Word |
English & Tamil Meaning |
|---|---|
| புரணம் 1 | puraṇam n. <>pūrṇa. Fullness; நிறைவு. ஞானத்தினாற் புரணமானது . . . ஞானநூல் (ஞானவா. வைர. 16). |
| புரணம் 2 | puraṇam n. <>sphuraṇa. 1. Moving, motion; அசைகை. கண்கள் . . . நோக்கும் புரணமும் (கோயிற்பு. நடரா. 13). 2. Twitching; throubbing; 3. Coming into existence, originating; 4. Bewilderment; 5. Brightness, splendour; |
| புரணி | puraṇi n. <>புறணி. 1. Flesh; ஊன். (பிங்.) குணபாசி . . . நடித்து நின்றயின்றன புரணி (அரிசமய. பரகா. 37). 2. Skin; 3. That which useless; |
| புரத்திரயம் | pura-t-tirayam n. <>pura+ traya. The three cities destroyed by šiva; திரிபுரம். திண்சிலையாற் புரத்திரயங்களையும் பொடியாக்கிலன் . . . எங்கள் பண்ணவனே (திருநூற். 24). |
| புரத்துவாரம் | pura-t-tuvāram n. <>id.+. Gate of a city or town; நகரத்தின் வாயில். (W.) |
| புரதகனன் | pura-takaṉaṉ n. <>id.+. See புரமெரித்தோன். (W.) . |
| புரந்தரம் | purantaram n. perh. bhujāntara. Shoulder; தோள். (சங். அக.) |
| புரந்தரலோகம் | purantara-lōkam n. <>புரந்தரன்+. Indra's heaven இந்திரலோகம். செல்வப்புரந்தரலோகம் புழைக்கடை யாகுமெம் போலிகட்கே (திருநூற். 32). |
| புரந்தரன் | purantaraṉ n. <>Puran-dara. Indra; இந்திரன். புரந்தரன் தன்னோடு வானோர் (தேவா. 926, 8). |
| புரந்தார் | purantār n. <>புர-. [K. poredar.] Kings; அரசர். புரந்தார்கண் ணீர்மல்க (குறள், 780). |
| புரப்பிரியை | purappiriyai n. <>purapriyā. Pine-apple. See அனாசி. (மூ. அ.) . |
| புரப்பு | purappu n. <> புர-. Keeping, protection; பாதுகாப்பு. (சங். அக.) |
| புரம் 1 | puram n. <>pura. 1. Town, village; ஊர். (பிங்.) 2. City; 3. Metropolis, fortified town, royal city, capital; 4. See புரத்திரயம். புரமெரிசெய்தவர் (தேவா. 97, .11). 5. Temple; 6. Upper storey; 7. House; 8. Body; 9. cf. புறணி. Skin; |
| புரம் 2 | puram adv. <>puras. Before, in place or time; முன். (சூடா.) |
| புரமூன்றெரித்தோன் | pura-mūṉṟerittōṉ n. <>புரம்1+மூன்று+. šiva, as the destroyer of tiripuram; [திரிபுரத்தை எரித்தவன்] சிவபிரான் (திவா.) |
| புரமெரித்தோன் | puram-erittōṉ. n. <>id.+. See புரமூன்றெரித்தோன். . |
| புரவரித்திணைக்களம் | puravari-t-tiṇai-k-kaḷam n. See புரவுவரிதிணைக்களம் (S. I. I. iii, 116, 17.) . |
| புரவரியார் | puravariyār n. <>புரவு+. Revenue accountants; அரசிறைக் கணக்கர். (I. M. P. Sm. 56.) |
| புரவலன் | pura-valaṉ n. <>புர-+. 1. Protector, preserver, defender காத்துதவுவோன். மெய்யது புரவல ரின்மையிற் பசியே (புறநா. 69); 2. King; 3. Liberal man; |
| புரவாசம் | pura-vācam n. <>புரம்1+. Dwelling in a city; நகரத்தில் வசிக்கை. |
| புரவாய்தல் | pura-vāytal n. <>id.+. See புரவாயில் (நாமதீப. 493.) . |
| புரவாயில் | pura-vāyil n. <>id.+. Tower gate of a city; கோபுரவாயில். (சூடா.) |
| புரவாலி | puravāli n. See பாய்கானா. (C. G.) . |
| புரவி 1 | puravi n. <>புர-. 1. Horse; குதிரை. கதழ்பரிப புரவி (பதிற்றுப். 80, 13). 2. The first nakṣatra. See அசுவதி. (பிங்.) 3. Stable for horses or elephants; |
| புரவி 2 | puravi n. Corr. of பிறவி. Class, order. See பிறப்பு, கெட்டிக்காரப்புரவி. (J.) . |
| புரவிசயன் | pura-vicayaṇ n. <>pura-vijaya. šiva, as conqueror of tiripuram; [திரிபுரம் வென்றோன்] சிவபிரான். புரவிசயன் சூடந்தரு பாகீரதி (பாரத. அருச்சுனன்றீர். 7). |
| புரவித்தேவர் | puravi-t-tēvar n. <>புரவி+. The Asvins, as gods with horse-faces; (குதிரைமுகமுள்ளதேவர்) அசுவினிதேவதைகள் ஆயுள் பெருகுமா றுதவிக்காப்பர் பிரிந்திடாப் புரவித்தேவர் (பாகவத. 2, மாயவனிலை. 14). |
