Word |
English & Tamil Meaning |
|---|---|
| புனற்றுளசி | puṉaṟṟuḷaci n. See புனத்துளசி. (பிங்.) . |
| புனறருபுணர்ச்சி | puṉaṟaru-puṇarcci n. <>புனல்+தா-+. (Akap.) Union of a lover with his beloved on the occasion of his rescuing her from being drowned in a flood; வெள்ள நீரிடையே வீழ்ந்த தலைவியைத் தலைவன் காத்த விடத்து அவ்விருவர்க்கும் உண்டான கூட்டம். (தொல். பொ.114, உறை, பக். 548.) |
| புனனாடன் | puṉaṉāṭaṉ n. <>புனனாடு. Cōḻa king, as lord of puṉaṉāṭu; [நீர் நிறைந்த நாட்டை யுடையவன்] சோழ அரசன். புனனாடான் றாப்பியா ரட்ட களத்து (களவழி.1). (பி.ங்.) |
| புனனாடு | puṉaṉāṭu n. <>புனல்+நாடு. 1. The Cōḻa country; சோழநாடு. (பிங்.) பொன்னி யெந்நாளும் பொய்யா தளிக்கும் புனனாட்டு (பெரியபு. சண்டேசு. 1). 2. A region where koṭun-tamiḻ was spoken, one of 12 koṭun-tamiḻ-nāṭu, q. v.; |
| புனஸ்காரம் | puṉaskāram n. Corr. of புரஸ்காரம். (சங்.அக.) . |
| புனாதி | puṉāti n. See புனியாத்து. (C. G.) . |
| புனிகம் | puṉikam n. A mineral poison. See சங்கபாஷாணம். (யாழ். அக.) . |
| புனிதம் 1 | puṉitam n. <>punīta. Purity, holiness, sanctity; பரிசுத்தம். போனகஞ் செய்த சேடந் தருவரேற் புனித மன்றே (திவ். திருமாலை, 41). |
| புனிதம் 2 | puṉitam n. See புனர்தம். (சூடா.) . |
| புனிதமாயை | puṉita-māyai n. <>புனிதம்+. (šaiva.) Pure Māyā. See சுத்தமாயை. புனிதமாயையினாதமுதல்ற் புகல் (திருக்காளத். பு. உலகின்றோ. 5). |
| புனிதன் | puṉitaṉ n. <>id. 1. Pure, holy person; பரிசுத்தன். வேதம் விரித்துரைத்த புனிதன் (திவ். பெரியதி. 2, 1, 4). 2. šiva; 3. Indra; 4. Arhat; 5. Buddha; |
| புனியாத்து | puṉiyāttu n. <>U. bunyād. Foundation; அஸ்திவாரம். (C. G.) |
| புனிற்றா | puṉiṟṟā n. <>புனிறு+ஆ. Cow or buffalo which has recently calved; ஈன்ற ணிமையுள்ள பசு அல்லது எருமை. புனிற்றாப் பாய்ந்த வயிற்றுப் புண்ணினன் (மணி. 5, 47). எருமைச் செங்கட் புகரிற்றா (ஐங்குறு. 92). |
| புனிற்றுமதி | puṉiṟṟu-mati n. <>id.+. Crescent moon; இளமதி. புனிற்று மதிகண்டுருகிப் பொழிந்த நீரால் (பெரியபு. திருக்குறிப்பு. 92). |
| புனிறு | puṉiṟu; n. perh. புன்-மை. 1. Recency of delivery, as of a woman; ஈன்றணிமை. புதல்வற் பயந்த புனிறுசேர் பொழுதின் (தொல். பொ. 146). 2. That which is recently born; 3. Greenness, as of unripe fruit; 4. Ceremonial impurity due to child-birth; 5. Newness; 6. Skin; |
| புனீதம் 1 | puṉītam n. See புனிதம். (W.) . |
| புனீதம் 2 | puṉītam n. See புனிதம். (யாழ். அக.) . |
| புனுகு | puṉuku n. cf. புழகு. [T. punugu K. puṇuku.] Civet; புழுகு. |
| புனுகுச்சட்டம் | puṉuku-c-caṭṭam n. <>புனுகு+. 1. Gland in the anal pouch of the civet-cat; புனுகு உற்பத்தியாகும் புனையின் உறுப்பு. 2. Unctuous substance of the civet-cat; |
| புனுகுசட்டம் | puṉuku-caṭṭam n. [T. punugucaṭṭamu.] See புனுகுச்சட்டம். . |
| புனுகுப்பூனை | puṉuku-p-pūṉai n. <>புனுகு+. Civet-cat, Viverra civetta; புனுகைத் தரும் புனைவகை. |
| புனுகுபூனை | puṉuku-pūṉai n. See புனுகுப்பூனை. . |
| புனை 1 - தல் | puṉai- 4 v. tr. [M. punayuga.] 1. To dress, put on, as clothes, garlands, jewels; தரித்தல். பூமாலை. புனைந்தேத்தி (தேவா, 727, 3). 2. To adorn, decorate; 3. To make ready; 4. To paint; 5. To plait, as an ola basket; 6. To string, bind; 7. To wear; 8. To put in order; 9. To use laudatory language, praise; 10. To exaggerate; 11. To compose, a poetry; 12. To make, form; |
