Word |
English & Tamil Meaning |
|---|---|
| புளுகன் | puḷukaṉ n. <>புளுகு. Liar; பொய்யன். |
| புளுகு | puḷuku n. <>phalgu. 1. Obvious lie, bare-faced falsehood; சுத்தப்பொய். 2. Concoction; |
| புளுகு - தல் | puḷuku- 5 v. intr. <>புளுகு. 1. To tell bare-faced lies; முழுப்பொய் சொல்லுதல். 2. To concoct; |
| புளுகுணி | puḷukuṇi n. <>id.+. Liar; பொய்யன். |
| புளை - தல் | puḷai- 4 v. intr. prob. புனை-. To be equipped, accoutred, adorned; அலங்கரிக்கப்படுதல். புளைந்த பாய்பரி (கம்பரா. கரன்.76). |
| புளை - த்தல் | puḷai- 11 v. intr. See புனை-, புளைத்தரத மாபுரலி (பாரத. மணிமான். 41). |
| புற்கசன் | puṟkacaṉ n. <>pukkaša. Low, vile, base man; சண்டாளன். (W.) |
| புற்கட்டி | puṟ-kaṭṭi n. <>புல் 1+. Piece of turf of sod; புல்லுடன்கூடிய மண்கட்டி. (W.) |
| புற்கட்டை | puṟ-kaṭṭai n. <>id.+. 1. Stem of harialli grass; அறுகம்புல்லின் அடிக்கட்டை. (W.) 2. Stubble; |
| புற்கம் | puṟkam n. <>புன்-மை. 1. Fault, defect; குறைவு. 2. Wrong knowledge; prejudice, bias; 3. Delusion; illusion; worldliness; |
| புற்கரடு | puṟ-karaṭu n. <>புல் 1+. See புற்பற்றை. Loc. . |
| புற்கலம் | puṟkalam n. <>pudgala. 1. Body; சரீரம். புற்கலம் புறவுருவாகும் (மணி.27, 197). 2. Matter, as the non-living part of the creation; 3. (Jaina.) A category of fundamental entities. |
| புற்கலன் | puṟkalaṉ n. <>id. Soul, life; ஆன்மா (பிங்.) மனனைப் புற்கலனிடத்தி லொடுக்கி (காசிக.யோக.13). |
| புற்கலாவர்த்தம் | puṟkalāvarttam n. <>puṣkalāvartta. Cloud that rains gold; புட்கலாவருத்தம், 1. (அக. நி.) |
| புற்கலாஸ்திகாயம் | puṟkalāstikāyam n. <>pudgalāstikāya. (Jaina.) Matter which possesses colour, smell, taste and form, and is perceptible to touch, and which is the source of karma, one of pacāstikāyam, q.v; பஞ்சாஸ்திகாயத்துள் சுவை, ஒளி, ஊறு, நாற்றம் இவற்றையுடையதும் கருமத்திற்கு ஆதாரமாவதுமான ஒர் அஸ்திகாயம். |
| புற்கவ்வு - தல் | puṟ-kavvu- v. intr. <>புல் 1+. Lit., to eat grass. [புல்லுண்ணுதல்] To accept defeat; தோல்வியை யொத்துக்கொள்ளுதல். போக்யதைக்குத் தோற்றுப் புற்கவ்விச் சொல்லுகிறார் (ஈடு, 5, 8, 1). |
| புற்கற்றை | puṟ-kaṟṟai n. <>id.+. Bundle of grass; புற்றிரள். எழுந்த புற்கற்றை தீற்றி (சீவக. 3105). |
| புற்கு | puṟku n. <>புன்-மை. Tawny colour, dimness; கபிலநிறம். (திவா.) |
| புற்குருவி | puṟ-kuruvi n. perh. புல் 1+. A kind of quail; காடைவகை. (W.) |
| புற்கெனல் | puṟkeṉal n. <>புற்கு+. Expr. signifying (a) being dim; ஒளிமழுங்கற் குறிப்பு. வாளற்றுப் புற்கென்ற கண்ணும் (குறள்.1261): (b) being useless; (c) paling in comparison; |
| புற்கை | puṟkai n. <>புல் 1. 1. A kind of porridge of rice or other grains; ஒருவகைக்கஞ்சி. தெண்ணீ ரடுபுற்கை யாயினும் (குறள், 1065). 2. Boiled rice; |
| புற்கொடி | puṟ-koṭi n. <>id.+. Calabash. See சுரை 1,4. (மலை). . 2. Wild melon. See பேய்ச்சுவரை. (பிங்.) |
| புற்கோரை | puṟ-kōrai n. <>id.+. A coarse grass, Cypcrus juncifolins; கோரைவகை. |
| புற்சாமை | puṟ-cāmai n. <>id.+. A species of little millet Panicum; சாமைவகை. |
| புற்பதி | puṟ-pati n. <>id.+ pati. cf. tṟṇanrāja. 1. Palmyra. See பனை, 1. (பிங்.) . 2. Plantain-root; |
| புற்பற்றை | puṟ-paṟṟai n. <>id.+. Turf, sod; புல்லுடன் கூடிய மண்ணாங்கட்டி. |
| புற்பறி | puṟ-paṟi n. <>id.+. A kind of wicker-basket; ஒருவகைக்கூடை. (W.) |
| புற்பாய் | puṟ-pāy n. <>id.+. Grass-mat; பாய்வகை. (திவா.) |
| புற்புதம் | puṟputam n. <>budbuda. Water bubble; நீர்க்குமிழி. (திவா.). புற்புதமேயன்ன பொய்க்குடி வாழ்க்கையை (திருநூற். 3). |
| புற்புல்லெனல் | puṟ-pul-l-enal n. Expr. indicating break of day; விடிதற் குறிப்பு. (W.) |
