Word |
English & Tamil Meaning |
|---|---|
| பூங்கோரை | pū-ṅ-kōrai n. perh. id.+. 1. Edible sedge, Cyperus bulbous; கோரைவகை. (M. M. 228.) 2. Sedge with cubins, triquetrous at the base, Cyperus haspani; |
| பூங்கோலி | pū-ṅ-kōli n. <>id.+. A kind of paddy; நெல்வகை. (A.) |
| பூச்சக்கரம் | pū-c-cakkaram n. <>bhū-cakra. (W.) 1. The Earth; பூமண்டலம். 2. Equator; 3. A kind of whirling rocket; |
| பூச்சக்கரவாளக்குடை | pū-c-cakkara-vāḷa-k-kuṭai n. <>bhū+. Huge, white templeumbrella; கோயில்மூர்த்திகட்குப் பிடிக்கும் பெரிய வெண்குடை. மதிகொண்ட பூச்சக்கர வாளக்குடையின் (திருப்போ. சந்நிதி. அலங்கா.49). |
| பூச்சக்கரவாளம் | pū-c-cakkaravāḷam n. <>id.+. Range of mountains, supposed to encircle the earth; சக்கரவாளகிரி. (யாழ். அக.) |
| பூச்சக்கரன் | pū-c-cakkaraṉ n. <>id.+. King; அரசன். (W.) |
| பூச்சக்காய் | pūccakkāy n. See புவந்தி. (W.) . |
| பூச்சட்டை | pū-c-caṭṭai n. <>பூ 3+. 1. Garment of flowers put on a deity; தெய்வத்திற்குப் பூவினாற் செய்தணியும் அங்கி. Loc. 2. Garment embroidered with floral designs; 3. Ear of grains in blossom; |
| பூச்சர்க்கரைக்கிழங்கு | pū-c-carkkarai-k-kiḻaṅku n. <>பூ+. Panicled bindweed. See நிலப்பூசனி. . |
| பூச்சல்லா | pū-c-callā n. <>பூ+. Muslin embroidered with fine floral designs; பூத்தொழிலமைந்த மெல்லிய துகில்வகை. Loc. |
| பூச்சாண்டி | pūccāṇṭi n. <>பூச்சி+ஆண்டி. An imaginary being, invoked to frighten children; bugbear, hobgoblin; குழந்தைகளுக்குப் பயமுண்டாக்கும் உருவம். |
| பூச்சாண்டிகாட்டு - தல் | pūccāṇṭi-kāṭṭu- v. tr. <>பூச்சாண்டி+. To frighten with a bugbear, as children; பயங்காட்டுதல். |
| பூச்சாயை | pū-c-cāyai n. <>bhū+. Shadow of the earth; பூமிநிழல். |
| பூச்சாரம் | pū-c-cāram n. <>id.+sāra. 1. Fertility of the soil; நிலவளம். 2. Mineral substance; |
| பூச்சி | pūcci n. cf. bhūta. [T. būci M. pūcci.] 1. Insect, beetle, worm or any small reptile சிறுசெந்து. 2. Worms in the intestines; 3. Word meaning hobgoblin, used either to frighten or make children laugh; |
| பூச்சிக்கடி | pūcci-k-kaṭu n. <>பூச்சி+. 1. Insect-bite, sting of an insect; பூச்சியின் கடி. 2. Worms, parasites, epizoa; 3. An eruption of the skin, herpes; |
| பூச்சிக்கள்ளி | pūcci-k-kaḷḷi n. Cochineal fig, a cactus, m. sh., Nopalea coccinellifera; கள்ளிவகை. |
| பூச்சிக்கூடு | pūcci-k-kūṭu n. <>பூச்சி+. 1. Insect-nest; பூச்சிகள் வாழுங் கூடு. 2. Cage for insects; 3. Golden cylindrical ear-ring worn in the lobe of the ear; |
| பூச்சிக்கொட்டை | pūcci-k-koṭṭai n. <>id.+. Soapnut. See நெய்க்கொட்டான் . |
| பூச்சிகாட்டு - தல் | pūcci-kāṭṭu- v. tr. <>id.+. To frighten children by distortions of face or grimaces; பயங்காட்டுதல். பூச்சிக்காட்டித் திரியும் புத்தியென்ன (கொண்டல்விடு. 66). |
| பூச்சிகொல்லி | pūcci-kolli n. <>id.+. Sweet-flag, as insecticide; [பூச்சியைக் கொல்லுவது] வசம்பு. Loc. |
| பூச்சிதம் | pūccitam n. <>pūjyatā. Esteem; மதிப்பு. பூச்சிதந் தௌத்தியம் (விநயகபு. 69, 60). |
| பூச்சிப்பல் | pūcci-p-pal n. <>பூச்சி+. Carious tooth; சொத்தைப்பல். |
| பூச்சிபற - த்தல் | pūcci-paṟa- v. intr. <>id.+. To be blurred, as the eyes from glare, weakness or defective sight; பேரொளி பெருஞ் சோர்வு முதலிய காரணங்களாற் கண்கூசுதல். இக்கட்டிடத்தைப் பார்க்கும்போது கண் பூச்சிபறக்கின்றது. |
| பூச்சிபிடி - த்தல் | pūcci-piṭi- v. <>id.+. intr. 1. To be infested with worms; to become wormy; பண்டம் புழுவுண்டாகிக் கெட்டுப்போதல் அரிசி பூச்சிபிடித்துவிட்டது. -tr. 1. To coax; 2. To handle gingerly; |
| பூச்சிபூச்சியெனல் | pūcci-pūcci-y-eṉal n. <>id.+. Onom. expr. of (a) being unnecessarily afraid; அனாவசியமாய்ப் பயப்படற் குறிப்பு (b) frightening; |
