Word |
English & Tamil Meaning |
|---|---|
| புளிகொடு - த்தல் | puḷi-koṭu- v. intr. <>id.+. To give tamarind pulp to a man who has swallowed pearls, causing him to void them; சலாபத்தில் முத்தை விழுங்கினவனிடமிருந்து அம்முத்தை மலமுலம் வெளியேற்றப் புளியை உட்கொள்ளச் செய்தல். (W.) |
| புளிங்கறி | puḷi-ṅ-kaṟi n. <>id.+. Curry containing tamarind juice; புளிச்சாறிட்டுச் சமைத்த கறி. (S. I. I. ii, 127.) |
| புளிங்காடி | puḷi-ṅ-kāṭi n. <>id.+. Vinegar; மிகப்புளிப்பேறிய காடி |
| புளிங்கூழ் | puḷi-kūḻ n. <>id.+. Porridge cooked in tamarind juice; புளியிட்டாக்கிய கூழ்வகை. அவரையம் புளிங்கூழ் (மலைபடு. 436). |
| புளிச்சக்காடி | puḷicca-k-kāṭi n. <>புளி-+. 1. See புளிச்சற்காடி. (W.) . 2. Extreme sourness, as of vinegar; |
| புளிச்சக்காய் | puḷiccakkāy n. See புளிச்சக்காய்மரம். . |
| புளிச்சக்காய்மரம் | puḷiccakkāy-maram n. Bilimbi tree, s.tr., Averrhoa bilimbi; ஒரு வகைமரம். (L.) |
| புளிச்சக்கை | puḷi-c-cakkai n. <>புளி+. Refuse of tamarind fruit; புளியைக் கரைத்தபின் எஞ்சிய சாரமற்ற கோது. Loc. |
| புளிச்சதண்ணீர் | puḷicca-taṇṇīr n. <>புளி-+. Water allowed to stand over cooked rice and get sour; புளிப்பேறிய பழஞ்சோற்று நீர். Colloq. |
| புளிச்சநார் | puḷicca-nār n. <>புளிச்சை+. Fibre of Indian brown hemp; புளிச்சைச்செடியிலிருந்து எடுக்கப்படும் நார். Colloq. |
| புளிச்சல் | puḻiccal n. <>புளி-. Anything acid, sour or leavened; புளிப்பானது. (W.) |
| புளிச்சலேப்பம் | puḷiccal-ēppam n. <>புளிச்சல்+. See புளிச்சேப்பம். (W.) . |
| புளிச்சற்கண் | puḷiccaṟ-kaṇ n. <>புளிச்சை+. See புளிச்சைக்கண். (W.) . |
| புளிச்சற்காடி | puḷiccaṟ-kāṭi n. <>புளிச்சல்+. 1. Sour water in which palmyra pulp has been washed; புளித்த பனாட்டுத் தண்ணீர். (W.) 2. See புளிச்சதண்ணீர். Loc. |
| புளிச்சற்றண்ணீர் | puḷiccaṟṟaṇṇīr n. <>id.+. See புளிச்சதண்ணீர். (W.) . |
| புளிச்சாங்கீரை | puḷiccāṅ-kīrai n. <>புளிச்சை+. See புளிச்சை, 1. Loc. . |
| புளிச்சாணை | puḷi-c-cāṇai n. <>புளி+. Rounded mass of tamarind pulp; புளித்திரளை. Loc. |
| புளிச்சாறு | puḷi-c-cāṟu n. <>id.+. Vegetable soup prepared with tamarind and fenugreek; ஒருவகைக் குழம்பு. (W.) |
| புளிச்சான் | puḷiccāṉ n. <>புளி-. A large woody climber with shining leaves and scarlet fruits, m.cl., Uvaria narum; கொடிவகை. Loc. |
| புளிச்சி | puḷicci n. A kind of coarse cotton; பருத்திவகை. (G. Tn. D. I, 163.) |
| புளிச்சுரோணிதம் | puḷi-c-curōṇitam n. <>புளி+. Acid substance which combines with an alkali. See பெண்சரக்கு. (W.) . |
| புளிச்செவ்வந்தி | puḷi-c-cevvanti n. <>id.+. A species of wooly jacket, s.tr., Eriolaena hookeriana; மரவகை. (L.) |
| புளிச்சேப்பம் | puḷiccēppam n. <>புளி-+ ஏப்பம். Belching on account of indigestion; உண்டது செரியாமையால் வரும் ஏப்பம். |
| புளிச்சை | puḷiccai n. <>id. [K. pilici.] 1. Indian brown hemp, m. sh., Hibiscus cannabinus; செடிவகை. (L.) 2. Roselle. 3. Lac tree. 4. See புளிச்செவ்வந்தி. 5. Rheum, secretion from the eyes; |
| புளிச்சைக்கண் | puḷiccai-k-kaṇ n. <>புளிச்சை+. Blear eyes, rheumy eyes; பீளைநிரம்பியகண். |
| புளிச்சைக்கீரை | puḷiccai-k-kīrai n. <>id.+. See புளிச்சை, 1. (மலை.) . |
| புளிச்சோறு | puḷi-c-cōṟu n. <>புளி+. See புளியோதனம். புளிச்சோறுண்டுளே களித்தேன் (அருட்பா, vi, அவாவறுப்பு. 7). . |
| புளிஞ்சோறு | puḷi--cōṟu n. <>id.+. See புளியோதனம். . |
| புளிஞன் | puḻiaṉ n. <>pulinda. Hunter, mountaineer; வேடன். (சூடா.) சவரர் புளிஞர் வளைந்தது (பெருங். உஞ்சைக். 55, தலைப்பு). |
| புளித்தண்ணீர் | puḷi-t-taṇṇīr n. <>புளி+. See புளிக்காய்ச்சல். Loc. . |
| புளித்தமா | puḷitta-mā n. <>புளி+. Fermented dough; புளிப்பேறிய தோசைமா. Loc. |
| புளித்தல் | puḷittal n. A species of flowered nutmeg, s. tr., Goniothalamus wightii; சிறுமரவகை. (L.) |
