Word |
English & Tamil Meaning |
|---|---|
| புலைத்தனம் | pulai-t-taṉam n. <>id.+. 1. Baseness, vileness; இழிகுணம். 2. Barbarity; cruelty to animals; |
| புலைத்தி | pulaitti n. <>id. 1. A lowcaste woman; இழிகுலத்துப் பெண். முருகு மெய்ப்பட்ட புலைத்தி போல (புறநா. 259). 2. Washerwoman; |
| புலைத்தொழில் | pulai-t-toḻil n. <>id.+. Evil habits, vile practice; இழிசெயல். பொல்லாத காமப் புலைத்தொழிலில் (தாயு. எந்நாட்.தத்துவ.13). |
| புலைப்பாடி | pulai-p-pāṭi n. <>id.+. See புலைச்சேரி. சிற்றில்பல நிறைந்துளதோர் புலைப்பாடி (பெரியபு. திருநாளைப். 6). . |
| புலைமகன் | pulai-makaṉ n. <>id.+. 1. Low-caste man; கீழ்ச்சாதியான். 2. Purohit, as officiating in funeral ceremonies; 3. Barber, as officiating in funeral ceremonies; |
| புலைமை | pulaimai n. <>id. 1. Vileness; baseness; இழிவு. நின் தலைமையில் வாழ்க்கை புலைமையென் றஞ்சி (மணி. 24, 80). 2. Vicious practice; |
| புலையன் | pulaiyaṉ n. <>id. [K. holeyan M. pulayan.] 1. Base or low-caste person, outcaste; கீழ்மகன். புலையனும் விரும்பாதவிப் புன்புலால் யாக்கை (அரிச். பு. மயான. 128). 2. Purohit; 3. An aboriginal caste on the Aṉaimalais and other hills of South India; 4. Outcaste; 5. A person belonging to pāṇaṉ caste; |
| புலையாட்டம் | pulai-y-āṭṭam n. <>id.+. Transitoriness, illusiveness; நிலையின்மை. (W.) |
| புலையாட்டு | pulai-y-āṭṭu n. <>id.+. See புலையாட்டம் (W.) . |
| புலையாடி | pulai-y-āṭi n. <>id.+. Pulaiya man, a term of abuse; புலையன் எனப் பொருள் படும் நிந்தைச்சொல். Nā. |
| புலையாடு - தல் | pulai-y-āṭu- n. intr. <>id. To lead a vicious life; இழிவாக நடத்தல். (W.) |
| புலைவினையர் | pulai-viṉaiyar n. <>id.+. Abominable, vile persons; men of execrable deeds; இழிதொழிலாளர். கொலைவினைய ராகிய மாக்கள் புலை வினையர் (குறள். 329). |
| புலோமசித்து | pulōmacittu n. <>pulōmajit Indra, the conqueror of pulōmaṉ; [புலோம் னென்பவனை வென்றவன்] இந்திரன். (யாழ். அக.) |
| புலோமசை | pulōmacai n. <>pulōma-jā. Indrāṇi, the wife of Indra, as the daughter of Pulōmaṉ; [புலோமன் மகள்.] இந்திராணி. (பிங்.) |
| புலோமன் | pulōmaṉ n. <>Pulōma. A Daitya killed by Indra; இந்திரனாற் கொல்லப்பட்ட ஒரு அசுரன். (சங். அக.) |
| புலௌ | pulau n. <>U. pulāo. (W.) 1. A kind of dish prepared of cooked meat and boiled rice; ஊனோடு கலந்து பக்குவப்படுத்திய உணவு. 2. A kind of rice-gruel; |
| புவ்வத்தாமரை | puvva-t-tāmarai n. <>புல்வம்+. Lotus from the navel of Viṣṇu, as the most ancient; திருமாலின் நாபியிளின்று எழுந்த கமலம். புல்வத் தாமரை புரையுங் கண்ணன் (பரிபா 15, 49). |
| புவ்வதர் | puvvatar n. See பூர்வதரர். ஐம்பத்தைந்திரட்டிப் பத்தாம் புவ்வதர் (மேருமந்.1354). . |
| புவ்வம் | puvvam n. <>Pkt. puvva <> pūrva. 1. That which is ancient; பழைமையானது. 2. A Jaina āgama; |
| புவத்துக்குடி | puvattu-k-kuṭi n. <>புறம்+. A division of Cheṭṭis who wear a tuft of hair and who came originally from pūvattu-k-kuṭi, a village in Tanjore District; தஞ்சாவூர் ஜில்லாவிலுள்ள புவத்துக்குடியிலிருந்து வந்த ஒருசார் செட்டிச்சாதி. (E. T. ii 92.) |
| புவம் | puvam n. prob. bhuva. Space; ஆகாயம். புவம்வளிகனல் புனல்புவி (தேவா. 615, 1). |
| புவர் | puvar n. Enemies; பகைவர். Tranquebar. |
| புவலோகம் | puva-lōkam n. <>bhuvarlōka. 1. An upper world, the second of mēlēḻ-ulakām, q.v.; மேலேழுலகத் தொன்று (பிங்.) 2. cf. bhuvana-lōka. Earth; |
| புவன் | puvaṉ n. <>bhuva. God, as selfexistent; [சுயம்பு] இறைவன். புவனெம்பிரான் (திருவாச, 5, 9). |
| புவனகர்த்தாக்கள் | puvaṉa-karttākkaḷ n. <>bhuvana + kartr. Gods presiding over the various worlds; உலகபாலரான கடவுளர். (W.) |
| புவனகோசம் | puvaṉa-kōcam n. <>id.+. Earth; பூமி. Loc. |
| புவனசாரம் | puvaṉa-cāram n. <>id.+ sāra. The ideal place or heaven on earth; பூமியிற் சிறந்த பாகம். (காஞ்சிப்பு. திருவே. 55.) |
