Word |
English & Tamil Meaning |
|---|---|
| பூதவிருள் | pūta-v-irul n. <>bhūta+. 1. Darkness surrounding the universe; அண்ட கோளத்தைச் சூழ்ந்திருக்கும் புறவிருள். (யாழ். அக.) 2. Intense darkness; |
| பூதவீடு | pūta-vīṭu n. <>id.+. Body, as constituted of the five elements; பஞ்ச பூதங்களாலாகிய தேகம். (சங். அக.) |
| பூதவுப்பு | pūta-v-uppu n. <>id.+. A kind of salt; சத்தியுப்பு. (சங். அக.) |
| பூதவுரு | pūta-v-uru n. <>id.+. (Buddh.) A variety of uruvam consisting of pirutivi, appu, tēyu and vāyn; பிருதுவி. அப்பு, தேயு, வாயு ஆகிய நான்குங் கொண்ட உருவப்பகுதி. (மணி.30, 190, கீழ்க்குறிப்பு.) |
| பூதவேசி | pūtavēci n. cf. பூததேசி. Fiveleaved chaste tree. See வெண்ணொச்சி (மலை.) |
| பூதவேள்வி | pūta-vēḷvi n. <>bhūta+. Giving food to animals as enjoined in the šāstrās, one of ai-vakai-vāḷvi, q.v.; ஐவகை வேள்விகளுள் விதிப்படி பிராணிகட்கு பலியுணவு ஈகை. (பிங்.) |
| பூதன் 1 | pūtaṉ n. <>bhūta. 1. The soul; ஆன்மா. (பிங்.) 2. Son; 3. See பூதத்தாழ்வார். பொய்கை பூதன் பேயார் (அஷ்டப். நூற்றெட். காப்பு). |
| பூதன் 2 | pūtaṉ n. See பூதனம். (மலை.) . |
| பூதன் 3 | pūtaṉ n. <>bhūtā. The 14th titi of the dark fortnight; கிருஷ்ணபட்சத்துப் பதினான்காந் திதி. (யாழ். அக.) |
| பூதனம் | pūtaṉam n. <>pūtana. Chebulic myrobalan. See கடுக்காய். (சங்., அக.) |
| பூதனன் | pū-taṉaṉ n. <>bhū-dhana. King; அரசன். (சங். அக.) |
| பூதனாசரீரம் | pūtaṉā-carīram n. perh. பூதம்1+. The gross or physical body; தூலசரீரம். பூதனாசரீரம் போனால் (சி. சி. 2, 36). |
| பூதனை | pūtaṉai n. <>pūtanā. 1. A demoness who assumed the form of a woman for killing Krṣṇa by suckling him with poisoned milk; தன் நச்சுழுலைப்பாலூட்டிக் கண்ணபிரானைக் கொல்லவந்த ஒரரக்கி நள்ளிருள் வந்த பூதனை மாள (திவ்.பெரியதி, 10, 9, 1.) 2. A disease; |
| பூதாக்கலம் | pūtā-k-kalam n. See பூதக்கலம். (J.) . |
| பூதாக்கலம்பணி - தல் | pūtākkalampaṇi- v. intr. <>பூதாக்கலம்+. To eat in the same vessel for the first time, as a bridegroom and his bride; மணவாளனும் மணவாட்டியும் முதன் முறை ஒருகலத்திற் புசித்தல். (யாழ். அக.) |
| பூதாகாரம் | pūtākāram n. <>bhūta+ākāra. That which is huge or monstrous; மிகப்பருத்தது. Colloq. |
| பூதாங்குசம் | pūtāṅkucam n. <>id.+aṅkuša. A soft woolly plant. See பேய்மருட்டி. (மலை.) |
| பூதாச்சிறையன் | pūtācciṟaiyaṉ n. A kind of medicated camphor; பச்சைக்கர்ப்பூரவகை. (பதார்த்த. 1078.) |
| பூதாஞ்சனம் | pūtācaṉam n. <>bhūta+. Magical ointment for discovering whether a person is possessed or not, one of three acaṉam, q.v.; பேய்க்கோளைக் கண்டுபிடிக்க உதவும் மை. (W.) |
| பூதாண்டம் | pūtāṅṭam n. <>id.+. Universe, cosmos; பிரகிருதி யண்டம். ஏதமில் பூதாண்டத்தெல்லையினீறே (திருமந். 2748). |
| பூதாத்திரி | pūtāttiri n. <>bhū-dhātrī. A small plant.. See கீழாநெல்லி. (மலை.) |
| பூதாத்துமன் | pūtāttumaṉ n. <>pūtātman. One who has entirely abandoned worldly desires, ascetic; துறவி. (யாழ். அக.) |
| பூதாத்துமா | pūtāttumā n. <>bhūtātmā. 1. Any living being; சீவாத்துமா. 2. Body; 3. Instrumental cause; 4. šiva; 5. Brahmā; |
| பூதாதி | pūtāti n. <>bhūta+ādi. 1. See பூதாதியகங்காரம். (அஷ்டாதச. தத்துவ. அசித். 22.) . 2. The universe, as being created from the elements; |
| பூதாதிகம் | pūtātikam n. <>bhūtādika. See பூதாதியங்காரம். (அஷ்டப்பிரக. 83.) . |
| பூதாதியகங்காரம் | pūtāti-y-akaṅkāram n. <>bhūtādi+. Akaṅkāra in which the tamōguṇa predominates, one of akaṅkāra-t-tirayam, q.v.; அகங்காரத்திரயத்தொன்றான தமோகுணவகங்காரம். |
| பூதாரம் | pū-tāram n. <>bhū-dāra. Hog, as tearing up the earth; [பூமியைப் பிளப்பது] பன்றி. (உரி. நி.) |
