Word |
English & Tamil Meaning |
|---|---|
| பூழ் 1 | pūḻ n. 1. Quail; காடைவகை. அளித்து நீ பண்ணிய பூழெல்லாமின்னும் விளித்து (கலித். 95). (பிங்.) 2. Jungle fowl; |
| பூழ் 2 | pūḻ n. cf. புழை. Hole; துவாரம். (இலக். அக.) |
| பூழ்க்கரம் | pūḻkkaram n. <>puṣkara. Arabian costum; வெண்கோஷ்டம். (மலை.) |
| பூழ்க்கை | pūḻ-k-kai n. <>பூழ்+. Elephant, as having tubular trunk; யானை. பூழ்க்கை முகன் மனுவை நனியெண்ணின் (விநாயகபு. 14, 9). |
| பூழ்தி 1 | pūḻti n. <>pūti. 1. Meat; இறைச்சி. 2. Stench of putrid flesh; |
| பூழ்தி 2 | pūḻti n. cf. bhūti. 1. Dust; புழுதி. கேழல் பூழ்தி கிளைக்க (தேவா. 1152, 5). 2. Cruelty, oppression; |
| பூழளம் | pūḻaḷam n. Anchovy, See நெய்த்தோலி. (M. M. 710.) . |
| பூழான் | pūḻāṉ n. <>பூழ். 1. Indian partridge, Ortygoins ponticerianus; கவுதாரி. (திவா.) 2. Jungle-fowl; |
| பூழி | pūḻi n. prob. bhūti. [M. pūḻi.] 1. Powder; தூள். வானம்பூழி படக்கருக்கி (கல்லா. 25, 28). 2. Dust; 3. Sacred ashes; 4. See பூழிநாடு. (நன். 273.) 5. Soft mire or mud; 6. Bubble in muddy water; |
| பூழிநாடு | pūḻi-nāṭu n. <>பூழி+. The region where a vulgar dialect of Tamil was spoken, one of 12 koṭun-tamiḻ-nāṭu, q.v.; கொடுந்தமிழ்நாடு பன்னிரண்டனுள் ஒன்று. |
| பூழியபலம் | pūḻiya-palam n. <>பூழி+பலம். Pumpkin; பூசணி. (மலை.) |
| பூழியன் | pūḻiyaṉ n. <>id. 1. Chēra king, as lord of pūḻi-nāṭu; [பூழிநாட்டுக்குத் தலைவன்] சேரன். (திவா.) 2. Pāṇdya king; |
| பூழியான் | pūḻiyāṉ n. <>id. 1. šiva, as wearing sacred ashes; [விபூதியணிந்தவன்] சிவபிரான். பூழியான் பூணே (தமிழ்நா. 78). 2. One who lies in the dust; |
| பூழில் | pūḻil n. 1. Eaglewood. See அகில், 1. சாந்தம் பூழிலொடு பொங்குநுரை சுமந்து (பதிற்றுப் 87, 2). . 2. Earth; |
| பூழை | pūḻai n. <>பூழ். 1. Small door within a larger one, sally port, wicket gate; சிறுவாயில். பூழைத்தலை நுழைந்து (தேவா. 845, 1). 2. Mountain pass; 3. Crevice, opening; |
| பூள் | pūḷ n. <>id. Membrum virile; ஆண்குறி. |
| பூளம் | pūḷam n. Portia tree. See பூவரசு. (மலை.) . |
| பூளை 1 | pūḷai n. [M. pula.] 1. Red silk cotton. See இலவு. பூளை மெல்லணைமேல் (சீவக. 1628). . 2. Wool plant, aerua; 3. Javanese wool plant, m. sh., Aerua javanica; 4. Flower worn as a symbol of victory; |
| பூளை 2 | pūḷai n. Corr. of பீளை. கண்களில் வெண்பூளை கரப்ப (தாயு. எந்நாட். மாதரைப். 5). . |
| பூளைசூடி | pūḷai-cūṭi n. <>பூளை+. šiva, as wearing pūḷai; [பூளையணிந்தவன்] சிவபிரான். பூளை சூடி தன்னகையினி லெயில் பொடித்தனபோல் (கம்பரா. அகலிகை. 39). |
| பூளைப்பஞ்சு | pūḷai-p-pacu n. <>id.+. Silk-cotton; பஞ்சுவகை. (W.) |
| பூளைப்பூ | pūḷai-p-pū n. <>id.+ See பூளைப்பஞ்சு. பூளைப்பூவாம் பிறவி (பெரியபு. திருநாளைப்போ. 22). . |
| பூற்காரம் | pūṟkāram n. <>phūt-kāra. Sobbing; விம்முகை. Loc. |
| பூற்சாதம் | pūṟcātam n. A plant. See பொடுதலை. (நாமதீப. 323.) . |
| பூறு | pūṟu n. <>பீறு. Anus; குதம். Loc. |
| பூன்சம்பா | pūṉ-campā n. A Variety of paddy, in Trichinopoly district; நெல்வகை. |
| பூன்றம் | pūṉṟam n. <>pūrṇa. Fulness; perfection; பூர்ணம். பூன்றமா மனத்தனான நெறி (ஞான. வைரா. 29). |
| பூன்றாகுதி | pūṉṟākuti n. See பூரணாகுதி. பூன்றாகுதி சேர்மக முடித்து (செவ்வந்திப்பு. சூரவாதித். 142). . |
| பூனதம் | pūṉatam n. <>jāmbūnada. Gold; பொன். குலிசக் குழுச்சுலவு பூனதக்கிம்புரி (திருப்போ. சந். பிள்ளைத். சப்பா. 5). |
