Word |
English & Tamil Meaning |
|---|---|
| புறக்காதுபடல் | puṟa-k-kātu-paṭal n.<> id.+ Turning forward of the lobe of the ear, caused by bad treatment after perforation ; குத்திய காதில் சோணை கோணி மடிந்திருக்கை . (J.) |
| புறக்காப்பு | puṟa-k-kāppu n.<>id.+. Outer guard or sentry ; புறத்தே யமைக்கப்படுங் காவல். பாடிகாவலர்..புறக்காப்பமைத்து (பெருங்மகத.17, 215) . |
| புறக்காவல் | puṟa-k-kāval n.<>id.+. Body-guard ; மெய்க்காவல். (W.) |
| புறக்காழ் | puṟa-k-kāḻ n.<> id.+. 1. Hard outer part of the stem of a tree, as of palmyra; பனை முதலியவற்றில் உள்ள வெளி வயிரம்.(தொல்.பொ.640). 2. Female tree, as palmyra ; |
| புறக்கிடு - தல் | puṟakkiṭu- v. intr. <>புறக்கு+. To flee, take to flight, showing one's back to enemy ; புறங்காடி யோடுதல். வெருவொடு புறக்கிடுவது (பாரத. அணி.28) . |
| புறக்கு, | puṟakku n.<>புறம் Outer side or face of anything ; வெளிப்புறம். வெண்புறக்குடைய திரிமருப் பிரலை. (அகநா.139) . |
| புறக்குடி | puṟa-k-kuṭi n<>id.+. 1. Farmer of field-labourer, not being a regular tenant under a landlord; மிராசுதாரருக்குக் கட்டுபடாத குடியானவன். Tj. 2. Ryot who farms in neighbouring villages, dist. fr. uṭkuṭi, a class of farmers in Salem District ; 3. See புறஞ்சேரி புறக்குடி கடந்து (மணி.28, 4) . |
| புறக்குடிப்பாயகாரி | puṟakkuṭi-p-pāya-kāri .<>புறக்குடி. Tenant without any occupancy right ; கிராமத்தில் நிலவுரிமை பெறாத வந்தேறியான குடி. (M.N.A.D. 284). |
| புறக்குடை | puṟa-k-kūṭai n.<>புறம்1 + கொடு. See புறக்கொடை, 4. புறக்குடை நீவி (பெருங். மகத. 14, 144). |
| புறக்குழல் | puṟa-k-kuḻal n.<>id.+. Tumour, round tumour, as on the neck of a bull, goitre ; கால்நடைகளுக்கு வருங் கழலை . (M. L.) |
| புறக்கூத்து | puṟa-k-kūttu n. <>id.+ A kind of dance ; கூத்துவகை. (சிலப். 3, 16, உரை.) |
| புறக்கூரை | puṟa-k-kūrai n.<>id.+ Part of the roof, sloping towards the back of a house ; வீட்டின் பின்புறம் தாழும் கூரை . (W.) |
| புறக்கை | puṟa-k-kai n.<>id.+. (W.) 1. Outside ; வெளிப்புறம். 2. Right side in turning ; 3. See புறங்கை. |
| புறக்கொடு - த்தல் | puṟa-k-koṭu- v.<>id.+ To turn back and flee after defeat; to allow to depart, let lose; -tr. தோற்றோடுதல். புறக்கொடுத் திறத்தி (புறநா.8). போகவிடுதல். திருப்புறக் கொடுத்த செம்பொற்றாமரை (சீவக.560) . |
| புறக்கொடை | puṟa-k-koṭai n.<>id.+. 1. Turning the back in battle-field; போரில் முதுகுகாட்டுகை. வினையை வென்று புறக்கொடை காணு மன்றே (சீவக.1430). 2. See புறங்காப்பு. 3. Outside of a temple; 4. Back of the body; 5. Separation, absence; |
| புறக்கோட்டை | puṟa-k-kōṭṭai n.<>id.+. Outer defence to a castle; barbican ; பிரதானக்கோட்டையைக் காக்கும் கட்டடம் |
| புறக்கோடி | puṟa-k-kōṭi n.<>id.+ See புறக்கடை. . |
| புறகடம் | puṟakaṭam n.<>id.+ Deceit ; வஞ்சனை . Loc. |
| புறகிடு - தல் | puṟakiṭu- v. intr. <>புறகு + See புறக்கிடு-, ஆயனும் புறகிட (சிவதரு. சனன. 55) . |
| புறகு | puṟaku adv. <>புறம்1 cf. பிறகு. Excluded person or thing ; புறம்பான-வன்-வள்-து. சிவனடியார் தம்மைத்தொழுது வந்தணையா தொருவாறெ துங்கும் வன்றெ ண்டன் புறகு (பெரியபு. விறன்மிண்.7). |
| புறங்கடை | puṟaṅ-kaṭai n.<>id.+. 1. Outside of a house; வீட்டின் வெளிப்புறம். புறங்கடை வைத்தீவர் சோறும் (நாலடி, 293). 2. Locality other than one's own; 3. Younger brother ; |
| புறங்கழித்தல் | puṟaṅ-kaḻittal n.<>id.+. A ceremony preliminary to a marriage among Nāṭṭukkoṭṭai Chettis wherein the purohit touches the bride's head, shoulders and knees with margosa twigs, and throws them away ; நாட்டுக்கோட்டைச்செட்டிகளின் விவாகத்திற்குமுன் புரோகிதன் மணமகளின் சிரம் தோள் முழுந்தாள்களில் வேப்பங்குழையால் தொட்டுப் பின் அதனை எறிந்துவிடுஞ் சடங்கு (E. T. v. 266.) |
| புறங்கா - த்தல் | puṟaṅ-kā v. tr. <>id.+. To guard, protect, save ; பாதுகாத்தல். வழிபடு தெய்வ நிற்புறங் காப்ப (தொல்.பொ.422). |
