Word |
English & Tamil Meaning |
|---|---|
| புறங்காட்டு - தல் | puṟaṅ-kāṭṭu- n.<>id.+. 1. To turn one's back, in contempt; அவமதிப்புண்டாகப் பின்புறந் திரும்புதல். 2. To show one's back, in defeat; 3. To have the outward appearance of, to pretend ; 4. See புறங்காண் . |
| புறங்காடு | puṟaṅ-kāṭu n.<>id.+ Place of cremation or burial ; சுடுகாடு. புறங்காட்டுதிர்ந்துக்க பல்லென்பு (நாலடி, 45). (பிங்.) |
| புறங்காண்(ணு) - தல் | puṟaṅ-kāṅ- v. tr. <>id.+. Lit., to see the back. To defeat, put to flight ; (முதுகு காணுதல்) முறியடித்தல். புரிநாண் புடையிற் புறங்காண்ட வல்லால் (கலித். 15). |
| புறங்காப்பு | puṟaṅ-kāppu n.<>id.+ Acting as body-guard ; புறத்தில் நின்று பாதுகாக்கை. புறங்காப் பிளையர் (பெருங். உஞ்சைக்., 33, 99) . |
| புறங்கால் | puṟaṅ-kāl n.<> id.+. 1. Upper part of the foot, instep ; பாதத்தின் மேற்புறம். புறங்காலிற் போக விறைப்பேன் (கலித். 144). 2. Heel ; |
| புறங்காழ் | puṟaṅ-kāḻ n.<>id.+ See புறக்காழ், 2 . . |
| புறங்கான் | puṟaṅ-kāṉ n.<>id. Jungle, pastoral tract ; முல்லைநிலம். புறங்கானில்வாழ் கோபாலரோ (பாரத. இராச. 115) . |
| புறங்கூற்றாளன் | puṟaṅ-kūṟṟāḷaṉ n.<>புறங்கூற்று+. Backbiter, slanderer ; பிறரைக்காணாவிடத்துப் பழிப்போன். பொய்க்காரியாளர் புரங்கூற்றாளர். (சிலப்.5, 141) . |
| புறங்கூற்று | puṟaṅ-kūṟṟu n.<>புறங்கூறு-. Slander, backbiting ; காணாவிடத்து பிறர்மேல் பழிதூற்றுகை. தீய புறங்கூற்றின் மூகையாய் (நாலடி, 158) . |
| புறங்கூறு - தல் | puṟaṅ-kūṟu v .intr. <>புறம்1+. 1. To backbite, slander; காணாவிடத்துப் பிறர்மேல் அலர்தூற்றுதல். புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் (குறள், 183). 2. To expose secrets ; |
| புறங்கை | puṟaṅ-kai n.<>id.+. Back of palm ; கையின் பின்புறம் அகங்கை யொட்டியும் புறங்கையிற் புகுத்தியும் (பெருங்.வத்தவ, 12, 83) . |
| புறங்கைநக்கு - தல் | puṟaṅ-kai-nakku- v.intr. <>id.+. Lit., to lick the back of one's hand, To be poor ; [கையின் மேற்புறத்தை நக்குதல்.] தரித்திர மிகுதல் . |
| புறங்கைநாறி | puṟaṅkai-nāṟi n. A tree ; மரவகை. |
| புறங்கொடு - த்தல் | puṟaṅ-koṭu- v. intr. <>புறம். 1. To turn one's back; பின்புறங்காட்டுதல். நாணென்னு நல்லாள் புறங்கொடுக்கும் (குறள்.924, ). 2. See புறங்காட்டு.2 |
| புறச்சபை | puṟa-c-capai n.<>id.+. Non-conformed christian; catechumen ; நற்கருணை யனுபவியாத கிறிஸ்தவர் கூட்டம். Chr. |
| புறச்சபையான் | puṟa-c-capaiyāṉ n.<> id.+. Non-conformed christian; catechumen ; நற்கருணை யனுபவியாத கிறிஸ்தவன். Chr. |
| புறச்சமயம் | puṟa-c-camayam n. <>id.+. Heterodox religious system ; மாறுபட்ட கொள்கையுள்ள மதம்.(சி.சி.8, 11) (பிங்) . |
| புறச்சாட்சி | puṟa-c-cāṭci n. <>id.+. 1. External evidence, circumstantial evidence; சந்தர்ப்பங்களை ஊகித்தறிய விடும் சாட்சி. 2. Witness other than attesting witnesses; 3. Witness brought to support or disprove evidence previously let in ; |
| புறச்சுட்டு | puṟa-c-cuṭṭu n. <>id.+. (Gram.) Demonstrative prefix a, i, u, not forming an integral part of the word of which it is a component, opp. to aka-c-cuṭṭu ; சொற்குப் புறத்துறுப்பாய் வருஞ் சுட்டெழுத்து . |
| புறச்சுவர்தீற்று - தல் | puṟa-c-cuvar-tīṟṟu- v. intr. <>id.+ Lit., to plaster the outside of a wall. 1. To entertain strangers while neglecting one's own kinsmen ; [சுவரின் மேர்புறத்தைத் சுண்ணத்தால் தீற்றுதல்] ¢ உறவினரை அலட்சியஞ்செய்து பிறருக்கு உபசாரம் பணுதல். 2. To be scrupulous in external conduct while being wicked at heart |
| புறச்சுற்று | puṟa-c-cuṟṟu n. <>id.+. 1. Outlying parts of a town or a village; சுற்றுப்புறப் பிரதேசம். 2. Environment, surroundings ; |
| புறச்சேரி | puṟa-c-cēri n.<>id.+. See புறஞ்சேரி. பலகோழி யுறைகிணற்றுப் புறச்சேரி (பட்டினப்.77) . |
| புறச்சொல் | puṟa-c-col n. <>id.+. What is spoken aloud ; நாடகத்தில் தனக்குட் பேசிக்கொள்ளாமல் எல்லோரும் கேட்கும்படியாக உரைக்குஞ் சொல் (சிலப்.3, 13, உரை) . |
