Word |
English & Tamil Meaning |
|---|---|
| புறவாயம் | puṟa-v-āyam n. <>id.+. Revenue from external sources, collected mainly in cash; பணமாகத் தண்டப்படும் செக்கிறை முதலாய சில்லறை வரிகள். வடகண்டத்திலும் கமுகடியிலும் வந்த புறவாயங்களால் (S. I. I. iii, 121). |
| புறவாயில் | puṟa-vāyil n. <>id.+. Outer door, gate or entrance; வெளிவாசல். (W.) |
| புறவாரி | puṟa-vāri n. <>id.+. Eaves; தாய்ச்சுவரைக் கடந்து வெளியில் நீண்டுள்ள கூரை. Colloq. |
| புறவாலி | puṟavāli n. <>U. purwāi. Latrine, privy; கக்கூசு. (C. G.) |
| புறவாழி | puṟ-v-āḻi n. <>புறம்+. The outermost ocean surrounding the seventh annular continent; பெரும்புறக்கடல். பின்னப் படுத்திப் புறவாழி வரல்போல் (இரகு. திக்கு. 38). |
| புறவிசிவுச்சன்னி | puṟa-v-icivu-c-caṉṉi n. <>id.+இசிவு+. See புறவிச்சு. (W.) . |
| புறவிடுதி | puṟa-viṭuti n. <>id.+. See பிறவிடுதி. (J.) . |
| புறவிடை 1 | puṟa-viṭai n. <>id.+. Permission to leave; பிரிதற்குப்பெறும் விடை. கசிந்து தாழ்ந்தனன் புறவிடை கொண்டான் (காஞ்சிப்பு. பன்னிரு.142). |
| புறவிடை 2 | puṟa-v-iṭai n. <>id.+இடை. Back-yard of a house; வீட்டுக்கொல்லை. Cm. |
| புறவிதழ் | puṟa-v-itaḻ n. <>id.+. Sepal of a calyx, external petal; பூவின் வெளிப்புறத்துள்ள இதழ். |
| புறவிரல் | puṟa-viral n. <>id.+. Outer-side of a finger; விரலின் வெளிப்பக்கம். வீக்கின நரம்பை அகவிரலாலும் புறவிரலாலும் கரணஞ்செய்து (சீவக. 657, உரை). |
| புறவீச்சு | puṟa-vīccu n. <>id.+. See புறவிச்சுச்சன்னி. (W.) . |
| புறவீச்சுச்சன்னி | puṟa-vīccu-c-caṉṉi n. <>புறவீச்சு+. Lockjaw, tetanus; இசிவுநோய்வகை. (W.) |
| புறவீடு | puṟa-vīṭu n. <>புறம்+விடு-. 1. Sending the royal equipage in advance at an auspicious hour, before a king's journey; யாத்திரைக்குமுன் நன்முகூர்த்தத்தில் இராசசின்னத்தைப் புறத்தே அனுப்புகை.வாளைப் புறவீடு விட்டது (பு. வெ, 3, 4, கொளு, உரை); 2. See பிறவிடுதி. |
| புறவீதி | puṟa-vḻti n. <>id.+. 1. Street outskirting a town நகரின் வெளிவீதி. இவர் புறவீதிமகளிராய் முற்கூறிய கடைகழிமகளிர் (சிலப்.14, 118, உரை). 2. Outer court of a temple, etc.; |
| புறவு 1 | puṟavu n. <>id. 1. Forest ; காடு உதிர்த்த மலர்வீழ் புறவின் (பெரும்பாண். 496). 2. Jungle; 3. Forest tract; 4. Hilly tract; 5. Cultivable land; 6. Eared jasmine; |
| புறவு 2 | puṟavu n. <>புறா. Dove, pigeon; புறா. புன்புறப் புறவின் கணநிரை (பதிற்றுப். 39, 11)இ |
| புறவுரு | puṟa-v-uru n. <>புறம்+. Limb of the body; உடம்பினுறுப்பு. ஓரணு புற்கலம் புறவுரு வாகும் (மணி. 27, 197). |
| புறவுரை | puṟa-v-urai n. <>புறம்+. Preface; பாயிரம். (நன். பொது. 2.) |
| புறவெட்டு 1 | puṟa-veṭṭu n. <>id.+. 1. Cut on the surface of timber; மரத்தில் வெட்டும் மேல்வெட்டு. 2. Outside plank or piece of a sawn timber; 3. Contemptuous opposition or contradiction; |
| புறவெட்டு 2 | puṟaveṭṭu adj. <>E. Private; பிரத்தியேகமான. புறவெட்டு வக்கீல். |
| புறன் | puṟaṉ <>புறம். n. 1. See புறம். . 2. Slander; 3. Behind one's back; |
| புறனடை | puṟaṉaṭai n. <>புறன்+. See புறனடைச்சூத்திரம். (நன்.20.) . |
| புறனடைச்சூத்திரம் | puṟaṉaṭai-c-cūttiram n. <>புறனடை+. General permissive rule, sanctioning grammatical forms, not specifically dealt with; விதித்தவற்றுள் அடங்காதனவற்றை அமைத்துக்காட்டும் பொதுச்சூத்திரம் (சீவக. 39, உரை.) |
| புறனழி - த்தல் | puṟaṉ-aḷi- v. tr. <>புறன்+. To defame, slander புறங்கூறுதல் புறனழீஇப் பொய்த்து நகை (குறள், 182.) |
| புறனிலை | puṟaṉilai n. <>id.+நிலை. Hanging on a person in expectation of a favour; பின்னிலை. (அகநா. 32.) |
| புறனுரை | puṟaṉ-urai n. <>id.+. 1. Slander; பழிச்சொல். பொல்லான் றிரைந்தா னென்னும் புறனுரை (திவ். பெரியதி. 6, 4, 7). 2. Meaningless utterance; |
