Word |
English & Tamil Meaning |
|---|---|
| பூசைப்பெட்டி | pūcai-p-peṭṭi n. <>id.+. Case for the liṅkam used in private worship; ஆன்மார்த்த இலிங்கம் வைக்கும் பெட்டி. |
| பூசைபண்ணு - தல் | pūcai-paṇṇu- v. intr. <>id.+. 1. To perform worship; ஆராதனை செய்தல். 2. To take food; |
| பூசைபோடு - தல் | pūcai-pōtu- v. intr. <>id.+. 1. To offer pali to village deities; பலி கொடுத்தல். 2. See பூசைபண்ணு-, 2. (w.) 3. To flog soundly; |
| பூசைமணி | pūcai-maṇi. n. <>id.+. Handbell rung during the performance of pūjā; ஆராதனை செய்யும்போது அடிக்கும் கைம்மணி. |
| பூசைமிச்சம் | pūcai-miccam n. <>id.+. Unexpended balance in the daily allowances of a pagoda; கோயில் தினசரிக்கட்டளையில் செலவாகாத மிகுதி. (W. G.) |
| பூசைமுகம் | pūcai-mukam n. <>id.+. The place where divine worship is performed; பூசை நடக்கும் இடம். (யாழ். அக.) |
| பூசைமேடை | pūcai-māṭai n. <>id.+. Platform in which pūjā is performed; பூசை செய்வதற்காக ஏற்பட்ட உயர்ந்த இடம். |
| பூசைவீடு | pūcai-vīṭu n. <>id.+ Room set apart for divine worship; பூசை செய்வதற்காக ஒதுக்கப்பட்ட அறை. |
| பூசைவேளை | pūcai-vēḻai n. <>id.+. 1. See பூசாகாலம். . 2. The time when Brahmans take their meals; |
| பூஞ்சக்கல் | pūca-k-kal n. <>பூஞ்சல்+. A kind of blue stone; ஒருவகை நீலக்கல். (யாழ். அக.) |
| பூஞ்சக்காளம் | pūca-k-kāḷam n. See பூஞ்சணம். Loc. . |
| பூஞ்சணம் | pūcaṇam n. cf. பூஞ்சு1. 1. Mould, mildew; மரம் முதலியவற்றின் மேல் ஈரநைப்பினால் உண்டாம் பாசி. 2. Cobweb; |
| பூஞ்சணவன் | pūcaṇavaṉ n. See பூஞ்சணம். (W.) . |
| பூஞ்சணற்பு | pū-ā-caṇar-pu n. prob. பூ3+ சணல்+பூ3. A luxuriant species of Indian hemp; கஞ்சாச்செடிவகை. (W.) |
| பூஞ்சல் | pūcal n. cf. பூஞ்சு1. 1. Brownish colour; மங்கனிறம். (J.) 2. Dimness of sight; 3. Unhealthyman; |
| பூஞ்சலாடு - தல் | pūṉcal-āṭu- v. intr.<>பூஞ்சல்+. To be dim in the eyes; கண்ணொளிமங்குதல். (யாழ். அக.) |
| பூஞ்சற்கண் | pūṉcaṟ-kaṇ n. <>id.+. (W.) 1. Bleared eyes; பிளைக்கண். 2. Dim eyes; 3. Small, sunken eyes; |
| பூஞ்சனிறம் | pūcaṉiṟam n. <>id.+ நிறம். Dusky or dim colour; மங்கினி நிறம். (W.) |
| பூஞ்சாட்டி | pū--cāṭṭi n. perh. பூ4+ சாட்டி2. Land that has lost the effect of manure by cultivation சாகுபடியினால் எருவினுரம் இழந்த நிலம். (யாழ். அக.) |
| பூஞ்சாட்டித்தரிசு | pūcāṭṭi-t-taricu n. <>பூஞ்சாட்டி+. Uncultivated land after it became pūcāṭṭi; பூஞ்சாட்டியாகிச் சாகுபடி செய்யப்படாத நிலம். (J.) |
| பூஞ்சாட்டிநிலம் | pūcāṭṭi-nilam n. <>id.+. See பூஞ்சாட்டி. (J.) . |
| பூஞ்சாடுதல் | pūcāṭutal n. <>பூஞ்சு1+ ஆடு-. Dancing of specks before the eyes; கண்ணின்முன் பூச்சியாடுவதுபோலிருக்கை. (யாழ். அக.) |
| பூஞ்சாந்து | pūcāntu n. See பூசாந்திரப்பட்டை. (தைலவ. தைல. 59.) . |
| பூஞ்சாயம் | pū--cāyam n. <>பூ3+. Deep, ruddy colour; அழுத்தமான சிவப்பு நிறம். (W.) |
| பூஞ்சாளம் | pūcāḷam n. <>T. budzu See பூஞ்சணம். . |
| பூஞ்சான் | pūcāṉ n. A kind of grass. புல்வகை (யாழ். அக.) |
| பூஞ்சி | pūci n. <>(யாழ். அக.) 1. Dust; தூசி 2. Dimness; |
| பூஞ்சிகை | pū--cikai n. <>பூ3+. Lock of hair adorned with flowers; பூவையணிந்த மயிர் முடி வண்டு மேய்ந்து வரிமுரல் பூஞ்சிகை. (சிவக.2581). |
| பூஞ்சிட்டு | pū--ciṭṭu n. <>id.+. A small bird; குருவிவகை. (W.) |
| பூஞ்சிறகு | pū--ciṟaku n. <>id.+. Down of young birds; பறவைக்குஞ்சின் சிறகு. |
| பூஞ்சீப்பு | pū--cīppu n. <>id.+. Small plantains at the top of a fruit-bearing stalk; வாழைக்குலையின் நுனிச் சீப்பு. (W.) |
| பூஞ்சு 1 | pūcu n. <>T. būdzu. 1. See பூஞ்சணம். (யாழ். அக.) . 2. See பூஞ்சல், 1. (W.) |
