Word |
English & Tamil Meaning |
|---|---|
| புலியுகிரி | puli-y-ukiri n. <>id.+. See புலிதடுக்கி, 1. (சங். அக.) . |
| புலியுகிலி | puli-y-ukili n. <>id.+. See புலியுகிரி. (மலை.) . |
| புலியுயர்த்தோன் | puli-y-uyarttōṉ n. <>id.+. Cōḻa king, as flying a tiger-flag; [புலிக்கொடியை உயரவெடுத்தவன்] சோழன். (சூடா.) |
| புலியுறுமி | puli-y-uṟumi n. <>id.+. (J.) 1. A kind of drum sounding like the growl of a tiger; புலிபோல் முழங்கும் பறைவகை. 2. Watchman's rattle; 3. Rattle to scare away birds; |
| புலியுறை | puli-y-uṟai n. <>id.+. Sheath of sword, javelin, etc., made of tiger's skin; புலித்தோலாற் செய்த ஆயுதத்தின் மேலுறை. திண்பிணி யெஃகம் புலியுறை கழிப்ப (பதிற்றுப். 19, 4). |
| புலியூர் | puli-y-ūr n. <>id.+. Chidambaram, as the place of vyāghrapāda, a Rṣi with tiger's legs; [வியாக்கிரபாதர் நகரம்] சிதம்பரம். (சூடா.) |
| புலியூர்வெண்பா | puli-y-ūr-veṇpā n. <>புலியூர்+. A poem on the šiva shrine in Chidambaram, by Māri-muttu-p-pulavar, 18th cent; சிதம்பரத்துச் சிவபெருமான்மேல் பதினெட்டாம் நூற்றாண்டினராள மாரிமுத்துப் புலவரியற்றிய ஒரு பிரபந்தம். (அபி. சிந்.) |
| புலிரிகம் | pulirikam n. Snake; பாம்பு. (யாழ். அக.) |
| புலிவேஷம் | puli-vēṣam n. <>புலி+. Masquerade during Muharram, especially the tiger-masquerade; முகரம் பண்டிகையில் கொள்ளும் புலிக்கோலம் முதலிய வேஷம். (G. sm. D. I. i, 106.) |
| புலு | pulu n. Cant for ten; பத்தைக் குறிக்கும் குழூஉக்குறி. (சங். அக.) |
| புலுட்டு - தல் | puluṭṭu- 5 v. tr. Caus. of புலுண்டு-. cf. pluṣṭa. (J.) 1. To roast, parch, fry lightly; ரொட்டி முதலியன கருக்குதல். 2. To burn, as one's finger; to scald; |
| புலுட்டை | puluṭṭai n. <>புலுட்டு-. (யாழ். அக.) 1. That which is withered, thin, lean; செழிப்பற்றது. புலுட்டைப்பயிர். 2. Dim colour, tawny brown; 3. Wilting condition; |
| புலுண்டல் | puluṇṭal n. <>புலுண்டு-. (W.) 1. Food carelessly cooked, badly roasted or smoked; கருகலுணவு. 2. See புலுட்டை, 3. |
| புலுண்டு - தல் | puluṇtu- 5.v. intr. To be roasted, fried or parched lightly; to be spoiled in boiling by the absorption of water; கருகுதல். |
| புலுதசந்தி | puluta-canti n. <> pulta+. (Gram) Lengthening of a vowel in the combination of two words, as irāa-p-pakal; உயிரளபெடை தோன்றும் புணர்ச்சி. (பி. வி. 5, உரை.) |
| புலுதம் | pulutam n. <>pluta. 1. (Gram.) Lengthening a vowel, in poetry; உயிரளபெடை. (பி. வி. 5, உரை.) 2. Consonant; 3. Caper of a horse, one of five accuva-kati, q. v.; 4. (Mus.) one of the ten varieties of kālam, q. v., Which consists of 49152 kaṇam; 5. (Mus.) A variety of aṅkam, q. v., which consists of 12 akṣara-kālam; |
| புலை | pulai n. prob. புல1-. [K. hole.] 1. Baseness; இழிவு. புலையாம் புறவி பிறந்து (அஷ்டப். திருவரங்கக்க.16). 2 Uncleanness; 3 Defilement; 4. Vice, evil way; 5. Lie; 6. Adultery; 7. Animal food; 8. Outcaste; 9. Stench; |
| புலைச்சி 1 | pulacci n. Fem. of புலையன். A woman of pulaiya caste; புலைப்பெண். கண்ணில்லா ளொரு புலைச்சி (பிரமோத். 3, 3). |
| புலைச்சி 2 | pulaicci n. Nitrate of potash; யவட்சாரம். (சங். அக.) |
| புலைச்சேரி | pulai-c-cēri n. <>புலை+. Quarters of the pulaiyas; புலைச்சாதியோர் வாழுமிடம் அவ்வாறு செறிமனைகள் புலைச்சேரி சுடுகாடாகும் (சிவரக. பிசாசு. 22). |
| புலைசு | pulaicu n. <>id. [T. plousu.] Flesh, raw meat; புலால். புலைசு தேன்க ளொருவுதல். (யசோதர. 4, 17). |
| புலைஞர் | pulaiar n. <>id. 1. Vile people; இழிந்தோர். (யாழ். அக.) 2. Outcastes; |
