Word |
English & Tamil Meaning |
|---|---|
| பெரியபிள்ளை | periya-piḷḷai n. <>id.+. Aged man of a village or a family, held in respect; ஊர் அல்லது குடும்பத்திற்குத் தலைமையாக மதிக்கப்பட்டவன். Loc. |
| பெரியபுராணம் | periya-purāṇam n. <>id.+. A hagiologic poem containing the lives of the sixty-three nāyaṉmār, by Cēkkiḻār; நாயன்மார் அறுபத்துமூவர் சரிதங்களைப்பற்றிச் சேக்கிழாரால் பாடப்பட்ட நூல். |
| பெரியபுலு | periya-pulu n. <>id.+. Cant for hundred, as a large ten; நூறு. (J.) |
| பெரியபுனுகுப்பூனை | periya-puṉuku-p-pūṉai n. <>id.+. Large civet cat, Viverra zebettia; புனுகுப்பூனைவகை. |
| பெரியபூளை | periya-pūḷai n. <>id.+. Large poolay, m. sh., Aerua javanica; செடிவகை. (M. M. 702.) |
| பெரியபெயர் | periya-peyar n. <>id.+. Great fame, celebrity; பெரும்புகழ். (W.) |
| பெரியபெருமாள் | periya-perumāḷ n. <>id.+. 1. God at šriraṅgam; திருவரங்கத்துத் திருமால் பெரிய பெருமாளரங்க ராடிரூசல். (அஷ்டப் ஊசல். 1). 2. Paramount sovereign; emperor; |
| பெரியபொருள் | periya-poruḷ n. <>id.+. Brahma, as the supreme Being; பரப்பிரமம். ஞானவானந்தமாம் பெரிய பொருளைப் பணிகுவாம் (தாயு. திருவருள். பரசிவ. 2). |
| பெரியம்மா | periyammā n. <>id.+அம்மா. See பெரியம்மாள். . |
| பெரியம்மாள் | periyammāḷ n. <>id.+அம்மாள். 1. Senior paternal uncle's wife; தகப்பனுக்கு மூத்தசகோதரன் மனைவி. 2. Mother's elder sister; 3. The elderly lady or mistress of a house; |
| பெரியம்மான் | periyammāṉ n. <>id.+அம்மான். 1. Eldest of mother's brothers; தாயுடன் பிறந்த சகோதரருள் மூத்தவன். (W.) 2. Father's elder sister's husband; |
| பெரியம்மான்பச்சரிசி | periyammāṉ-paccarici n. Pill-bearing spurge, small herb, Euphorbia pilulifera; செடிவகை. (M. M. 27.) |
| பெரியம்மை | periyammai n. <>பெரிய+அம்மை. 1. See பெரியம்மாள். Colloq. . 2. Smallpox, personified as a deity; 3. Goddess of Misfortune; |
| பெரியமரம் | periya-maram n. <>id.+. A large catamaran; கடலோடிகளது பெரிய கட்டுமரம். Loc. |
| பெரியமனசு | periya-maṉacu n. <>id.+. See பெரியமனம். Loc. . |
| பெரியமனம் | periya-maṉam n. <>id.+. 1. Noble mind, magnanimity; உதாரமனம். (W.) 2. Favour; |
| பெரியமனிதன் | periya-maṉitaṉ n. <>id.+. See பெரியமனுஷன். . |
| பெரியமனுஷன் | periya-maṉuṣaṉ n. <>id.+manuṣya. 1. Great man; சிறந்தோன். (W.) 2. Wealthy, influential man; 3. Man of position, official or otherwise; 4. Aged man; 5. Headman of a caste, as of washermen; |
| பெரியமனுஷி | periya-maṉuṣi n. <>id.+. 1. Aged woman; வயது முதிர்ந்தவள். 2. Influential woman; woman of position; 3. See பெரியவள், 2. |
| பெரியமனுஷியா - தல் | periya-manuṣi-yā- v. intr. <>id.+. To attain puberty, as a girl; இருதுமதியாதல். Loc. |
| பெரியமாவிலிங்கம் | periya-māviliṅkam n. <>id.+. A species of garlic-pear, s. tr., Crataeva religiosa-nurvala; மாவிலிங்கவகை. (L.) |
| பெரியமுப்பழம் | periya-muppaḻam n. <>id.+. An ancient treatise on poetics, not now extant; பாட்டியன்மரபு கூறும் ஒரு பழைய நூல். (யாப். வி. பக். 516.) |
| பெரியமூக்கிரட்டை | periya-mūkkiraṭṭai n. <>id.+. Pointed-leaved hogweed, s. cl., Boerhavia repanda; மூக்குத்திக்கொடிவகை. (L.) |
| பெரியமூளை | periya-mūḷai n. <>id.+. 1. Cerebrum, fore-brain; மூளையின் மேற்பாகம் (இங். வை. 27). 2. Person of great intellect; |
| பெரியமேளம் | periya-mēḷam n. <>id.+. 1. Music of big instruments, like clarionet, pipe, drum and cymbals, dist. fr. ciṉṉa-mēḷam; நாகசுரம் தவுல் முதலிய பெரிய வாத்தியங்கள் கொண்டு வாசிக்கப்படும் மேளம். 2. Anything done on a large scale; |
