Word |
English & Tamil Meaning |
|---|---|
| புருடகாரம் | puruṭakāram n. See புருஷகாரம். . |
| புருடகாலம் | puruṭa-kālam n. <> puruṣakāla. The period of thirty-five years, as the period of active manhood ; முப்பத்தைந்து வருடகாலம்.(சங். அக.) |
| புருடசூக்கம் | puruṭacūkkam n. See புருடசூத்தம். அவமில் புருடசூக்கத்தை (சூத. எக்கி. பூ. 42, 15.) . |
| புருடசூத்தம் | puruṭacūttam n. <>puruṣasūkta. A Rg-vēdic hymn addressed to God in His universal aspect; இருக்குவேதத்துள்ள மந்திர விசேடம் புரிவு செய்யும் புருடசூத்தமுதல் (சேதுபு. சேதுப. 121). |
| புருடத்துவம் | puruṭattuvam n.<>puruṣa-tva. See புருஷத்துவம்.(சங். அக.) . |
| புருடதத்துவம் | puruṭa-tattuvam n. <>puruṣa+. (Saiva.) A category of the soul, especially one of the cakalar class having all the three malams, one of seven cuttācuttatattuvam, q.v.; சுத்தாசுத்ததத்துவம் ஏழனுள் ஒன்றாயதும் மும்மலங்களோடு கூடியதுமான தத்துவம். ஐவகையா லுறுபயன்க ணுகரவருங் கால மது புருடதத்துவமென் றறைந்திடுவர் (சிவப்பிர. 23, புதுப்). |
| புருடநட்சத்திரம் | puruṭa-naṭcattiram n. <> id.+. Male nakṣatra. See ஆணாள் (விதான. பஞ்சாங்.16, உரை) . |
| புருடநாள் | puruṭa-nāḷ n. <> id.+. 1. See புருடநட்சத்திரம். . 2. The 27th nakṣatra. |
| புருடப்பிரமாணம் | puruṭa-p-piramāṇam n. <> id.+. Length of four cubits; நான்கு முழநீளம். (சங். அக.) |
| புருடம் 1 | puruṭam n. <> tat-puruṣa. 1. A mantra, one of paca-p-piramam q.v;. பஞ்சப் பிரமங்களில் ஒன்றான மந்திரம். உருட்டிப் புருடத்தோமாங்கிதனில் (சைவச. பொது. 171). 2. A face of Siva. |
| புருடம் 2 | puruṭam n. <> puruṣa. 1. See புருடப்பிரமாணம். (நாமதீப. 807.) . 2. Common poon. |
| புருடமிரு | puruṭamiru n. Climbing asparagus. See தண்ணீர்விட்டான். (சங். அக.) |
| புருடமேதம் | puruṭa-mētam n <> puruṣa+. Human sacrifice; நரமேதம். வதைபுரி புருடமேதம் வகுப்ப (கம்பரா. மிதிலை. 120). |
| புருடமோகினி | puruṭa-mōkiṉi n. <> id.+. Pārvataī; பார்வதி. (கூர்மபு. திரு. 22.) |
| புருடராகம் | puruṭarākam n. <>puṣpa-rāga. Topaz, one of nava-maṇi, q.v.; நவமணிகளுள் ஒன்று. மாத்திகழ் புருடராகம் வயிடூயம் வயிரந்தாமும் (திருவிளை. மாணிக்க. 47). |
| புருடவாகனன் | puruṭa-vākaṉaṉ n. <> puruṣa+. Kubēra. See நரவாகனன். (பிங்.) |
| புருடன் | puruṭaṉ n. <> puruṣa. 1. Man, See புருஷன். (காஞ்சிப்பு. சன. 22.) 2. A principal tubular vessel of the human body. 3. God, as the Supreme Soul; 4. Soul; சீவான்மா. (பிரபோத. 41, 1.) 5. See புருடதத்துவம். நிச்சயம் புருடனாகி (சி. சி. 2, 56). |
| புருடா 1 | puruṭā n. cf. bhīru. Frightening; பயமுறுத்துகை. Colloq. |
| புருடா 2 | puruṭā n. <> T. burudā. Falsehood; பொய். Loc. |
| புருடாகிருதி | puruṭākiruti n. <> puruṣa+ā-krti. See புருஷாகாரம். (இலக். அக.) . |
| புருடாமிருகம் | puruṭāmirukam n. <> puruṣa-mrga. Animal believed to have a human face; புருஷமுகங்கொண்ட விலங்குவகை. (நாமதீப. 222.) |
| புருடாயிதம் | puruṭāyitam n. <> puruṣā-yita. (Erot.) A mode of sexual intercourse; புணர்ச்சிவகையுள் ஒன்று. |
| புருடாயு | puruṭāyu n. See புருஷாயுசு. . |
| புருடார்த்தம் | puruṭārttam n. <> puruṣārtha. See புருஷார்த்தம். புருடார்த்த மிதாமெனா (திருப்பு. 943). . |
| புருடால் | puruṭal n. See புருடா. Colloq. . |
| புருடாவதிகம் | puruṭāvatikam n. <> puruṣa + avadhi. Document entitling persons to enjoy a property jointly; குறிப்பிட்ட பலர் சேர்ந்து ஒரு பொருளையனுபவிக்க அனுமதிக்கும் பத்திரம். (சுக்கிரநீதி, 93.) |
| புருடு | puruṭu n. [T. K. purudu.] Loc. 1. Ceremonial pollution on account of childbirth; பிரசவத்தீட்டு. 2. Skin eruptions of a new-born child; |
| புருடோத்தமநம்பி | puruṭōttama-nampi n. <> puruṣōttama+. The author of a patikam in Tiru-v-icaippā; திருவிசைப்பா பாடிய சிவனடியாருள் ஒருவர். |
| புருடோத்தமன் | puruṭōttamaṉ n. <> puruṣōttama. 1. See புருஷோத்தமன். . 2. See புருடோத்தமநம்பி. (திருவிசைப். புருடோ. I, 11.) |
