Word |
English & Tamil Meaning |
|---|---|
| புறம்போக்கு - தல் | puṟam-pōkku- v. tr. <>id.+. To remove, take away; அகற்றுதல். பலகை புறம்போக்க (பெரியபு. ஏனாதி. 37). |
| புறம்விடு - தல் | puṟam-viṭu- v. tr. <>id.+. To abandon; விலக்கிவிடுதல். என்னைப் புறம் விடுத லென்னே பராபரமே (தாயு. பராபர. 263). |
| புறமட்டைநார் | puṟa-maṭṭai-nār n. <>id.+. Fibre on the outer side of the palmyra leaf-stalk, considered inferior; பனைமட்டையின் வெளிப்புறத்திலிருந்து எடுக்கும் மட்டமான நார்வகை. (J.) |
| புறமடை | puṟa-maṭai n. <>id.+மடை. 1. Outside channel for water; வெளிவாய்க் கால். (W.) 2. The outside of a sluice; 3. Outlet of a channel; 4. Offering of flesh and spirits, made to ferocious deities, outside a temple, opp. to uṇmaṭai; |
| புறமதில் | puṟa-matil n. <>id.+. Outer wall of a fortified town; கோட்டையின் வெளிமதில் (பதிற்றுப். 16, உரை.) |
| புறமதிற்சேரி | puṟa-matiṟ-cēri n. <>புறமதில்+. See புறஞ்சேரி. புறமதிற்சேரியுங் குறு குதற் கரிதா (பெருங். உஞ்சைக். 47, 72). |
| புறமயிர் | puṟa-mayir n. <>புறம்+. Hair on the body; உடலின் மயிர். (W.) |
| புறமலை | puṟa-malai n. <>புறம்+. Sistering hill; பக்கமலை. மாலிருஞ் சோலைப் புறமலைசார (திவ். திருவாய். 2, 10, 5). |
| புறமறிப்பார் - த்தல் | puṟa-maṟi-p-pār- v. tr. <>id.+மறி-+. To examine closely, as by turning inside out; [உட்பக்கத்தை வெளிப்புறமாகத் திருப்பிப்பார்த்தல்] நன்கு ஆராய்தல். மக்கள்யாக்கை யிதுவென வுணர்ந்து மிக்கோ யிதனைப் புறமறிப்பாராய் (மணி. 4, 121). |
| புறமறிவு | puṟam-aṟivu n. <>id.+. Regard for the welfare of others, benevolence; பிறர்க்கு நன்மை நினைக்கை. (W.) |
| புறமறை - த்தல் | puṟa-maṟai- v. tr. <>id.+. To conceal, hide; வெளித் தோன்றாமல் மறைத்தல். கையாற் றொழுக்கங் கொண்டு புறமறைத்து (மணி. 23, 22). |
| புறமனை | puṟa-maṉai n. <>id.+. House-site outside the quarters of the higher castes, opp. to uṇmaṉai; மேலோர் வாழும் ஊர்க்குடியிருப்புக்கு வெளியிலுள்ள மனையிடம். (C. G.) |
| புறமாக | puṟam-āka adv. <>id.+. 1. In the direction of, towards; பக்கமாய். 2. Clearly; |
| புறமாறு - தல் | puṟa-māṟu- v. <>id.+. intr. 1. To migrate, change place; இடம் மாறுதல். கொங்குண் வண்டிற் பெயர்ந்து புறமாறி (ஐங்குறு. 226) 2. To lose vigour or strength; 3. To abandon, desert; |
| புறமுழவு | puṟa-muḻavu n. <>id.+. A kind of inferior drum, as kaṇa-p-paṟai, etc.; அதமத் தோற்கருவி. (சிலப், 3, 27, உரை.) |
| புறமூலம் | puṟa-mūlam n. <>id.+. External piles; முளை வெளித்தோன்றும் மூலநோய் வகை. (M. L.) |
| புறமொழி | puṟa-moḻi n. <>id.+. Backbiting, slander; புறங்கூற்று. நிம்பிரி கொடுமை வியப்பொடு புறமொழி (தொல். பொ. 274). |
| புறவடி | puṟa-v-aṭi n. <>id.+. Upper surface of the foot, instep; பாதத்தின் மேற்புறம் யாமயாழ் மழலை யாடன் புறவடிக் கிழுக்க மன்னோ (கம்பரா. நாடவி. 34). |
| புறவடை | puṟa-v-aṭai n. <>புறவு+. 1. Plot of wet land cultivated mainly by lift irrigation; கிணற்றிறைவையாற் சாகுபடியாகும் நன்செய்த தாக்கு. (C. G.) 2. Field let to a tenant for cultivation; |
| புறவண்டை | puṟa-v-aṇṭai n. <>புறம்+. Back, behind; பின்புறம். புறவண்டை வந்து பிடித்தார்கள். |
| புறவணி | puṟa-v-aṇi n. <>புறவு+அண்-. See புறவு, 3, 4. (பிங்.) . |
| புறவம் 1 | puṟavam n. <>id. 1. See புறவு, 1, 3, 4. (பிங்.) நறைவிரி புறவம் (கம்பரா. நாட்டுப். 48). . 2. Shiyali; 3. Skin; |
| புறவம் 2 | puṟavam n. <>புறவு. See புறா. கானுறை புறவ மெல்லாம் (சீவக. 1430). . |
| புறவயிரம் | puṟa-vayiram n. <>புறம்+. The hard outer part of an exogenous tree; மரத்தின் வெளிவயிரம். (W.) |
| புறவரி | puṟa-vari n. <>id.+. (Dram.) Dance of a woman coldly neglecting the company of her lover; தலைவனுடன் அணையாது தலைவி புறத்தேநின்று நடிக்கும் நடிப்பு. புறத்து நின் றாடிய புன்புற வரியும் (சிலப். 8, 93). |
| புறவழி | puṟa-vaḻi n. <>id.+. Backside; பின்பக்கம். வீட்டின் புறவழிச் சுவர். |
| புறவளையம் | puṟa-vaḷaiyam n. <>id.+. A medicinal unguent for sore eyes, etc.; கண்ணோவு முதலியவற்றுக்கு இடும் மருந்துவகை. (W.) |
