticu n. See புதிது. . |
| புதிது | putitu n. <>புது-மை. [K. posadu.] 1. That which is new, uncommon or wonderful; நூதனமானது. அந்தோ சிறியனேன் செய்வது புதிதோ (அருட்பா, வி, திருமு. பிள்ளைப்பெரு. 89) 2. First sheaves of a rice crop, offered to a lamp personifying Lakṣmī; |
| புதிதுண்ணல் | putituṇṇal n. <>புதிது+. A ceremony in which the rice of a new crop is cooked and eaten at an auspicious hour; புதியதாக விளைந்த தானியத்தை நல்வேலையிற் சமைத்துண்ணுஞ் சடங்கு. (J.) |
| புதிய | putiya adj. <>புது-மை. New; நூதன. |
| புதியது | putiyatu n. <>id. Freshly cooked rice, opp. to paḻaiyatu; புதியதாகச் சமைத்த சோறு. Loc. |
| புதியதுண்(ணு) - தல் | putiyatuṇ- v. intr. <>புதியது+. 1. To enjoy in part; to have partial experience; ஏகதேசானுபவம் கொள்ளுதல். இதுக்குமுன் புதியதுண்டறியாத நான் (ஈடு, 3, 2, 4). 2. To celebrate the ceremony in which the first fruits of crops are cooked and eaten at an auspicious hour; |
| புதியமனிதன் | putiya-maṉitaṉ n. <>புதிய+. 1. Stranger; அன்னியன். 2. Novice, beginner one new in office; 3. Stranger, newborn male chid. |
| புதியர் | putiyar n. <>புது-மை. [K. posabaru.] See புதியவர். (W.) . |
| புதியவர் | putiyavar n. <>id. 1. Newcomers; புதிதாக வந்தவர். 2. Guests, visitors; |
| புதியவேற்பாடு | putiya-v-ēṟpātu n. <>புதிய+. The new Testament; விவிலிய நூலின் பிற்பகுதி. Chr. |
| புதியனபுகுதல் | putiyaṉa-pukutal n. <>புது-மை+. (Gram.) Coming into vogue of new forms of speech or expression; சொல் வழக்கம் முதலியன புதியனவாக உண்டாகை. பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல (நன். 462). |
| புதியிளநீரு | puti-y-iḷanīr n. <>id.+ Tender coconut just plucked; புதிதாகப் பறித்த இளநீர்க்காய். (பதார்த்த. 63.) |
| புதியோர் | putiyōr n. <>id. See புதியவர். (W.) . |
| புதிர் 1 | putir n. prob. புதிய+கதிர். See புதிது, 2. (W.) . |
| புதிர் 2 | putir n. <>பிதிர். [O. K. padu.] Riddle; விடுகதை. (W.) |
| புதிலி | putili n. [K. buddali.] Leather bag for keeping oil; எண்ணெய்த்துருத்தி. (யாழ். அக.) |
| புதினக்கடுதாசி | putiṉa-k-kaṭutāci n. <>புதினம்+. Newspaper; சமாசாரபத்திரிகை. (J.) |
| புதினம் | putiṉam n. <>புது-மை 1. Newsness, novelty; நூதனம். (W.) 2. News; 3. Wonderful or strange things; extraordinary event; miracle; |
| புதினா | putiṉā n. See புதீனா . |
| புதீனா | putīṉā n. <>U. pudīnā. Mint; கீரைவகை. (மு. அ.) |
| புது | putu adj. <>புது-மை. New; நூதன. |
| புதுக்கட்டு | putu-k-kaṭṭu n. <>id.+. New institutions, orders, ordinances, establishments or regulations; புதிய முறை. (W.) |
| புதுக்கணக்குநாள் | putu-k-kaṇakku-nāḻ n. <>id.+கணக்கு+. Auspicious day for the commencement of business transactions for a fresh triennial period; நாட்டுக்கோட்டைச் செட்டிமார் மூன்றாண்டுக்கொருமுறை வியாபாரத்தொடக்கத்திற்கு ஏற்படுத்தும் நல்லநாள். Nāṭ. Cheṭṭi. |
| புதுக்கணி - த்தல் | putu-k-kani- 11 v. intr. <>id.+. To receive new beauty, have new attraction; அழகுபெறுதல். புதுக்கணித்த சிறகையுடைய சேவல் (ஈடு). |
| புதுக்கணிப்பு | putukkaṇippu n. <>புதுக்கணி-+. Fresh lustre, enhanced beauty; புதியவொளி. ஆடையுடையும் புதுக்கணிப்பும் (திவ். திருவாய். 8, 9, 5). |
