Word |
English & Tamil Meaning |
|---|---|
| பூமகண்மைந்தர் | pūmakaṇ-maintar n. <>பூமகள்2+. Vēḷāḷas, husbandmen, as sons of the Mother Earth; வேளாளர். (W.) |
| பூமகள் 1 | pū-makaḷ n. <>பூ3+. Lakṣmī, as flower-born; இலக்குமி. பொய்தீர் பூமகள் (சீவக. 2566.) |
| பூமகள் 2 | pū-makaḷ n. <>பூ4+. Goddess of Earth; பூதேவி. பூமகட்கு மணிமுடியா மதுரை (திருவாலவா. 39, 1). |
| பூமகன் 1 | pū-makaṉ n. <>பூ3+. Brahmā; பிரமன். பூமகள் புகழ்வானவர் போற்றுதற் காமகன் (திவ். நாய்ச். 4, 3). |
| பூமகன் 2 | pū-makaṉ n. <>பூ3+. Mars, as son of the Earth; [பூமியின் புதல்வன்] செவ்வாய் (திவா.) |
| பூமகா | pūmakā n. cf. பூகரம். A plant growing in wet places. See கையாந்தகரை (சங். அக.) |
| பூமங்கை | pū-maṅkai n. <>பூ3+. Lakshmī; இலக்குமி. பூமங்கை கேள்வன் பொலிவு (திவ். இயற். 3, 6.) |
| பூமடந்தை 1 | pu-maṭantai n. <>id.+. See பூமகள்1, பூமடந்தை யானையாளை (பாரத. அருச்சுனன் றீர். 40). . |
| பூமடந்தை 2 | pu-maṭantai n. <>பூ4+. See பூமகள்2. (கம்பரா. பிராட்டிகளங். 6.) . |
| பூமடல் | pū-maṭal n. <>பூ3+. Sheath or spathe, as of the plantain; வாழை முதலியவற்றின் குலையிலுள்ள மடல். |
| பூமடி - தல் | pū-maṭi v. intr. <>id.+. To become wiry-edged, as a razor; கத்திக்கூர்மழுங்குதல். (W.) |
| பூமடி | pū-maṭi n. <>id.+. Soft udder of a cow; மெல்லியமடி. (யாழ். அக.) |
| பூமடை | pū-maṭai n. <>id.+. Offering of flowers; பூப்பலி. (W.) |
| பூமண்டபம் | pū-maṇṭapam n. <>id.+. Place where flowers are strung, as in a temple; பூமாலை தொடுக்கும் இடம். (கோயிலொ.14.) |
| பூமண்டலம் | pū-maṇṭalam n. <>bhū+. Earth, worrld; பூலோகம். |
| பூமத்தியரேகை | pū-mattiya-rēkai n. <>id.+. Equator; துருவங்களுக்குச் சமதூ£த்திற் பூகோளமத்தியைச் சுற்றிச் செல்வதாகக் கருதப்படுங்கோடு. Mod. |
| பூமத்தை | pūmattai n. A plant; செடிவகை. (யாழ். அக.) |
| பூமரம் | pū-maram n. <>பூ3+. 1. Flowering tree; பூக்கும் மரம். (அக. நி.) 2. Lac tree. 3. Sign, indication; |
| பூமருது | pū-marutu n. <>id.+. 1. Flowering murdah, 1. tr., Terminalia paniculata; மருதமரவகை. கிளிவளர் பூமருதணிந்து (சீவக. 64). 2. Indian bloodwood, m. tr., Lagerstroemia flos-reginae; |
| பூமலி | pūmali n. Brain; மூளை. (சங். அக.) |
| பூமலேக்கினம் | pūmalēkkiṉam n. (மலை.) 1. Smooth volkameria. See சங்கங்குப்பீ 2. Peacock's crest; |
| பூமலேசனம் | pūmalēcaṉam n. See பூமலேக்கினம். (சங். அக.) . |
| பூமழை | pū-maḻai n. <>பூ3+. Shower of flowers; புஷ்பவர்ஷம். பூமழை முனைவனுக்கு (சீவக. 1943). |
| பூமன் 1 | pū-maṉ n. <>id.+. 1. Brahām; பிரமன். பூமன் சிரங்கண்டி யந்தகன் கோயில் (தனிப்பா.) 2. Kāma; |
| பூமன் 2 | pūmaṉ n. <>பூ4+. Sovereign, as protecting the earth; அரசன். சிதம்பரபூமா (தனிப்பா, 183, 6). |
| பூமன் 3 | pūmaṉ n. <>bhauma. Mars செவ்வாய். (சூடா.) |
| பூமஸ்நானம் | pūma-snāṉam n. See பௌமஸ்நானம். (சங். அக.) . |
| பூமாஞ்சா | pū-mācā n. Clerodendron, m.sh., Clerodendron infortunatum; செடிவகை. Madr. |
| பூமாது 1 | pū-mātu n. <>பூ3+. (சங். அக.) 1. Goddess of wealth; இலக்குமி. 2. Goddess of Learning; |
| பூமாது 2 | pū-mātu n. <>பூ4+. Goddess of Earth; பூமிதேவி பூமாதி னிதயகமலத்து வைகும் பொலிவானும் (குமர.பிர. திருவாரூர்நான். 19). |
| பூமாதுளை | pū-mātuḷai n. <>பூ3+. Double-flowered pomegranate, as bearing only flowers. See மாதுளை. |
| பூமாதேவி | pūmā-tēvi n. <>bhū+. See பூமாது2. ஆகாசவாணி பூமாதேவி அறிய. . |
| பூமாயி | pū-māyi n. An evil spirit believed to cause diseases among children; ஒரு பாலாரிஷ்டதேவதை. (சங். அக.) |
| பூமாரி | pū-māri n. <>பூ3+. 1. See பூமழை. பூமாரி சிந்தி (பு. வெ. 10, 8). . 2. Margosa. |
