Word |
English & Tamil Meaning |
|---|---|
| புல்லுறு - த்தல் | pulluṟu- v. tr. <>புல்லு+உறுத்து-. To cause to occur; to perform; நிகழ்த்துதல். மேலைநாள் புல்லுறுதத்தியாவும் (கம்பரா. சடாயுகாண். 43). |
| புல்லூதியம் | pullūtiyam n. Palmyrapalm; பனை. (மலை.) |
| புல்லூரி | pullūṟi n. See புல்லுருவி. (L.) . |
| புல்லூறு | pullūṟu n. A kind of bird; பறவைவகை. (பிங்) (பதிற்றுப்.165, அரும்.) |
| புல்லெண்ணெய் | pul--l-eṇṇey n. <>புல்1+. Oil distilled from grasses, used in perfumery grass-oil; புற்களினின்றெடுத்த வாசனைத்தைலவகை. Loc. |
| புல்லெழு - தல் | pul-l-eḻu- v. intr. <>id.+. Lit.., to be overgrown with grass. [புல்லுண்டாதல்] To become deserted; |
| புல்லெனல் | pulleṉal n. <>புன்-மை. Expr. signifying (a) ruined condition, loss of splendour; பொலிவழிதற் குறிப்பு. அரங்கு புல்லென்னப் போகி (சீவக. 2531): (b) worthlessness; |
| புல்லை | pullai n. [T. K. M. pulla.] Dull, yellowish colour; மங்கல் நிறம். (W.) |
| புல்லைக்காளை | pullai-k-kāḷai n. <>புல்லை+. Dull yellowish bull, dun-coloured bull; மங்கல் நிறமுள்ள எருது. |
| புல்வரகு | pul-varaku n. <>புல்1+. A kind of millet; தானியவகை (யாழ். அக.) |
| புல்வரி | pul-vari n. <>id.+. [T. pullari.] See புல்லரி2. . |
| புல்வாடி | pul-vāṭi n. <>id.+. Grass depot; புல்விற்கு மிடம். (யாழ். அக.) |
| புல்வாண்டைக்காசு | pul-vāṇṭai-k-kācu n. A small coin; சிறுநாணயவகை. புல்வாண்டைக் காசுமில்லையென்று கரைவாரும் (விறவிவிடு. 373). |
| புல்வாய் | pul-vāy n. <>புல்1+. Deer, antelope; கலைமான். புல்வாய் புலியுழை மரையே கவரி (தொல். பொ. 590). |
| புல்வாரி | pul-vāri n. <>id.+. Sickle for cutting grass; புல் அறுக்கும் அரிவாள். (யாழ். அக.) |
| புல்விரியன் | pul-viriyaṉ n. <>id.+. Grass adder, small viper, Echis carinata; விரியன்பாம்பு வகை (M. M.) |
| புல்வீடு | pul-vīṭu n. <>id.+. Thatched house; புல்வேய்ந்த கூரையுள்ள குடிசை. (W.) |
| புல்வெட்டிப்பல் | pul-veṭṭi-p-pal n. <>id.+வெட்டு-+. Front teeth of cattle; incisors; மாட்டின் முன்வாய்ப் பல். |
| புல்வேய்குரம்பை | pul-vēy-kurampai n. <>id.+வேய்-+. See புல்வீடு. குன்றக்குறவன் புல்வேய்குரம்பை (ஐங்குறு. 252). . |
| புல 1 - த்தல் | pula- 12 v. intr. 1. To pout, sulk; to be displeased; மனம்வேறுபடுதல். புலத்தலு மூடலு மாகியவிடத்து (தொல். பொ. 157). 2. To suffer pain; --tr. 3. To dislike; |
| புல 2 - த்தல் | Pula- 12 v. tr. <>புலம். To make known; to instruct அறிவுறுத்துதல். புலக்கவேண்டுறுமக்காதை (உபதேசகா. சிவத்துரோ. 264). |
| புல | pula n. <>புல1-. See புலவு, 2, 3. புலவேல் வானவன் (பு. வெ. 10, 1, கொளு). . |
| புலக்கம் | pulakkam n. cf. புழக்கம். Habit; வழக்கம். (யாழ். அக.) |
| புலக்காணி | pula-k-kāṇi n. <>புலம்+. High, elevated land; மேட்டுநிலம். (W.) |
| புலகர் | pulakar n. <>Pulaha. One of ten Prajāpatis; பிரசாபதிகள் பதின்மரில் ஒருவர். |
| புலங்கொள்(ளு) - தல் | pulaṅ-koḷ- v. intr. <>புலம்+. 1.To be clearly understood; விளங்குதல். (W.) 2. To be visible; to be bright; |
| புலங்கொளி | pulaṅ-koḷi n. <>id.+. 1. Sense-organ; இந்திரியம். (W.) 2. Epicure, sensual man; |
| புலச்சாமை | pula-c-cāmai n. <>id.+. A kind of poor-man's millet; சாமைவகை. (W.) |
| புலச்சாய்வு | pula-c-cayvu n. <>id.+. Fields and lands adjacent to fields; வயற்புறம். (W.) |
| புலச்சார்வு | pula-c-cārvu n. <>id.+. See புலச்சாய்வு. (W.) . |
| புலச்சி 1 | pulacci n. <>id. Wise woman; அறிவுநிறைந்தவள். சிவனிற் புலச்சிதனக்கு (திருப்பு. 123.) |
| புலச்சி 2 | pulacci n. Gum lac tree. See கும்பாதிரி1. (Nels.) |
| புலச்செய்கை | pula-c-ceykai n. <>புலம்+. Agriculture, husbandry, tillage; உழவு. (W.) |
| புலத்தகை | pula-t-takai n. <>புல1-+தகை. Sulks; ஊடல். இராகுலன் றன்னொடு புலத்தகை யெய்தினை (மணி. 10, 21) |
