Word |
English & Tamil Meaning |
|---|---|
| பூணி - த்தல் | pūṇi- 11 v. prob. id. tr. 1. To cause to appear; to bring into existence; தோற்றுவித்தல். விசும்பிற் புத்தப் புதுமதியம் பூணித்தான் (மாறனலங்.224, 531). 2. To allude to, refer to; To make a vow; |
| பூணிப்பு | pūṇippu n. <>பூணி-. 1. Vow; பிரதிஞ்ஞை. பஃறலை பூழியிற் புரட்டலென் பூணிப்பாம் (கம்பரா. பிணிவீ. 63). 2. Decision, resolve; |
| பூணில் | pūṇil n. cf. பூணி. The seven sisters, Malacocercus terricolor; குருவிவகை. |
| பூணூநூல் | pūṇu-nūl n. See பூணூல், 1. மைவந்த நிறக்கேச வடப்பூணு நூலம் (பெரியபு. மானக்கஞ்சா. 23). . |
| பூணூல் | pūṇūl n. <>பூண்-+. 1. Sacred thread of three strands, worn by tuvicar; துவிசர் தரிக்கும் முப்புரி நூல். (திவா.) முத்தப் பூணூலத்தகு புனைகலம் (சிலப். 23, 96). 2. See பூணூற்கலியாணம். |
| பூணூற்கலியாணம் | puṇūṟ-kaliyāṇam n. <>பூணூல்+. Investiture of the sacred thread. See உபநயனம், 1. |
| பூணை | pūṇai n. perh. பூணி. Pastoral tract; முல்லை நிலம். (யாழ். அக.) |
| பூத்தட்டுதல் | pū-t-taṭṭutal n. perh. பூ3+. Reducing melted wax to flakes by pouring it into water in the process of whitening it; வெண்ணீறமாதற்பொருட்டு மெழுகையுருக்கித் தண்ணீரிலுற்றித் தகடாக்குகை. (J.) |
| பூத்தருபுணர்ச்சி | pū-t-taru-puṇarcci n. <>பூ3+. (Akap.) Union of a lover and his beloved on the occasion of his getting flowers for her from a tree out of her reach; தனக்கு எட்டாத மரத்தினின்றும் தான் விரும்பிய பூவைப் பறித்துதவிய தலைவனது நன்றிபாராட்டித் தலைவி அவனைக்கூடுங் குட்டம் (தொல். பொ.114, பக். 548.) |
| பூத்தாளி | pūttāḷi n. perh. id.+. 1. White catamaran tree, in. tr., Givotia rottleriformis; மரவகை. 2. False tragacanth. |
| பூத்தானம் 1 | pū-tāṉam n. <>id.+தனம். Making much of, keeping too nicely, using very delicately; அருமைபாராட்டுகை. (W.) |
| பூத்தானம் 2 | pūttāṉam n. prob. புதினம். Novelty; நூதனம். Loc. . |
| பூத்தானம்பிடி - த்தல் | pūttāṉam-piṭi- v. intr. <>பூத்தானம்1+. To fear; பயப்படுதல். Loc. |
| பூத்திரம் | pūttiram n. prob. bhū-dhra. Mountain; மலை. (யாழ். அக.) |
| பூத்திரி | pū-tiri n. <>பூ3+. A kind of firework or rocket that drops flower-like sparks; பூப்போலத் தீப்பொறிகள் விழும் வாணவகை. (W.) |
| பூத்துப்பூத்தெனல் | pūttu-p-pūtteṉal n. (W.) Expr. of (a) hard breathing, as from running; ஒடுதல் முதலியவற்றால் உண்டாம் முச்சிழைத்தற் குறிப்பு: (b) sudden swelling of the body; |
| பூத்துப்போ - தல் | pūttu-p-pō- v. intr. <>பூ-+. 1. To gather ashes, as coals; நெருப்பில் நீறுபடர்தல் பூத்துபோன நெருப்பு. 2. To be lack-lustrous, as eyesight; |
| பூத்தொடு - த்தல் | pū-t-toṭu- v. intr. <>பூ3+. 1. To string flowers into a garland; பூ மாலை கட்டுதல். 2. To put up things very loosely so as to make an appearance of bulkiness; 3. To fabricate, make a false story; |
| பூதக்கண்ணாடி | pūta-k-kaṇṇāṭi n. <>பூதம்1¢+. Microscope, as a magnifier; சிறியதைப் பெரிதாகக் காட்டும் கண்ணாடிவகை. Mod. |
| பூதக்கலம் | pūta-k-kalam n. prob. புதுமை+. Serving of food by the bride to the bridegroom for the first time; மணப்பெண் மனமகனுக்கு முதன்முறை உணவு பரிமாறுகை. (W.) |
| பூதக்கலவி | pūta-k-kalavi n. perh. பொது+. Intercourse with a woman chosen by lot on a festive occasion, prevalent among certain castes, not now in vogue; சில சாதியாருள் விசேஷத்தினத்தொருநாள் சீட்டு விழுந்த பெண்ணோடு கூடும் கூட்டம். பூதக்கலவியிலும் புளிச்சக்கண்ணியா? |
| பூதக்கால் | pūta-k-kāl n. <>பூதம்1+. Elephantiasis; யானைக்கால். |
| பூதக்குயம் | pūta-k-kuyam n. prob. id.+. Air-root of a banyan; ஆலம்விழுது. (தைலவ. தைலவ.) |
| பூதகணம் | pūta-kaṇam n. <>bhūta-gaṇa. Host of goblins; பூதங்களின் கூட்டம். |
| பூதகரப்பன்பட்டை | pūta-karappaṉ-paṭṭai n. See பூதகரப்பான்பட்டை. (யாழ். அக.) . |
