Word |
English & Tamil Meaning |
|---|---|
| பூசன்மயக்கு | pūcaṉ-mayakku n. <>பூசல்1+. 1. (Puṟap.) Theme describing the wailing of the kinsfolk on the death of a young warrior; ¢குலழுதற்பிள்ளை யிறக்கச் சுற்றத்தார் புலம்புதலைச் சொல்லும் புறத்துறை (பு. வெ. 10, சிறப். 6). 2. (Puṟap.) Theme describing the wailing of the subjects on the death of their king; |
| பூசன்மாற்று | pūcaṉ-māṟṟu n.<>id.+. (Puṟap.) Theme describing the success of the invaders seizing the cows, and defeating the forces that pursue to recover them; நிரைகவர்ந்த வெட்சியார் மீட்கவந்த கரந்தையாரைப் போரிலழித்தமை கூறும் புறத்துறை. (பு. வெ.1, 10.) |
| பூசனம் 1 | pūjaṉa n. <>pūcaṉam Solemn ritual, worship; devotion; ஆராதனை. நரிப்பரியைப் பூசனஞ் செய்து (திருவிளை. நரிபரி.120). |
| பூசனம் 2 | pūcaṉam n. Mould. See பூஞ்சணம், 1. Loc. . |
| பூசனி 1 | pūcaṉi. n. <>perh. பூ3+கணை 1. Pumpkin, Cucurbita pepo; பூசனிவகை. 2. Squash gourd. 3. True musk melon, cucurbita moschata; |
| பூசனி 2 | pūcaṉi n. See பூசனம்2. (யாழ். அக.) . |
| பூசனி 3 | pūcaṉi n. <>pūjani. Sparrow; அடைக்கலாங்குருவி. (யாழ். அக.) |
| பூசனிக்காய்க்கொத்துமணி | pūcaṉi-k-kāy-kottu-maṇi n. <>பூசனி1+காய்+. Necklace having pumpkin-shaped beads; கழுத்தணி வகை. Parva. |
| பூசனை | pucaṉai n. <>pūjanā. 1. Daily ritual or worship; நித்திய பூசை. சிறப்பொடு பூசனை செல்லாது (குறள், 18). 2. Honouring; |
| பூசனைபடை - த்தல் | pūcaṉai-paṭai- v. intr. <>பூசனை+. To honour; perform worship; வணக்கஞ்செய்தல். பார்படைத்தவன் படைக்கொரு பூசனைபடைத்தீர் (கம்பரா. பிரமா. 184). |
| பூசாக்கல் | pūcā-k-kal n. Kunker, limestone; சுக்கான்கல். (யாழ். அக.) |
| பூசாகாலம் | pūcā-k-kālam n. <>pūjā+. Time of worship; பூசைக்குரிய வேளை. |
| பூசாசாரி | pūcācari n. See பூசாரி. (யாழ். அக.) . |
| பூசாந்தப்படல் | pūcānta-p-paṭal n. See பூசாந்தப்படலம். (W.) . |
| பூசாந்தப்படலம் | pūcānta-p-paṭalam n. Resting place for capparam; சப்பரம் வைகும் இடம். (J.) |
| பூசாந்தரம் | pūcāntaram n. 1. A saree; சேலைவகை. Loc. 2. Lachrymal abscess; |
| பூசாந்திரக்கடுக்கன் | pūcāntira-k-kaṭuk-kans n. <>பூசாந்திரம்1+. A kind of ear-ring. See பஞ்சபூசாவந்தம். (W.) . |
| பூசாந்திரப்பட்டை | pūcāntira-p-paṭṭai n. <>பூசாந்திரம்2+. A bark used for medicinal purposes; ஒரு மருந்துப்பட்டை. (தைலவ .தைல. 59, உரை.) |
| பூசாந்திரம் 1 | pūcāntiram n. perh. puṣya+bandha. A kind of ear-ring. See பஞ்சபூசாவந்தம். |
| பூசாந்திரம் 2 | pūcāntiram n. perh. pūjā 1. Making much of; அருமை பண்ணுகை. (யாழ். அக.) 2. A tree; |
| பூசாபந்தம் | pūcā-pantam n. A kind of fancy verse; மிறைக்கவிவகை. (சங். அக.) |
| பூசாபலம் | pūcā-palam n. <>pūjā+phala. Result of one's devotion to God; தெய்வவழி பாட்டால் உண்டாம் பயன். மனத்தாற்புரி பூசாபலம் போலும் (பிரமோத்.5, 37). |
| பூசாரம்பம் | pūcārampam n. <>id.+ ā-rambha. Beginning of ceremonial worship; பூசனையின் தொடக்கம். |
| பூசாரி | pūcāri n. <>id.+ācārya. 1. Priest of a village deity; சிறு தெய்வத்துக்குச் கோயிலிற் பூசைபுரிவோன். 2. Exorcist; |
| பூசாலி | pucāli. n. See பூசாரி. (யாழ். அக.) . |
| பூசாவந்தம் | pūcāvantam n. perh. puṣya+bandha. A kind of ear-ring. See பஞ்சபூசாவந்தம். (W.) |
| பூசாவிதி | pūcā-viti n. <>pūja+. Rules for the performance of worship; பூசைக்கு உரியநியமங்கள். |
| பூசாவிருத்தி | pūcā-virutti n. <>id.+. Inam land granted for performing worship in a temple; கோயிற்பூசைக்குவிட்ட இறையிலி நிலம். (I. M. P. N. A. 240.) |
