Word |
English & Tamil Meaning |
|---|---|
| புறத்தியான் | puṟattiyāṉ n. See புறத்தவன், 1. . |
| புறத்திரட்டு | puṇa-t-tiraṭṭu n. <>புறம்+. An anthology on the themes of puṟam; புறப்பொருள்பற்றிய செய்யுட்களைப் பலநூல்களிலிருந்து திரட்டி அமைக்கப்பட்ட தொகைநூல். |
| புறத்திரு - த்தல் | puṟattiru- v. intr. <>id.+இரு-. To wait outside; வெளியே காத்திருத்தல். புறத்திரு போகென்னு மின்னாச் சொல் (நாலடி, 326). |
| புறத்திறு - த்தல் | puṟattiṟu- v. tr. <>id.+இறு-. To besiege; முற்றுகையிடுதல். போக்கறவலைஇப் புறத்திறுத்தன்று (பு. வெ. 1, 7). |
| புறத்திறை | puṟattiṟai n. <>புறத்திறு-. (Puṟap.) Theme of an invading chief besieging his adversary's fort; வேற்றரசனுடைய மதிலை மேற்சென்ற வேந்தன் முற்றுகை செய்தலைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 6, 10.) |
| புறத்துப்பக்கம் | puṟattu-p-pakkam n. <>புறம்+. See புறப்பக்கம். Loc. . |
| புறத்துழிஞை | puṟattuḻiai n. <>id.+. Theme of an invading chief camping on the banks of the moat and besieging the fort of his adversary; வேற்றரசனுடைய மதிலைச் சூழ்ந்த அகழின் கரையில் மேற்சென்ற வேந்தன் சேனையுடன் தங்கி முற்றுகையிடுதலைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 6, 16.) |
| புறத்துறவு | puṟa-t-tuṟavu n. <>id.+உறவு. Assuming an ascetic's guise without real renunciation; அகப்பற்றுவிடாமல் துறவிபோல் வேடங்கொள்ளுகை. |
| புறத்துறுப்பு | puṟattuṟuppu n. <>id.+உறுப்பு. 1. External resources, as position, property, authority, influence, opp. to akattuṟuppu; இடம் பொருள் ஏவல் முதலிய பக்கத்துணை புறத்துறுப் பெல்லா மெவன் செய்யும் (குறள், 79). 2. Limb, external member of the body; |
| புறத்துறை | puṟa-t-tuṟai n. <>id.+. Minor theme grouped under a puṟattiṇai; புறத்திணையின் பகுதி. வீரரைப் பாடும் புறத்துறையெல்லாம் முடித்து (சிலப். 27, 46, அரும்.). |
| புறத்தொழுக்கம் | puṟattoḻukkam n. <>id.+. Living with concubines; பரத்தைய ரொடு கூடி யொழுகுகை. புறத்தொழுக்கத்திலே நெடுநாள் ஒழுகி . . . மீண்டு தலைவியோடுகூடி (ஐங்குறு.1, உரை). |
| புறந்தருநர் | puṟantarunar n. <>புறந்தா-. Protector; பாதுகாப்பவர். பகடுபுறந்தருநர் (புறநா.) |
| புறந்தா - தல் [புறந்தருதல்] | puṟan-tā- v. <>புறம்+. tr. 1. To protect, take care of; பாதுகாத்தல். குடி புறந்தருகுவை யாயின் (புறநா. 35). 2. To forsake; 3. To extol, praise; 4. To turn one's back in retreat; to be defeated; 5. To become shiny; |
| புறந்தாள் | puṟan-tāḷ n. <>id.+. See புறங்கால். (யாழ். அக.) . |
| புறந்துர - த்தல் | puṟan-tura- v. tr. <>id.+. To drive cattle by striking them on the back; எருதுகளை முதுகிலேயடித்து ஓட்டுதல். மகவுடை மகடூஉப் பகடு புறந்துரப்ப (பெரும்பாண். 58). |
| புறநகர் | puṟa-nakar n. <>id.+. Outlying part of a city, suburb; நகரின் புறப்பகுதி. |
| புறநடம் | puṟa-naṭam n. <>id.+. See புறநாடகம். (சிலப். 3, 12, அரும்.) . |
| புறநடை | puṟa-naṭai n. <>id.+. See புறனடைச்சூத்திரம். (நன்.19, மயிலை. அரும்.) . |
| புறநாடகம் | puṟa-nāṭakam n. <>id.+. A drama where the prevailing sentiment is one other than ciruṅkāram or love; சிருங்காரந் தவிர மற்றைச்சுவைபற்றிவரும் நாடகவகை. (சிலப். 3, 13, உரை.) |
| புறநானூறு | puṟa-nāṉūṟu n. <>id.+. An ancient poetic anthology on the topics of puṟa-p-poruḷ, containing 400 verses, one of cṭṭu-t-tokai, q. v.; எட்டுத்தொகையுள் ஒன்றானதும் புறப்பொருளைப்பற்றிய நானூறுபாடல்களைக் கொண்டதுமான தொகைநூல். |
| புறநிலை | puṟa-nilai n. <>id.+. 1. Outside; வெளிப்புறம். புறநிலைக் கோட்டம் (சிலப். 5, 180). 2. Changed condition or state; 3. Poem invoking the tutelary deity of a chief to shower prosperity on his family and his descendants, one of 96 pirapantam, q. v.; 4. Standing in the back-yard of one's house, seeking one's favour; 5. Personal attendance, as of a pupil upon his guru; 6. (Mus.) A class of primary melody-types, one of four cāti-p-perumpaṇ, q. v.; |
