Word |
English & Tamil Meaning |
|---|---|
| புலால்கட்டி | pulāl-kaṭṭi n. <>புலால்+. One who binds by magic the mouths of sharks, etc., at a pearl-fishery; முத்துச்சலாபத்தில் கொடிய கடல்மீன் முதலியவற்றை வாய்க்கட்டித் தடுப்போன். (சங். அக.) |
| புலால்கட்டு - தல் | pulāl-kaṭṭu- v. intr. <>id.+. To bind by magic the mouths of sharks, etc., at a pearl-fishery; முத்துச்சலாபத்திற் கொடிய மீன் முதலியவற்றின் வாயைக் கட்டுதல். (J.) |
| புலாவு | pulāvu n. See புலௌ. . |
| புலாவு 1 - தல் | pulāvu- 5 v intr. <>புலவு-. See புலவு-. உரவுக் களிற்றுப் புலாஅம் பாசறை (பதிற்றுப்.61, 15). . |
| புலாவு 2 - தல் | pulāvu 5 v. intr. cf புலம்பு-. To make noise; ஒலித்தல். புலாகின்ற வேலை (திவ். இயற். திருவிருத். 75). |
| புலாவு 3 - தல் | pulāvu- 5 v. intr. <>புலர்-. To dawn; விடிதல். (திவ். இயற். திருவிருத்.75, வ்யா.) |
| புலாழி | pulāḻi n. <>புல +ஆழி. Discus smelling of slain bodies; புலால் நாற்றம் பொருந்திய சக்கரப்படை. புலாழித் தலைக்கொண்ட புண் (பு. வெ. 4, 22). |
| புலாற்றானம் | pulāṟṟāṉam n. <>புலால்+தானம். Body, as made of flesh; உடம்பு. புலாற்றான நீக்காலாமே (தேவா. 1224, 2). |
| புலாற்றுருத்தி | pulāṟṟurutti n. <>id.+துருத்தி. See புலாற்றானம். பொல்லாப் புலாற்றுதுத்தி போக்கலாமே (தேவா.1224, 1). . |
| புலான்மறுத்தல் | pulāṉ-maṟuttal n. <>id.+. Abstinence from animal food; மாமிச போசனம் விலக்குகை. (குறள், 26, அதி.) |
| புலானாற்றம் | pulāṉāṟṟam n. <>id.+நாற்றம். Smell of fish or flesh; மாமிச வீச்சம். |
| புலானீர் | pulāṉīr n. <>id.+நீர். Blood; இரத்தம். (சூடா.) |
| புலி | puli n. <>புல்லு-. 1. [T. K. M. puli, Tu. pilli.] Tiger; panther; விலங்குவகை புலிதாக்குறின் (குறாள், 599). 2. See புலிக்கால்முனி. தில்லைச் சிவனேயிவ் வாட்டை விட்டுப் போமோசொல் லாயப் புலி (தனிப்பா. ii, 40, 79). 3. East Indian kino. 4. Lion; 5. Leo of the zodiac; 6. A compound ointment, one of nālvakai-c-cāntu, q. v.; 7. A perfumed unguent for the hair; 8. Uvula; 9. Piece in the game of puli-k-kaṭṭam; |
| புலிக்கட்டம் | puli-k-kaṭṭam n. <>புலி+. A kind of chess. See பதினைந்தாம்புலி. |
| புலிக்கட்டாம் | puli-k-kaṭṭam n. Corr. of புலிக்கட்டம். Loc . |
| புலிக்கட்டான் | puli-k-kaṭṭāṉ n. corr. of புலிக்கட்டம். Loc. . |
| புலிக்கண் | puli-k-kaṇ n. <>புலி+. Loc. 1. Stone grid on the inner side of a sluice; செத்தை சருகுகள் புகாதபடி மதகின் உட்புறத்தில் நிறுத்தும் துளையிட்ட கல். 2. See புலிக்கண்கல். |
| புலிக்கண்கல் | puli-k-kaṇ-kal n.<>புலிக்கண்+. Sardonyx, a precious stone; கோமேதகம். (யாழ். அக.) |
| புலிக்கான்முனி | puli-k-kāṉ-muṉi n. <>புலி+ கால்+. A Rṣi; வியாக்கிரபாதர். (கோயிற்பு. பதஞ்சலி. 77.) |
| புலிக்குடத்தி | puli-k-kuṭatti n. <>id.+. Hyaena; கழுதைப்புலி. (W.) |
| புலிக்குமிழ் | puli-k-kumiḻ n. perh. id.+. Coomb teak. See பெருங்குமிழ். (Nels.) |
| புலிக்குளமாடு | pulikkuḷa-māṭu n. Bullock of a special breed from Pulikkuḷam in Madura district; மதுரை ஜில்லாவில் புலிக்குளத்தில் உண்டகும் மாடுவகை. Loc. |
| புலிக்கொடியோன் | puli-k-koṭiyōṉ n. <>புலி+. Cōḻa king, as having a tiger-flag; சோழன். (பிங்.) |
| புலிகடிமால் | puli-kaṭi-māl n. <>id.+. Iruṅkō-vēḷ, an ancient chief who slew a tiger that threatened a sage; புலியைகொன்று முனிவரை மீட்ட இருங்கோவேளென்னும் சிற்றரசன். (புறநா. 201.) |
| புலிங்கம் 1 | puliṅkam n. cf. kuliṅga. Sparrow; ஊர்க்குருவி. (பிங்.) |
| புலிங்கம் 2 | puliṅkam n. <>spuhilṅga Spark of fire; நெருப்புப்பொறி. (திவா.) புலிங்கசாலம். (பாரத. காண். 22). |
| புலிச்சங்கிலி | puli-c-caṅkili n. <>புலி+. See புலித்தொடர். (முல்லைப். 62, உரை.) . |
| புலிச்சுவடி | puli-c-cuvaṭi n. <>id.+ Perh. சுவடு. [M. puliccuvadi.] Tiger's-foot bindweed, s.cl., Ipomaea pestigridis; செடிவகை. (L.) |
| புலித்தடுக்கி | puli-t-taṭukki n. See புலிதடுக்கி, 1. (சங். அக.) . |
