Word |
English & Tamil Meaning |
|---|---|
| பூவிலி | pū-v-ili n. <>பூ+. One who is birthless; பிறப்பற்றவ-ன்-ள். பூவிலி பூவிதழ் (திருமந்.1409.) |
| பூவிலை | pū-vilai n. <>பூ+. Day's hire of prostitute; விலைமாதர் பெறும் அற்றைப்பரிசம். பூவிலை யீத்தவன் பொன்றின னென்று (மணி. 24, 19) |
| பூவிழுதல் | pū-viḻutal n. <>id.+. 1. Removal of roughness, as from the edge of a blade; சொரசொரப்பு நீங்குகை. (W.) 2. Formation of cataract in the eye; |
| பூவிளம் | pūviḷam n. A mineral poison; கற்பாஷாணம். (மூ. அ.) |
| பூவிளைகை | pū-viḷaikai n. <>பூ+. Fruitfulness, as of a crop; produce of a season; போகம்விளைகை. |
| பூவிற்கொம்பு | pūviṟ-kompu n. <>id.+. See பூவின்கிழத்தி. பூவிற்கொம்பும் புகழும்படி (மேருமந். 47). . |
| பூவின்கிழத்தி | pūviṉ-kiḻatti n. <>id.+. Lakṣmī, as seated on a lotus; இலக்குமி. (பிங்.) சேராளே பூவின்கிழத்தி புலந்து (நாலடி, 252). |
| பூவினன் | pūviṉaṉ n. <>id. Brahmā; பிரமன். பூவினன் குடிலையம் பொருட்கு மாலுற (கந்தபு. கடவுள்வா. 14). |
| பூவு | pūvu n. 1. See பூவம், 1. . 2. A species of roudeletia wort. See கதம்பம், 3. Kāṭar. |
| பூவுக்கிடு - தல் | pūvukkiṭu- v. intr. <>பூ+. To make a present to one's beloved; காதலன் காதலிக்குப் பரிசங்கொடுத்தல். பூவுக்கிட்டோம் போலும் (ஈடு, 8, 2, 6). |
| பூவுயிர் - த்தல் | pū-v-uyir- v. intr. <>id.+. To blossom; மலர்தல். பூவுயிர்த்தன்ன . . . உண்கண் (கலித். 142). |
| பூவுலகம் | pū-v-ulakam n. <>பூ+. See பூவுலகு. . |
| பூவுலகு | pū-v-ulaku n. <>id.+. The earth; பூமி. படர் மேதினியானது பூவுல கெங்கணுமே (கம்பரா. அதிகா. 75). |
| பூவெடு - த்தல் | pū-v-eṭu- v. intr. <>பூ+. 1. To gather flowers for a temple; கோயிற் பூசைக்கு மலரெடுத்தல். (W.) 2. To remove cataract from the eve. |
| பூவெடுத்தகண் | pū-v-eṭutta-kaṇ n. <>id.+. Anomalous state of refraction caused by the absence of the crystalline lens, as after an operation for cataract, aphakia; பூவுரித்த கண். |
| பூவெண்ணெய் | pū-v-eṇṇey n. 1. Adul-oil plant, m. cl., Sarcostigma kleinii; கொடிவகை. (L.) 2. A kind of medicinal oil; 3. A scented oil; |
| பூவெள்ளை | pū-veḷḷai n. <>பூ+. Mercantile term for 1/8 rupee; அரைக்கால் ரூபாய்க்கு வழங்குங் குமூஉக்குறி. Cant. |
| பூவேர் | pū-vēr n. <>பூ+. See பூநாகம். (தைலவ. தைல. 73.) . |
| பூவேலை | pū-vēlai n. <>பூ+. Floral design; பூப்போன்ற சித்திரவேலை. |
| பூவேளைக்காரர் | pū-vēḷai-k-kārar n. <>id.+. Devoted servants who have taken a vow to stab themselves to death if their king is not supplied with flowers and garlands at the specified times; அரசர்க்கு உரிய காலங்களிற் பூவிடாவிடில் தம்மைத் தாமே குத்திக்கொண்டு மடியும் வீரர் தொகுதியினர். பூவேளைக்காரரைப் போலே . . . முடிவாரொருவர் இறே (ஈடு, 5, 1, 9). |
| பூவை | pūvai n. perh. பூ-. 1. Oblong cordate-leaved bilberry. See காயா, 2. பூவைப்புதுமலரொக்கு நிறம் (நான்மணி. 1). . 2. Bush myna; 3. Koel; 4. Lady, woman; |
| பூவைசியர் | pū-vaiciyar n. <>பூ+. Vēḷāḷas, as cultivators; வேளாளர். (பிங்.) |
| பூவைநிலை | pūvai-nilai n. <>பூவை+. 1. (Puṟap.) Theme in which the bilberry flower is praised as resembling the colour of viṣṇu; காயாம்பூவை மாயவன் நிறத்தோடு உவமித்துப் புகழும் புறத்துறை. (பு. வெ. 9, 4.) 2. (Puṟap.) Theme in which a king is likened to a god; |
| பூவைவண்ணன் | pūvai-vaṇṇaṉ n. <>id. Viṣṇu as having the colour of bilberry flower; [காயாம்பூப்போன்ற நிறத்தையுடையவன்] திருமால். (பிங்.) (திவ். பெரியதி. 2, 2, 8.) |
| பூவொல்லி | pū-v-olli n. <>பூ+. A spoilt coconut with the kernel empty; உள்ளீடற்ற தேங்காய் வகை. (யாழ். அக.) |
| பூவோடு | pūvōṭu n. A mineral poison; தொட்டிப்பாஷாணம். (யாழ். அக.) |
